நீருக்கு மாற்றாக பழச்சாறுகளை குடிக்கலாமா?

 



தண்ணீர் குடிப்பது சலிப்பை ஏற்படுத்துகிறதா?

நீரைப் பொறுத்தவரை ஆற்றுத்தண்ணீர், ஆழ்குழாய் தண்ணீர் என வேறுபட்ட சுவை கொண்ட நீரை குடித்திருப்பீர்கள். பன்னாட்டு நிறுவனங்கள் விற்கும் அக்வாஃபினா, கைஃண்ட்லி ஆகியவற்றை குடித்தாலும் அதன் பயன் ஒன்றுதான். நீங்கள் உடலில் நீர்ச்சத்து குறையாமல் மயங்கி விழாமல் இருப்பீர்கள். உடலின் வளர்சிதைமாற்ற செயலுக்கு நீர் அவசியம்.

இதில் உள்ள கணக்கு பற்றி அறிந்திருப்பீர்கள். தினசரி எந்தளவு நீரை குடிப்பது? எட்டு கிளாஸ் குடியுங்கள், மூன்று அல்லது ஐந்து லிட்டர் குடியுங்கள் என்று பலர் வாய்க்கு வந்ததைக் கூறுவார்கள். உண்மையில் உடலுக்கு எந்தளவு நீர் தேவை என்பதை உடல்தான் தீர்மானிக்கும். தேவைப்படும்போது நீர் குடிக்கலாம்.. தவறில்லை. சில மருத்துவ இதழ்கள் சினிமா பிரபலங்களின் டயட் முறைகளை எழுதி மக்களை நிர்பந்தப்படுத்துகிறார்கள். உண்மையில் எது உண்மை, எதைப் பின்பற்றுவது?

உடலுக்கு நீர்த்தேவை குறைவாக இருந்தால் தலைவலிக்கும்.,அடுத்து, செரிமான பிரச்னை வரும். உடலின் ரத்த அழுத்தம் குறைந்து  கண்கள் இருண்டு கீழே விழுந்துவிடுவீர்கள். மேற்சொன்னது உடனே நடக்கும் விளைவுகள். நீண்டகால அடிப்படையில் சிறுநீர் கறுப்பு நிறமாக மாறும். தோல் வெடித்து வெளிறிப்போகும். மூட்டுகளின் இயக்கம் குறையும்.

இப்படி பயப்படுத்தினால் நிறையப் பேர் நீர் குடிப்பார்கள் என்று கூறமுடியாது. ஏனெனில் நீருக்கு தேயிலை போல நிறம், மணம், சுவை என ஏதுமில்லை. எனவே பலருக்கும் இது சலிப்பூட்ட, தண்ணீர் போல  நினைத்து ஆரஞ்சு ஜூஸ், லிச்சி ஜூஸ், டீ, காபி, கோக், மாம்பழச்சாறு என சகட்டுமேனிக்கு குடிக்கிறார்கள். தோராயமாக நீரென்றால் ஒருவர் இரண்டு லிட்டர்களை குடிக்கலாம் என ஆய்வாளர்கள் கூறுகிறார்கள்.

நீரே குடிக்கவேண்டும் என்பதில்லை. ஆனால் கார்பன் பானங்கள், டீ, காபி ஆகியவை அதிக காலம் குடித்து வந்தால் அதிலுள்ள சர்க்கரை உடலைப் பாதிக்கும்.. நீரின் நன்மைகளையே அதாவது, உடலில் நீர்ச்சத்து குறைவதை பிற பானங்களும் தீர்க்கின்றன. ,ஆனால் அதை நேரடியாக செய்யமுடிகிறதா என்றால் இல்லை. ஒருவர் ஒருநாளுக்கு ஐந்து கப் காபி, பத்து கப் டீக்களை குடிக்கலாம். அதற்கு மேல் செல்லக்கூடாது. அப்படி சென்றால் அதற்கு அடிமையாகும் வாய்ப்பு அதிகம். கூடுதலாக இதயத்துடிப்பு அதிகரித்தல், தூக்கமின்மை, வயிற்றுப்போக்கு, பதற்றம், தூக்கம் வருவதற்கு தடைகள் என ஏற்படும். சிலர் டீ கப்களை அரைலிட்டருக்கு வாங்கி வைத்திருப்பார்கள். அவர்கள் இந்த வரம்பிற்குள் வரமாட்டார்கள்.

அதிகம் நீர் குடிப்பது ஹைப்போனாட்ரிமா என்ற பிரச்னையை ஏற்படுத்துகிறது. நினைவிழப்பு, மயக்கம் ஆகியவை இதன் அறிகுறிகள். பொதுவாக அதிகம் நீர்குடிப்பது என்ற பிரச்னை ஏற்பட வாய்ப்பு குறைவு. உடற்பயிற்சிசெய்பவர்கள், சூடான சூழலில் இருப்பவர்கள் தவிர பிறர் ஒன்றரை லிட்டர் நீர் குடித்தாலே போதுமானது. இந்தியச் சூழலில் இலவச கழிவறை என்பது யாரும் உள்ளே போக முடியாத தரத்தில் இருக்கும். பெரும்பாலும் முதியவர்கள், கர்ப்பிணிகள் சிறுநீர் கழிக்கவேண்டி வரும் என்பதற்காகவே நீரை அதிகம் குடிப்பதில்லை. இது அவர்களின் உடல்நிலையை பாதிக்கிறது. மேற்சொன்ன பிரிவினருக்கு சிறுநீரைக் கட்டுப்படுத்தும் அமைப்பு பலவீனமாக இருக்கும் என்பதை அறிந்துகொள்ளவேண்டும்.

நீரை நேரடியாக குடிக்க கடினமாக இருந்தால், வெள்ளரிக்காய், வேறு ஏதாவது பழங்களை நீரில் அரிந்து போட்டு அதை குளிர்பதனப்பெட்டியில் வைத்துக் குடிக்கலாம். சர்க்கரை கொண்ட பழச்சாறுகளை, கார்பன் கரைக்கப்பட்ட பானங்களை குடிப்பது நல்லதல்ல. அவை நீருக்கு முழுமையான மாற்று அல்ல.

லிஸ்சி செர்னிக் (Lizzie cernik)

தி கார்டியன்

 https://pixabay.com/photos/woman-drinking-coca-cola-bikini-842141/


கருத்துகள்