இடுகைகள்

சானிடைசர் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கொரோனா வைரசில் இவர்கள் எந்த வகை?

கொரோனா பாதிப்பு நமக்கு நம்மையே கண்ணாடி மாதிரி அடையாளம் காட்டியிருக்கிறது. நாம் யார், எப்படிப்பட்ட ஆள், பக்கத்தில் அமர்ந்திருப்பவர் என்ன மாதிரியான ஆள் என்பதை இந்த இக்கட்டான நேரத்தில் அடையாளம் கண்டுகொள்ளலாம். அப்போதுதான் கொரோனாவை விட கொடுமையான ஆள் இவன் என பொட்டில் அறைவது போல சில வில்லங்க ஆட்களின் விஸ்வரூபம் நமக்கு தெரிய வரும்.  உலகிலேயே இந்தியர்கள் தனித்துவமானர்கள்தான். அதில் எந்த சந்தேகமுமில்லை. பின்னே, ஊரே கொரோனா பயத்தில் சொல்லவும் முடியாமல் மெல்லவும் முடியாமல் வீட்டுக்குள் முடங்கி கிடந்தது. அந்த நேரத்திலும் பர்சேஸூக்காக அண்ணாச்சி கடைக்கு சென்னை மக்கள் போகிறார்கள் என்றால், எங்கண்ணனுக்கு தில்லு பார்த்தியா மொமண்ட்தான் நினைவுக்கு வருகிறது. சிலரது நம்பிக்கையை எப்பாடு பட்டாலும் அசைக்க முடியாது. சிலர் கொரோனாவை போலிச்செய்தி என நினைப்பார்கள். இன்னும் சிலர் பூமி மாதா நம்மை விழுங்கப்போறா என புராணக்கதையை பாட்காஸ்டில் ஒலிபரப்பியபடி இருப்பார்கள். தமிழர்கள் ஸ்டாலின் போல வெயில் வந்தா போதும். நோயெல்லாம் ஒழிஞ்சிடும் என வம்பாக கற்பனை வளர்த்து திரிவார்கள்.   சானிடைசரே நமக!

கொரோனாவுக்கு சானிடைசர் பாதுகாப்பு தருமா?

படம்
டாக்டர் எக்ஸ் இன்று கைகளைக் கழுவுங்கள், அதுவும் சோப்பு போட்டுக் கழுவுங்கள் என்று அரசு முதல் கார்ப்பரேட் நிறுவனங்கள் வரை அக்கறையாக உள்ளன. உண்மையில் கைகழுவினால் வைரஸ் நம் கையை விட்டுவிடுமா என்பது சந்தேகமே. ஆல்கஹால் கலந்த சானிடைசர்களை ஹோல்சேல் ரேட்டில் அனைவரும் வாங்கி வருகிறார்கள். அனைத்து இடங்களிலும் சானிடைசர்களை அழுத்தும் இஸ்க் இஸ்க் ஒலிதான் கேட்கிறது. எங்கள் அலுவலக வளாகத்திலுள்ள மருந்தகங்களில் மாஸ்க் சேல்ஸ் விண்ணுக்கு பறக்கிறது. அப்படியும் விற்பனைக்கு மாஸ்குகள் சரிவர கிடைப்பதில்லை. இதுபற்றி சில கேள்விகள் நமக்கு வந்திருக்கும். அதற்கான பதில்கள் இதோ... சானிடைசரில் எதற்கு ஆல்கஹால் வாசம் வீசுகிறது? இதை கடும் நெடி என்று கூட சொல்லலாம். ஆல்கஹால் நுண்ணுயிரிகளின் உடலிலுள்ள புரத பாதுகாப்பை உடைக்கிறது. இதன்விளைவாக அதன் செயல்பாடு குன்றுகிறது. இதனால்தான் அனைத்து நுண்ணுயிரிகளுக்கும் எதிரான பொருட்களில் ஆல்கஹால் பயன்படுத்தப்படுகிறது. இப்படி புரத அடுக்கை உடைப்பதை டிநேச்சுரேஷன் என்கிறார்கள். சில நுண்ணுயிரிகள் வெப்பம் அதிகரித்தால் செயல்திறன் குன்றி இறக்கும். முட்டைகளை வேக வைத்து சாப்பிடச்ச