காரியத் தடைகளால் நின்றுபோன செயல்கள்!

 





நாளிதழ்




8.1.2022

சென்னை -4

 

அன்புள்ள நண்பர் முருகுவிற்கு, வணக்கம். நலமா?

நேற்று புக்டே.இன் எனும் தளத்திற்கு சென்றேன். பாரதி புத்தகாலயத்தின் தளம். அதில் படிப்பதற்கான நிறைய விஷயங்கள் இருந்தன. ஆகார் படேலின் நேர்முகம் ஒன்றைப் படித்தேன். கரண் தாப்பர் நேர்காணல் செய்திருந்தார்.’’ தீர்மானமான ஆற்றல் மிக்க என்பதோடு, விளைவுகளைப் பற்றி அறியாமல் செயல்படக்கூடியவர்’’ என ஆகார் படேல் பயன்படுத்திய சொற்கள் வினோதமாக பட்டது. அவர் மோடியைப் பற்றிய கூறியவைதான் அவை. கரண்தாப்பர், அவர் கூறிய சொற்களுக்கு என்ன பொருள் என கேட்டு கேள்விகளை அமைத்திருந்தார். நல்ல நேர்காணல்.

போக்குவரத்து நிறுத்தப்படவில்லை என்றால் வெளியே எங்காவது போகவேண்டும். ‘’மாணவர் இதழை 50 இதழ்களாக வெளியிடலாம்’’ என எடிட்டர் கூறினார். ஆனால் ஒரு இதழ் வெளிவருவதே கடினமாகிவிட்ட சூழ்நிலை. தேவையான விஷயங்களை எழுதி கணினியில் ஏற்றிவிட்டு எங்காவது செல்ல முடிந்தால் திட்டமிட்டு செல்லவேண்டும். காரியத் தடைகளால் அனைத்தும் அப்படியே நிற்கின்றன.

இணையத்தில் தமிழ் டிஜிட்டல் லைப்ரரி வலைத்தளம் சென்று பார்த்தேன். நிறைய நூல்களை வைத்திருக்கிறார்கள். என்னுடைய வேலை சார்ந்தும் நிறைய நூல்கள் உள்ளன. அவற்றை தரவிறக்கிப் படிக்கவேண்டும்.

துப்பறியும் சாம்பு – நூறு பக்கங்களைத் தாண்டிவிட்டேன். தேவன், சாம்பு பாத்திரத்தை சிறப்பான விவரிப்புகளோடு உருவாக்கியுள்ளார்.

அன்பரசு

 https://pixabay.com/photos/girl-read-reading-newspaper-791231/


கருத்துகள்