இடுகைகள்

கதைகள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

யதார்த்த நீதியை சொல்லும் நீதிக்கதைகள்! - நிஜம் நீதி - சுஜாதா

படம்
  நிஜம் நீதி சுஜாதா 73 பக்கங்கள் நக்கீரன் பதிப்பகம்   பஞ்சதந்திர கதைகளை படித்திருப்போம். அதில் நிறைய நீதிகளை அறிந்திருப்போம். அந்த கதைகளை, காலத்திற்கு ஏற்ப சற்று மேம்படுத்தி பார்த்து நீதிகளை அறிந்தால் எப்படியிருக்கும் என்பதுதான் இந்த நூல். முதல் கதையே சுஜாதாவின் குறும்பான   எழுத்தில் ஜிம்மியும் கடவுளும் என்ற தலைப்பில் தொடங்குகிறது. அதற்குப்பிறகு, நூலை நீங்கள் கீழே வைக்க வைக்க மாட்டீர்கள். அந்தளவு கதைகளும் சுவாரசியமாக இருக்கிறது. கதைகள் குழந்தைகளுக்கானவை அல்ல. வயது வந்தவர்களுக்கானவை. இதைப் புரிந்துகொண்டு படிக்கவேண்டும். செயல்படுபவர்கள் பேசமாட்டார்கள், சில துரோகங்கள் எப்போதும் மன்னிக்கப்படுவதில்லை, மோசடிகளை விஞ்ஞானம் கண்டுபிடித்துவிடும் என்ற கதைகள், எழுதப்பட்டவிதத்தில் மனம் கவருபவையாக உள்ளது. இந்த நூலை, காலம்தோறும் சற்று மாற்றி எழுதிக்கொள்ள முடியும் என்பதுதான் இதன் சிறப்பு அம்சம். ஏனெனில் காலம்தோறும் பிழைப்பதற்கான விதிகள் மாறிக்கொண்டே இருக்கின்றன. எனவே, அதை வைத்து இதுபோல நிறைய கதைகளை எழுதலாம். உண்மையில் இன்றுள்ள சூழலுக்கு ஏற்ற கதை என எறும்பு, புறா கதையையும், தவளையை இரைய

அவசியம் கேட்க வேண்டிய பாட்காஸ்டுகள்- ரீடர்ஜ் டைஜெஸ்ட் பரிந்துரை

படம்
                      கேட்க வேண்டிய பாட்காஸ்ட்கள் வைல்ட் திங் அயல் கிரக மனிதர்கள் , அவர்களைப் பற்றிய சுவாரசியமான ஏராளமான செய்திகளை சொல்லுகிறார்கள் . இதுதொடர்பான வெளியான புகைப்படங்கள் , செய்திகள் , வினோதமான வெளிச்சத்தை பார்த்த விமானிகள் என பல்வேறு செய்திகள் கேட்க வினோத ரச மஞ்சரியாக மனதை மயக்குகின்றன . த்ரில்லிங் டேல்ஸ் ஆப் மாடர்ன் கேபிடலிசம் வணிக நிறுவனங்கள் எப்படி வளர்ந்தன , பெற்ற வெற்றி , அடைந்த தோல்வி ஆகியவற்றை பற்றி பேசுகின்றனர் . வணிகம் பற்றி தெரிந்துகொள்ள நினைத்தால் இந்த பாட்காஸ்டை காதுகொடுத்து கேட்கலாம் . கிட்னாப்டு அண்ட் டிராப்டு பெலோ கிரவுண்ட் மைக் பாக்கம் என்பவர் கடத்தப்பட்டு உயிரோடு புதைக்கப்பட்டவர் . இவர் எப்படி மரப்பெட்டியில் இருந்து உயிர்பிழைத்து தப்பித்து வந்தார் என்பதை சுவாரசியமாக சொல்லுகிறார்கள் . சாகச அனுபவத்தை பெற நீங்கள் இதனை கேட்கலாம் . பேரிடேல்ஸ் எவரி சைல்ட் ஷூட் நோ உலகம் முழுக்க புகழ்பெற்ற அலாவுதீன் , அராபிய இரவுகள் உள்பட ஏராளமான கதைளளை சொல்லுகிறார்கள் . குழந்தைகளுக்கான கதைகள் என்றாலும் பெரியவர்களும் கேட்கலாம் . கதை

பிறர் பேசும் கதைகளை நீங்கள் கேட்டு வெளிப்படுத்துவதில்லை! - சுதாமூர்த்தி, எழுத்தாளர்

படம்
  சுதா மூர்த்தி உங்களுக்கு நிறைய திறமைகள் உண்டு என்பதை இப்போதுதான் தெரிந்துகொண்டு வருகிறோம். குழந்தைகளுக்கான  நூல்களை எழுதுகிறீர்கள். கட்டுரைகளை எழுதி வருகிறீர்கள். கணினி பற்றியும் எழுதுகிறீர்கள். எப்படி எழுத்தார்வம் பிறந்தது? இங்கு ஆங்கில மீடியத்தில் படிக்கும் குழந்தைகளுக்கு சிண்ட்ரெல்லா, ஸ்னோவொயிட் கதைகளை எழுதுகிறார்கள். அக்கதைகளைத் தான் சொல்லுகிறார்கள். பெற்றோர்களும் அதைத்தான் விரும்புகிறார்கள். ஆனால் அந்த கதைகள் நமக்கு பொருந்தாது. நம்முடைய கூட்டு குடும்ப முறை, கலாசாரம், விழாக்கள் ஆகியவற்றுக்கு மேற்கத்திய கதைகள் பொருந்தாதவை. எனவே நான் அதற்கு ஏற்ப இந்திய பண்பாட்டு தன்மை கொண்ட கதைகளை ஆங்கிலத்தில் எழுத தொடங்கினேன்.  நீங்கள் முதலில் கன்னட மொழியில் எழுத தொடங்கினீர்கள் அல்லவா? நான் பத்தாவது வரையில் கன்னடப் பள்ளியில்தான் படித்தேன். பிறகு 50வயது வயதில் ஆங்கிலத்தில் எழுத தொடங்கினேன். இந்தியன் எக்ஸ்பிரஸ் பத்திரிகையிலுள்ள டிஜேஎஸ் ஜார்ஜ் நான் எழுதுவதை பெரிதும் ஊக்குவித்தார்.  கன்னடத்திலிருந்து ஆங்கிலத்திற்கு எழுத தொடங்கியது கடினமாக இருக்குமே? உண்மைதான். இதுபற்றி அம்மாவிடம் புலம்பியிருக்கிறேன்.

கறுப்பின எழுத்தாளர்களுக்கு கௌரவம் தேடித்தந்த பெண்மணி!

படம்
ozy தாளின் வெற்றுப்பக்கத்தை ஜெர்கின்ஸ் பார்த்து டெட்லைன் ஆச்சே என்று பதற்றம் கொண்டதில்லை. இருபத்தாறு வயது என்றாலும் வார்த்தைகள் தாளில் கொட்டுகின்றன. அத்தனையும் எளிய மனிதர்களுக்கான சொற்கள். அப்படியிருக்க கவலை என்ன? படைப்பு என்பது கதையோ, கட்டுரையோ, நாவலோ உழைப்பு ஒன்றுதான். ஜெர்கின்ஸூம் கட்டுரை சரியாக வரவேண்டுமென பசியோடு உணவை மறுத்து கணினியோடு போராடியவர்தான்.  திஸ் வில் பி மை அன்டூயிங்: லிவிங் அட் தி இன்டர்செக்ஷன் ஆஃப் பிளாக், ஃபீமேல் அண்ட் ஃபெமினிஸ்ட் இன் (வொய்ட் ) அமெரிக்கா என்ற இவரின் நூல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஏழாவது இடம் பிடித்து சாதித்த நூல். நான் என் எழுத்தின் வழியே விவாதங்களை உருவாக்க விரும்புகிறேன்.  பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ரஷ்யன், ஜப்பானிய மொழி இலக்கியங்களைக் கற்றவர் ஜெர்கின்ஸ். கிரியேட்டிவ் எழுத்துபற்றிய படிப்பை பெனிங்டன் கல்லூரியில் படித்தவருக்கு ஆறு மொழிகளை பேசத்தெரியும். வகுப்பில் ஒரே கறுப்பினப் பெண் மாணவி இவர்தான்.  தன் பதினான்கு வயதிலிருந்து நாவல்களை எழுதி வருகிறார் ஜெர்கின்ஸ். தெற்கு நியூ ஜெர்சியில் வாழ்ந்து வந்தவர், பிலடெல்பியாவுக