கறுப்பின எழுத்தாளர்களுக்கு கௌரவம் தேடித்தந்த பெண்மணி!




This Young Author Will Guide Your Path to Wokeness
ozy

தாளின் வெற்றுப்பக்கத்தை ஜெர்கின்ஸ் பார்த்து டெட்லைன் ஆச்சே என்று பதற்றம் கொண்டதில்லை. இருபத்தாறு வயது என்றாலும் வார்த்தைகள் தாளில் கொட்டுகின்றன. அத்தனையும் எளிய மனிதர்களுக்கான சொற்கள். அப்படியிருக்க கவலை என்ன?

படைப்பு என்பது கதையோ, கட்டுரையோ, நாவலோ உழைப்பு ஒன்றுதான். ஜெர்கின்ஸூம் கட்டுரை சரியாக வரவேண்டுமென பசியோடு உணவை மறுத்து கணினியோடு போராடியவர்தான். 

திஸ் வில் பி மை அன்டூயிங்: லிவிங் அட் தி இன்டர்செக்ஷன் ஆஃப் பிளாக், ஃபீமேல் அண்ட் ஃபெமினிஸ்ட் இன் (வொய்ட் ) அமெரிக்கா என்ற இவரின் நூல் நியூயார்க் டைம்ஸ் பத்திரிகையில் ஏழாவது இடம் பிடித்து சாதித்த நூல். நான் என் எழுத்தின் வழியே விவாதங்களை உருவாக்க விரும்புகிறேன். 

பிரின்ஸ்டன் பல்கலைக்கழகத்தில் ரஷ்யன், ஜப்பானிய மொழி இலக்கியங்களைக் கற்றவர் ஜெர்கின்ஸ். கிரியேட்டிவ் எழுத்துபற்றிய படிப்பை பெனிங்டன் கல்லூரியில் படித்தவருக்கு ஆறு மொழிகளை பேசத்தெரியும். வகுப்பில் ஒரே கறுப்பினப் பெண் மாணவி இவர்தான். 


தன் பதினான்கு வயதிலிருந்து நாவல்களை எழுதி வருகிறார் ஜெர்கின்ஸ். தெற்கு நியூ ஜெர்சியில் வாழ்ந்து வந்தவர், பிலடெல்பியாவுக்கு இடம் பெயர்ந்தது கடுமையான நெருக்கடியை பள்ளி வாழ்வில் ஏற்படுத்தியது. ஆம் பள்ளிதோழிகளின் கடுமையான கிண்டல்கள்களை சமாளிக்க வேண்டியிருந்திருக்கிறது. அக்காலகட்டங்களில் அவரைக் காப்பாற்றியது எழுத்துக்கள்தான். 

நான் என் ஆளுமையை வளர்ப்பது, கேரக்டரை மாற்றுவது என்றெல்லாம் எதையும் செய்யவில்லை நான் செய்தது எழுதுவதை மட்டுமே. 

பிரின்ஸ்டனில் இருமுறை கிரியேட்டிவ் ரைட்டிங் படிப்புக்கு விண்ணப்பித்தும் இடம் கிடைக்கவில்லை. இலக்கியம், மற்றும் மொழி மீது கவனம் குவித்து எழுதிக்கொண்டிருந்தார்; மழைக்கு காத்திருக்கும் விதை நிலம் போல வாசித்துக் கொண்டிருந்தார். 

படிப்பு முடிந்ததும் பதிப்பகங்களை வேலைக்கு அணுகினார். ஆனால் வேலை கிடைக்கவில்லை காரணம், என்ன இப்படி கேட்கிறீர்கள், அவர் கறுப்பர் ஆயிற்றே. பின்னர் பிளாக் லிவ்ஸ் மேட்டர் அமைப்புகள் வளர்ந்தபின்தான் நிலைமை சுமூகமானது. 

நான் எதைப்பற்றியும் கவலைப்படவில்லை இந்த அமைப்புகள் வந்தபின்தான், கறுப்பர்கள் குறித்த பதிவுகள் பரவலாக கவனிக்கப்பட்டன. நான் எழுதும் கட்டுரைகளை கவனமாக எழுதவேண்டும் என்பது மட்டுமே என் ஒரே லட்சியமாக இருந்தது. 

சிறுசிறுவேலைகள் பார்த்து வந்தவருக்கு, 2016 ஆம் ஆண்டு பதிப்பகம் ஒன்றில் வேலை கிடைத்தது. அதோடு ஜப்பானிய மொழியைக் கற்பிக்கும் பணியையும் ஏற்றுக்கொண்டார்.  நான் என் அம்மாவைப் பார்த்து வளர்ந்தவள் என்பதால், வேலைச்சுமைகள் பற்றி நன்றாகவே தெரியும்.

அக்காலகட்டத்தில் சிறந்த நூல்கள் பட்டியலில் ஒரு கறுப்பின பெண் கூட கிடையாது. இன்று நிலைமை மாறியுள்ளது. இனவெறி பற்றி ஜெர்கின்ஸ் எழுதத் தொடங்கியது இப்படித்தான். இதற்காக பல்வேறு விமர்சனங்களைச் சந்தித்தாலும் எதுவும் அவரின் லட்சியத்தை மாற்றவில்லை. இதே காலகட்டத்தில் வாழ்க்கைக்கான துணைவரையும் சந்தித்தார்.  

பல்வேறு குழிகள் கொண்ட பாதையில் நான் பயணிக்கிறேன் என்பதை அறிவேன். என் பயணம் நீண்டது என்பதையும் அறிந்தே உள்ளேன் என்கிறார் ஜெர்கின்ஸ். 

நன்றி: OZY - மோலி ஃபாஸ்கோ