மேக்ஸிம் டாப் 100 பெண்கள் - சில பெண்களைப் பார்ப்போம். ...

 









மேக்ஸிம் டாப் 100 பெண்கள்

மேக்ஸிம் நூறு பெண்களை பட்டியலிட்டு அவர்கள் திரைப்படம், மாடலிங் துறையில் சாதித்தவர்கள் என கூறியுள்ளது. அனைத்து பெண்களிலும் உள்ள ஒற்றுமை, அவர்களின் கட்டழகு என வெளிப்படையாகவே இதழ் கூறிவிட்டதால். புகைப்படத்தில் காட்டும் தெறமையை மட்டும் பாருங்கள். அவர்கள் பற்றிய சிறு அறிமுகத்தை நாங்கள் எழுதுகிறோம்.

மார்கட் ராபி


மார்கட் ராபி

சூசைட் ஸ்குவாட் படத்தில் வந்த வேடிக்கையான ஹார்லி குயின்தான், மார்கட்டின் சிறந்த வெகுஜன அடையாளம். கடந்த ஆண்டு பாபிலோன் படத்தில் நெல்லி லாராய் பாத்திரத்தில் நடித்திருந்தார். படத்திற்கு விருது கிடைக்கவில்லை. ஆனாலும் என்ன நடிப்பு, வசீகரம் என இரண்டிலும் சளைத்தவர் கிடையாது ராபி. நடிப்பென்றால் அவர் நடித்த மார்டின் ஸ்கார்சியின் தி வோல்ஃப் ஆஃப் வால்ஸ்ட்ரீட் படத்தைப் பார்க்கலாம். தற்போது பார்பி படத்தில் ரியான் கோஸ்லிங் ஜோடியாக நடித்திருக்கிறார்.

சமரா வேவிங்


சமரா வேவிங்

மேட்ரிக்ஸ் படத்தில் நடித்த ஹியூகோ வேவிங்கின் உறவினர்.உறவெல்லாம் தாண்டி சினிமா என்று வரும்போது தீவிரமாக இயங்கும் ஆள்.  ரெடி ஆர் நாட் என்ற திரில்லர் படத்தில் நடித்து பார்வையாளர்களை பிரமிக்க வைத்தார். பாபிலோன் படத்தில் சமராவை பார்க்க முடியவில்லை என்பவர்கள் கவலைப்படவேண்டாம். ஸ்க்ரீம் 6 படத்தில் நடிக்கிறார். பார்த்து பயந்து மகிழுங்கள்.

அனா டி அர்மாஸ்


அனா டி அர்மாஸ்

செக்ஸ் காட்சிகள், முத்த காட்சிகள் என எதைப்பற்றியும் கவலைப்படாமல் நடிக்கும் நடிகை. இவர் படத்தில் இருந்தாலே அதுபோல காட்சிகளை ஏகத்துக்கும் யோசித்து படம் பிடித்துவிடுகிறார்கள். பிளாண்டே படத்தில் நடித்த அசாதாரண நடிகை. இப்போது ஜான் விக் ஸ்பின்ஆஃப் படமான பலேரினாவில் நடிக்கவிருக்கிறார். அண்மையில் கிரேமேன் என்ற சண்டைப் படத்தில் நடித்திருந்தார். இதில், அமெரிக்க நடிகர் கிறிஸ் ஈவன்ஸ் நாயகன். 

சப்ரினா கார்பென்டர்


சப்ரினா கார்பென்டர்

நடிகை மட்டுமல்ல தனியிசை பாடகியும் கூட. 2014இல் ‘கெனாட் பிளேம எ கேர்ள் ஃபார் டிரையிங்’ என்ற பெயரில் இசைத்தொகுப்பு வெளியிட்டார். அண்மையில் இமெயில்ஸ் ஐ கெனாட் சென்ட் என்ற பெயரில் இசைத்தொகுப்பை அறிவித்து வெளியிட்டார். பாடல்கள் வந்தால் வாழ்த்துவோம். எமர்ஜென்சி படத்தில் மேடி என்ற பாத்திரத்தில் நடித்த நடிகை என்று பலரும் நினைவில் வைத்திருப்போம். தனது இருபத்து நான்கு வயதில் கேர்ள் மீட்ஸ் வேர்ல்ட் அண்ட் க்ளவுட்ஸ் என்ற படத்தில் நடித்தார். அடுத்து நெட்பிளிக்ஸில் வெளிவரவிருக்கும் அலைஸ் இன் வொன்டர்லேண்ட், இன் டு தி டீப் ப்ளூ ஆகிய படங்களில் நடித்திருக்கிறார்.





சேடி சின்க்

ஸ்ட்ரேஞ்சர் திங்க்ஸ் படத்தில் நடித்தவர். ஆனால், அந்த படத்தில் சேடியை கண்டுபிடிக்கமுடியவில்லை என்று புகார் கொடுப்பவர்கள் அமெரிக்கன் ஒடிசி படத்தைப் பார்க்கலாம். அதில் சூசன் பல்லார்ட் என்ற பாத்திரத்தில் நடித்திருக்கிறார். வணிகப் படங்கள் மட்டுமல்ல கலைப்படங்களிலும் திறமையான நடிகைதான் என்பதை தி வேல் என்ற பிராண்டன் ஃபிரேசர் படம் நிரூபித்தது. இந்த படத்தில் உடல் பருமனால் அவதிப்படும் பேராசிரியரின் மகளாக நடித்திருந்தார்.


இசபெல் மெரிட்

டோரா அண்ட் தி லாஸ்ட் சிட்டி ஆஃப் கோல்ட் படத்தில் நடித்த நடிகை. இப்போது நன்றாக வளர்ந்துவிட்டார். ஸ்பைடர்மேன் ஸ்பின்ஆஃப் படமான மேடம் வெப் படத்தில் டகோடா ஜான்சனுடன் சேர்ந்து நடிக்கிறார். நெட்பிளிக்ஸில் வெளியாகியுள்ள ஸ்வீட் கேர்ள் படத்தில் ஜாசன் மோமோவின் மகளாக நடித்திருப்பது  இசபெல்தான்.

ஜோடி காமர்

தற்போது தி பைக்ரைடர்ஸ் என்ற படத்தில் ஆஸ்டின் பட்லர், டாம் ஹார்டி ஆகியோரோடு சேர்ந்து நடித்து வருகிறார். எம்மி விருது, கோல்டன் குளோப் விருதுகளைப் பெற்ற நடிகை. கில்லிங் ஈவ், தி லாஸ்ட் டூயல் ஆகிய படங்களில் காமரை ரசித்துப் பார்க்கலாம்.

ஜோய் கிங்


ஜோய் கிங்

கான்ஜூரிங் படத்தில் குழந்தையாக நடித்து மயிர்க்கூச்செறிய வைத்த நடிகை. இப்போது எ ஃபேமிலி அஃபேர், அக்லிஸ் ஆகிய படங்களில் நடித்து வருகிறார். புல்லட் ட்ரெயின் படதிதல் செக்ஸியான கொலைகாரியாக வந்து பார்வையாளர்களை வசப்படுத்தினார்.



ஒலிவியா ரோட்ரிகோ


ஒலிவியா ரோட்ரிகோ


2021ஆம்ஆ ண்டு இவர் வெளியிட்ட சோர் ஆல்பத்தில் உள்ள ட்ரைவர் லைசென்ஸ் என்ற பாடல் மகத்தான வெற்றி பெற்றது. வசீகரமான கவரும் குரல் மட்டுமல்ல பொழுதுபோக்கு கலைஞராக நடிக்கவும் செய்கிறார். ஹைஸ்கூல் மியூசிக்கல் – தி மியூசிக்கல் தி சீரிஸ் ஆகிய படத்தில் நடித்து வருகிறார்.

லில்லி ரோஸ் டெப்


லில்லி ரோஸ் டெப்

அம்மா பெயர் வனிஸா பாரடிஸ், அப்பா பெயர் ஜானி டெப். பிறகு கேமராவுக்கு முன்னே வராமல் எப்படி? மாடலிங்கில் சாதித்தவர் இப்போது ஹெச்பிஓ சேனலில் தி ஐடல் என்ற நிகழ்ச்சியில் பாடகர் வீக் எண்ட்டுடன் நடிக்கிறார். 2014ஆம் ஆண்டு டஸ்க் என்ற படத்தில் கெவின் ஸ்மித்தோடு நடித்தார்.

சிட்னி ஸ்வீனி

இருமுறை எம்மி விருதுக்கு பரிந்துரைக்கப்பட்ட நடிகை. யுப்போரியாவில் ஜென்டையாவுக்கு எதிரான கேசி ஹோவர்ட் என்ற பாத்திரத்தில் நடித்தார். மேடம் வெப் படத்தில் டகோடா ஜான்சனுக்கு எதிரான பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். தி வொயிட் லோட்டஸ், தி ஹேண்ட்மெய்ட்ஸ் டேல் ஆகிய படங்கள் இவரது நடிப்பில் முக்கியமானவை.

ஜென்னா ஆர்டேகா


ஜென்னா ஆர்டேகா

நெட்பிளிக்ஸில் வெளியான வெட்னஸ்டே தொடர் பலருக்கும் பிடித்தமானது. அதில், ஜென்னா ஆடும் நடனம் இணையத்தில் வைரலமாக பரவியது. ஸ்க்ரீம் -6 படத்தில் நடிக்கிறார். அடுத்து ஃபைன்ஸ்கைண்ட் என்ற படத்தில் பென் ஃபாஸ்டர், டாமி லீ ஜோன்ஸ் உடன் நடிக்கவிருக்கிறார்.

காத்தரின் மேநமாரா

தி ஃபிளாஷில் காத்தரினைப் பார்த்திருப்பீர்கள். ஷாடோஹன்டர்ஸ் படத்தில் நடித்ததற்காக பீப்பிள்ஸ் சாய்ஸ் விருது பெற்றவர். வாக்கர் இன்டிபென்டன்ஸ் படத்தில் விதவை பாத்திரத்தில் வலம் வந்து பழிவாங்க முயல்பவராக நடித்து பார்வையாளர்களை கவர்ந்து இழுத்தார்.

ஜோ சல்டனா

அடுத்து வரும் ஸ்டார்ட்ரெக் படத்தில் உகுரா பாத்திரத்தில் நடிக்கவிருக்கிறார். கார்டியன் ஆஃப் கேலக்ஸியில் க்ரீன் பாத்திரத்தில் நடித்தவர். முக்கியமான பாத்திரம் என்றால் அவதார் படத்தில் ஜேக் சல்லியின் காதலியாக வரும் பாத்திரத்தில் நடித்தவர் என்று கூறலாம். அந்த பாத்திரத்தின் பெயர் ப்ளூ.

எமிலி ரடாஜ்கோவ்ஸ்கி

ராபின் திக்ஸின் பிளர்டு லைன்ஸ் வீடியோவில் நடித்து கவனம் ஈர்த்தார். இவர் தனது பாட்காஸ்ட் ஹை லோ வித் எம்ரடா, மை பாடி என்ற நூல் மூலம் புகழ்பெற்றார்.

பார்பரா பால்வின்

மேக்ஸிம் பத்திரிகையின் அட்டைப்படத்தில் இடம்பெற்ற மாடல். விக்டோரியா சீக்ரெட் நிறுவனத்தின் ஆஸ்தான மாடல். இப்போதும் ஜிம்மி சூ, அலோ யோகா, அர்மானி பியூட்டி ஆகிய நிறுவனத்திற்கான  மாடலாக தொடர்கிறார். ஹங்கேரி நாட்டைச் சேர்ந்த மாடல்.

ரோஸி ஹன்டிங்டன் ஒயிட்லி

ரோஸ் இன்க் என சொந்த நிறுவனத்தை தொடங்கி அதன் நிறுவனர், கிரியேட்டிவ் தலைவராக  இயங்கி வருகிறார். முன்னமே மேக்ஸிம் 100 பட்டியலில் இடம்பிடித்த அழகி. பதினாறு வயதில் மாடலிங் செய்து சாதித்தவர்.

பெல்லா ஹடிட்

பார்த்தாலே தெரிந்துவிடும் அழகின் இளவரசி என. 2019ஆம் ஆண்டு உலகின் மிக அழகான பெண் என கூறினார்கள். நான்கு ஆண்டுகள் கழித்தும் அழகு மெருகு கூடியிருக்கிறது. குறையவில்லை. மாடலிங்கில் அதிகம் சம்பாதிக்கும் பெண்மணி.

கேண்டிஸ் ஸ்வான்போயல்

தென்னாப்பிரிக்காவைச் சேர்ந்த மாடல், தொழிலதிபர். டிராபிக் ஆப் சி என்ற பெயரில் பெண்களுக்கான உள்ளாடைகளை தயாரித்து விற்கிறார். 2014ஆம் ஆண்டு முதலாக மேக்ஸிம் 100 பட்டியலில் இடம்பிடித்து வருகிறார்.

மேக்ஸிம் இதழ்


கருத்துகள்

பிரபலமான இடுகைகள்