இடுகைகள்

கழுதைப்புலி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

எட்டு வஞ்சகர்களால் கொல்லப்பட்ட இரண்டு வாள் வீரர்களின் பிள்ளைகள் போடும் பழிக்குப்பழி திட்டம்!

படம்
 தி ஹைடன் ஃபாக்ஸ்  சீன திரைப்படம்  ஒன்றரை மணி நேரம் ஐக்யூயி ஆப் இரண்டு சிறந்த வாள் வீரர்கள், எட்டு எதிரிகளால் நயவஞ்சகமாக வாளில் விஷம் வைத்து கொல்லப்படுகிறார்கள். அவர்களின் இறப்பிற்கு, அவர்களது பிள்ளைகள் பழிவாங்குவதுதான் கதை.  இந்த திரைப்படத்தின் பலமே சண்டைக்காட்சிகளும். திடீரென நடக்கும் பல்வேறு திருப்பங்களும்தான்.  ஒரே வரியில் மேலே கதையை சொன்னாலும் படத்தை பார்ப்பவர்களுக்கு நாயகன் யார், எதனால் இப்படி துரோகியாக மாறி நடந்துகொள்கிறான் என்பது புரியாது. அதற்கெல்லாம் இறுதியாகத்தான் பதில் சொல்கிறார்கள். திரைப்படம் எடுத்த வகையிலும் நிறைய மெனக்கெடல் உள்ளது. இறுதிக்காட்சி முழுக்க பனிபோர்த்திய இடத்தில் நடக்கிறது. அதுவே ஒரு  சொல்ல முடியாத திகிலை, பயத்தை மனதில் ஏற்படுத்துகிறது.  ஹூ யிடாவோ என்ற வாள் வீரர் ஒரு பொக்கிஷத்திற்கான சாவியை வைத்திருக்கிறார். அதற்கான வரைபடமும் இருக்கிறது. அதைப் பெறவே எட்டு வில்லன்கள் அவரையும், இன்னொரு எதிராளியையும் திட்டமிட்டு மோதவிட்டு விஷம் வைத்து கொல்கிறார்கள். ஆனால் அவர்கள் அறியாத விஷயம், அந்த பொக்கிஷத்தை அவ்வளவு எளிதாக பெற முடியாது.  எட்டுபேர்களும் ஒருவருக்கொருவர் பொறாமை