இடுகைகள்

உடல்பருமன் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

உணவுப் பொருட்களில் எச்சரிக்கை லேபிள்! - அமெரிக்கா தயங்குவது ஏன்?

படம்
          உணவுகளில் எச்சரிக்கை லேபிள் அமெரிக்காவில் உணவுப்பொருட்களில் எச்சரிக்கை லேபிள்களை ஒட்டி விற்க எஃப்டிஏ அமைப்பு யோசித்து வருகிறது. அமெரிக்கர்கள் ஏராளமான குப்பை உணவுகளை வகைதொகையின்றி உண்பதால் உடல்நலம் கெட்டு வருகிறது. இதை சரி செய்ய அமெரிக்க அரசு யோசித்து வருகிறது. இந்த எச்சரிக்கை லேபிளில் கொழுப்பு, சர்க்கரை ஆகியவற்றைப் பற்றிய விவரங்கள் இருக்கும். எப்போதும் போல அமெரிக்க நிறுவனங்கள், லேபிள் போடச்சொன்னால் குப்பை உணவுகளின் விலைகளை ஏற்றுவோம் என்று கூறியுள்ளன. ஆனால் நிறுவனத்தின் லாபம் தாண்டி உடல்நலம் பற்றி யோசித்தால் அமெரிக்காவில் உள்ள சிறார்கள், இருபது சதவீதம் பேர் உடல் பருமனால் பாதிக்கப்பட்டுள்ளனர். இதை 1970ஆம் ஆண்டுடன் ஒப்பிட்டு கணக்குப் போட்டு கூறுகிறார்கள். உணவு தரக்கட்டுப்பாட்டு அமைப்பான எஃப்டிஏ, லேபிள்களில் பச்சை சிவப்பு மஞ்சள் ஆகிய நிறங்களை பயன்படுத்தி உடலுக்கு நேரும் ஆபத்தை கூறுவது அல்லது உப்பு, சர்க்கரை, கொழுப்பு அதிகமாக உள்ளது என நேரடியாக கூறுவது என இரண்டு லேபிள் திட்டங்களை யோசித்து வருகிறது. சிலி நாட்டில் உணவுப்பொருட்களில் உள்ள பகுதிப்பொருட்கள் சார்ந...

உடல் பருமன் ஆபத்து, ரத்தத்தில் கலக்கும் ஆல்கஹால் விளைவுகள் - மிஸ்டர் ரோனி

படம்
            அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி உடல் பருமன் என்னென்ன ஆபத்துகளை ஏற்படுத்துகிறது? பொதுவாக, குழந்தைகள் கொழு கொழுவெ இருப்பதை ரசிக்கிறார்கள். ஆனால் வயதுக்கு மீறிய உடலின் செழுமை எப்போதுமே ஆபத்தானது. உயர் ரத்த அழுத்தம், டைசிலிபிடெபியா, இரண்டாம் நிலை நீரிழிவுநோய், இதயநோய்கள், வாதம், ஆஸ்டியோ ஆர்த்தரைட்டிஸ், மூச்சு விடுவது தொடர்பான நோய்கள், புற்றுநோய் ஆகியவை உடல்பருமனால் உண்டாகின்றன. ஒருவரின் ரத்தத்தில் அதிகரிக்கு்ம ஆல்கஹால் அவரின் உடல், இயல்பில் மாற்றம் ஏற்படுத்துமா? ரத்தத்தில் அதிகரிக்கும் ஆல்ஹால் என்பது ஒருவரின் உடல் எடையை அடிப்படையாக கொண்டது. மதுபானம், மதுபானம் சார்ந்த பல்வேறு பானங்களும் இந்தளவில்தான் உடலைப் பாதிக்கிறது. ஆல்கஹால் என்பது எத்தில் ஆல்கஹால் என்று புரிந்துகொள்ளவேண்டும். இதன் தூய்மையான தன்மையைப் பொறுத்து ஒருவரின் இயல்பு மாறும். இப்போது அதன் அளவு ஏற்படும் விளைவுகளைப் பார்ப்போம். 0.02-03 சதவீதம் அதிகரித்தால் ஒருவரால் சரியாக யோசிக்க முடியாது, உடலின் ஒத்திசைவு மாறும். 0.05 சதவீதம் அதிகரித்தால், மயக்கம் உருவாகும் 0.08-0.10 என்ற அளவை அமெரிக்க மா...

டைம் 100 - நீரிழிவு, உடல் பருமன் தொடர்பாக ஆராய்ச்சி செய்த ஆராய்ச்சியாளர்கள்

படம்
              ஸ்வெட்லானா மோஜ்சோவ், ஜோயல் ஹேபனர், டான் டிரக்கர் ஆராய்ச்சியாளர்கள் svetlana mojsov joel habener dan drucker நீரிழிவு நோய் வந்தவர்களுக்கு நோயைக் கட்டுப்படுத்துவது முக்கியமான விஷயம் என்றால், அந்நோய் காரணமாக அதிகரிக்கும் உடல் எடை இன்னொரு பெரிய பிரச்னை. எனவே, உடல் எடையைக் கட்டுப்படுத்துவது பற்றி அமெரிக்கா, ஐரோப்பா என உலகமெல்லாம் ஏராளமான ஆராய்ச்சிகள் நடைபெற்று வருகின்றன. நீரிழிவு நோய்க்கும் அதோடு தொடர்புடைய இன்சுலின், இன்கிரிடின்ஸ் ஆகியவற்றைப் பற்றியும் ஆராய்ச்சி செய்யப்பட்டது. இதன் வழியாக குளுகாகோன்ஸ் என்ற ஹார்மோனுக்கும் உடல் எடைக்கும் தொடர்பிருப்பது கண்டறியப்பட்டது. கோபன்ஹேகன் பல்கலைக்கழகத்தில் குடல் அறுவை சிகிச்சையொன்று நடைபெற்றது. அதில், குளுகாகோன், இன்சுலின் அளவை அதிகரிப்பதை ஆராய்ச்சியாளர் ஜென்ஸ் ஜூல் ஹோஸ்ட் அடையாளம் கண்டார். இந்த நேரத்தில் மசாசுசெட்ஸ் பொது மருத்துவமனையைச் சேர்ந்த டான் டிரக்கர், ஜோயல் ஹேபனர் ஆகியோர் ஜிஎல்பி -1 எனும் குளுகாகோன் வடிவத்தைக் கண்டறிந்தனர். டிரக்கர், ஜிஎல்பி-1 வடிவத்தை துல்லியமாக கண்டறிந்து இன்சுலினை அதிகரிப்பத...

அல்ட்ரா புரோசசஸ்ட் ஃபுட்ஸ்! - பதப்படுத்தப்பட்ட பொருட்களில் என்ன இருக்கிறது?

படம்
  நுட்பமாக பதப்படுத்தப்பட்ட பொருட்கள் குழந்தை உணவுகள், கார்பன் பானங்கள், நொறுக்குத்தீனிகள், பிஸ்க், பிரட், காலை உணவாக சாப்பிடும் உணவுகள், இனிப்புகள், உடனடியாக சூடு செய்து உண்ணும் உணவுகள்   இந்த வகைமையில் வரும். பழச்சாறு சார்ந்த பொருட்கள், மால்டோடெக்ஸ்ட்ரின், டெக்ஸ்ட்ரோஸ், கோல்டன் சிரப், சோயா புரதம், நீரேற்றம் செய்யப்பட்ட எண்ணெய்கள், குளூட்டேன், மோனோசோடியம் குளுட்டமேட், செயற்கை நிறமிகள், அடர்த்திக்காக சேர்க்கும் வேதிப்பொருட்கள், கெடாமல் வைத்திருக்கவும், செரிமானத்திற்காகவும் சேர்க்கப்படும் பொருட்களும் இதில் உண்டு. நுட்பமாக பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு, அடிமைப்படுத்தும் விதமான பொருட்கள் உள்ளன. இதன் விளைவாக ஒருவருக்கு உடல் பருமன், இரண்டாம் நிலை நீரிழிவு நோய், இதயதசை தொடர்பான நோய்கள் ஏற்படுகின்றன. இந்த உணவுகளில் புரதம், ஜிங்க்,, மெக்னீசியம், வைட்டமின் ஏ, சி,டி, இ, பி12 ஆகியவை குறைவாக இருக்கும். வயிற்றில் உள்ள செரிமானத்திற்கு உதவும் பாக்டீரியாக்களை இந்த உணவு பாதிக்கிறது. காமில் அஹ்மது கார்டியன் வீக்லி படம் - பின்டிரெஸ்ட்

பதப்படுத்தப்பட உணவுகளுக்கு ஸ்டார் ரேட்டிங் சிஸ்டம்!

படம்
  இந்தியாவில் உள்ள இந்துஸ்தான் யுனிலீவர், பிரிட்டானியா, அமுல், ஐடிசி, பார்லே ஆகிய நிறுவனங்கள், அவர்களின் உணவுப்பொருட்கள் நன்மையா தீமையான என எளிதாக தெரிந்துகொள்ளமுடியும். இதற்காக இந்திய உணவு கட்டுப்பாட்டு அமைப்பு எஃப் எஸ்எஸ்ஏஐ, புதிய விதிமுறையை உருவாக்கியுள்ளது.  இதன்படி, பதப்படுத்தப்பட்ட உணவுப்பொருட்களின் பாக்கெட்டின் மீது ஸ்டார் ரேட்டிங் இருக்கும். இது உணவில் உள்ள சர்க்கரை, கொழுப்பு, உப்பு ஆகியவற்றைப் பொறுத்து அமையும்.  அகமதாபாத் ஐஐடி, இதற்கான சோதனை முறையை மக்கள் 20 ஆயிரம் பேரிடம் சோதித்தது. ஸ்டார் ரேட்டிங் முறையை ஹெல்த் ஸ்டார் ரேட்டிங் - ஹெச்எஸ்ஆர் என்று குறிப்பிடுகிறார்கள். மொத்தம் 5 முறைகளை உருவாக்கி அதில் ஒன்றை உணவு கட்டுப்பாட்டு அமைப்பு தேர்ந்தெடுத்தது. அதுதான் ஸ்டார் ரேட்டிங் முறை.  தற்போது, உணவுப்பொருட்களில் கலோரி அட்டவணை இடம்பெற்றுள்ளது. இதில், நூறு கிராம் அளவுக்கான சர்க்கரை, உப்பு, கொழுப்பு ஆகியவை அச்சிடப்பட்டுள்ளன. எதிர்காலத்தில் இதோடு ஸ்டார் ரேட்டிங் முறையும் அமலாகும். இப்போதைக்கு இந்த முறையை தானாக முன்வந்து நிறுவனங்கள் இதற்கு விண்ணப்பிக்கலாம் என்று கூறிய...

உணவு, வாக்கு, உடல்பருமன், தூக்கம் என அனைத்தையும் தீர்மானிப்பது மரபணுக்கள்தான்! - பழக்கங்களின் தொடர்ச்சி

படம்
              இயற்கையான முறையும் , சூழலின் தாக்கமும் இந்த இரண்டு வார்த்தைகளும் இப்போது அனைத்து இடங்களிலும் புழங்கி வருகிறது . இன்று கிறிஸ்பிஆர் முறையில் மரபணுவைக் கூட வெட்டி ஒட்டி பிறப்புக்குறைபாடுகளை மாற்றிக்கொள்ளமுடியும் . இதற்கான ஆராய்ச்சிகள் தடுப்பூசிகள் தயாரிப்பிலும் கூட பயன்படுகின்றன . பொதுவாக ஒருவரின் குணம் , ஆளுமை , சாப்பிடும் பழக்கம் , திறன் ஆகியவற்றிலும் கூட அவரின் பரம்பரை , சூழல் என இரண்டின் தாக்கமும் உண்டு . இதனை பலரும் மாற்றி மாற்றி விவாதம் செய்வதுண்டு . அதாவது , அவரின் பரம்பரை அப்படி அதனால் திறமையுடன் இருக்கிறார் . மற்றொன்று , பரம்பரையாக இல்லையென்றாலும் சூழலின் அழுத்தத்தில் ஒருவர் தனது திறன்களை வளர்த்துக்கொள்வது . இது இன்றுவரை முடிவில்லாத விவாதமாக செல்கிறது . ஒருவரின் ஆரோக்கியம் , உணவின் முறை என அனைத்துமே மரபணுக்களின் தாக்கம் பெற்றுள்ளது . குற்றவியல் துறையில் பல்வேறு குற்றவாளிகளைத்தான் இந்தவகையில் ஆராய்ந்தனர் . அடிக்கடி குற்றம் செய்பவர்களின் மனநிலையையும் அவர்களின் குடும்ப பாரம்பரியத்தையும் ஆராய்ந்து பல்வேறு உண்மைகளை ...

இயற்கையும் பழக்கத்தை தடுக்கும்! - இயற்கை பேரிடர்கள் மனிதர்களின் பழக்கவழக்கங்களை மாற்றுகின்றன

படம்
              இயற்கையும் பழக்கத்தை தடுக்கும் ! தினசரி செய்யும் உடற்பயிற்சி , வாசிப்பு , வேலை என பல்வேறு விஷயங்களை தடாலடியாக மாற்றுவதில் இயற்கைக்கு பெரும் பங்கு உண்டு . வெயில் , மழை , புயல் என வரும்போது ஒருவரின் தினசரி வாழ்க்கை பட்டியல் தடாலடியாக மாறிவிட வாய்ப்புள்ளது . அமெரிக்காவின் சாண்டி புயல் ஏற்பட்டபோது அங்கு வாழும் மக்களின் தினசரி வாழ்க்கை பெரும் மாறுதலை சந்தித்தது . அவர்களின் உடற்பயிற்சி இருமடங்கு சரிவைச் சந்தித்தது . 2012 ஆம் ஆண்டு நவம்பர் 1 முதல் 15 ஆம் தேதிவரை சாண்டி புயல் தாக்குதல் இருந்தது . அதற்குப்பிறகு நியூஜெர்சி , நியூயார்க் ஆகிய நகரங்களில் வாரத்திற்கு மூன்று நாட்கள் உடற்பயிற்சி செய்தவர்களின் எண்ணிக்கை 13 சதவீதமாக குறைந்துவிட்டது . அதேநேரம் புயல் பாதிப்பு ஏற்பட்ட பகுதிகளில் வாழ்ந்த மக்கள் முன்பை விட ஆரோக்கியமான உணவுகளைத் தேடி சாப்பிடத் தொடங்கிவிட்டனர் . புகைப்பிடிப்பவர்களின் அளவு இப்பகுதிகளில் கூடியது . ஏறத்தாழ 17 சதவீதம் . இயற்கை பேரிடர்கள் பொதுவாக ஒருவரின் இயல்பான வாழ்க்கையை பெரிதும் மாற்றக்கூடியது .. தி...

குப்பை உணவுகள் நம் மனதைக் கவருவது எப்படி? பதில் சொல்லுங்க ப்ரோ? வின்சென்ட் காபோ

படம்
      குப்பை உணவுகள் எளிதாக நம்மை ஈர்ப்பது ஏன்? காரணம் அதனை குழந்தைகளுக்கு பிடிக்கும்படி கவர்ச்சிகரமாக வடிவமைக்கிறார்கள். மேலும் அதில் உள்ள அதிகப்படியான சர்க்கரை அதில் உள்ளது. இளம் வயதில் சுவைக்காக பலரு்ம் குப்பை உணவுகளையே தேர்ந்தெடுப்பார்கள். ஒருவகையில் மூளையில் உள்ள ஆக்சிடோசின் சுரப்பை குப்பை உணவுகள் தூண்டுகின்றன. எனவே இயற்கையான உணவுகளை அதிகம் எடுத்த்துக்கொள்வது முக்கியம். இன்று உணவுகளை ஒருவர் தேர்ந்தெடுக்க அதன் நிறம் முக்கியமான காரணமாக உள்ளது. பச்சை நிற ஆப்பிளை விட சிவப்பு நிற ஆப்பிள் கடைகளில் அதிகம் விற்றுப்போவதே இதற்கு சாட்சி. குப்பை உணவுகளில் உள்ள அதிகபட்ச கலோரிகள் பற்றி தகவல்கள் சிறியதாக அச்சிடப்பட்டிருக்கும். எனவே, அதன் பிரச்னைகளைப் பற்றி பலரும் அறியாமல் சாப்பிட்டுவிட்டு, உடல் பருமன், இதய நோய் பிரச்னைகளால் அவதிப்படுகின்றனர். ஆதிகாலத்தில் மனிதர்கள் வேட்டையாடி சாப்பிட்டனர். இதற்காக அலைந்து திரிவது அவசியம். அப்படி அலைந்து திரிந்தாலும் கூட உணவு கிடைக்கும் என்பதற்கான நிச்சயத்தன்மை கிடையாது. அதனால் உடலில் உப்பு, சர்க்கரை, கொழுப்பு ஆகியவை கூடுதலாக சேர்ந்திருக்காது. இறுக்...

உணவு வழியாக மறுகாலனியாதிக்கம் -உஷார்!

படம்
நேர்காணல் கரன் ஹாப்மன் குளிர்பானங்கள், உணவு ஆகியவை நம் மனநிலை மாற்றங்களில் தாக்கம் ஏற்படுத்துகிறதா? உணவு, குளிர்பானங்கள் துறை என்பது வெகு வேகமாக வளர்ந்து வரும் துறை. இவர்களின் ஆவேசமான விளம்பர முறை சத்துகள் இல்லாத குப்பை உணவை சிறந்தது என மக்களை நம்ப வைக்கிறது. இப்படித்தான் உலகமெங்கும் ஒரே வகை உணவு, குளிர்பானங்களை விற்கிறார்கள். இவர்களின் ஒரே குறி, குழந்தைகள்தான். இதனால்தான் கவர்ச்சிகரமான விளம்பரங்களை போட்டு அவர்களை பொருட்களை வாங்க வைக்கிறார்கள். அவர்களை குப்பை உணவுகளை வாங்க வைத்து உடல்பருமன் பிரச்னையில் சிக்க வைக்கிறார்கள். நாம் சாப்பிடும் உணவுகளில் என்னதான் பிரச்னை? இதில் நடவடிக்கை எடுக்க நாடுகள் ஏன் தயங்குகின்றன.  துரித உணவுகள், தெருவில் விற்கப்படும் உணவுகள், கார்பன் சேர்க்கப்பட்ட பானங்கள், பதப்படுத்தப்பட்ட உணவுகள், நொறுக்குத்தீனிகள், இனிப்புகள் ஆகியவை பிரச்னைக்குரிய உணவு ரகங்கள். அதிக கலோரி உணவுகள் மற்றும் ஊட்டச்சத்துகள் இல்லாத இந்த உணவுகள் உலகளவில் உடல்பருமன் பாதிப்பை ஏற்படுத்தி வருகின்றன. உயர் ரத்த அழுத்தம், இதய நோய்கள் ஆகியவை உடலில் அதிகளவு சர்க்கரை சேர்வத...

அதிகரிக்கும் உடல்பருமன் ஆபத்து!

படம்
cheryl masterson/pinterest  உடல்பருமன் ஆபத்து! உடல் உழைப்பு சாராத பணியாளர்களுக்கு உடல் பருமன் அதிகரித்து வருவதாக எகனாமிக்ஸ் அண்ட் ஹியூமன் பயாலஜி இதழின் (Economics and Human Biology) ஆய்வறிக்கை தகவல் தெரிவித்துள்ளது. இந்தியர்களில் பொறியாளர்கள், தொழில்நுட்ப வல்லுநர்கள், கணிதவியலாளர்கள், அறிவியலாளர்கள், ஆசிரியர்கள் ஆகியோருக்கு உடல் பருமன் அதிகரிக்கும் வாய்ப்புள்ளதாக ஆய்வறிக்கைத் தகவல் தெரிவிக்கிறது. இது விவசாயிகள், மீனவர்கள், வீட்டுவேலை செய்பவர்கள் ஆகியோருக்கு  ஏற்படும் உடல் பருமனை விட அதிகமாக உள்ளது. பாடி மாஸ் இன்டக்ஸ்(BMI) எனும் கணக்கீடு மூலம் மனிதர்களின் எடை, உயரம் ஆகியவை அளவிடப்படுகின்றன.  இதில் பொறியாளர் பிரிவினரின் பிஎம்ஐ 1.17 கி.கி. ஆக உள்ளது. இருபிரிவினருக்கான பிஎம்ஐ வேறுபாடு 1.51 கி.கி. ஆக உள்ளது. 18.5 கி.கி.( ஊட்டச்சத்துக் குறைபாடு), 18.5 கி.கி. - 25 கி.கி(இயல்பான உடல் எடை), 25 கி.கி. - 30 கி.கி.(உடல் பருமன் ) என கணக்கிட்டுள்ளது உலக சுகாதார நிறுவனம்(WHO).  உடல் உழைப்பு குறைவு, தனிநபர் வருமானம் உயர்வு ஆகிய காரணங்களால் கடந்த இருபது ஆண்டுகளி...