இடுகைகள்

பெண்கள் உரிமை லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆப்கானிஸ்தானில் பத்திரிகையாளர் படுகொலை!

படம்
ஆப்கானிஸ்தான் பத்திரிகையாளர் சுட்டுக்கொலை! காபூலில் பத்திரிகையாளர் சமூக வலைத்தளத்தில் அச்சுறுத்தப்பட்டார். அதற்கு பயப்படாமல் செயல்பட்டவரை தீவிரவாதிகள் சுட்டு படுகொலை செய்தனர். கடந்த சனிக்கிழமை காலையில் பொது இடத்தில் மேனா மங்கல் சுட்டு படுகொலை செய்யப்பட்டது அங்குள்ள பெண்கள் அமைப்பு உள்ளிட்ட பல்வேறு ஜனநாயக அமைப்புகளை கொந்தளிக்க வைத்துள்ளது. பொதுஇடத்தில் அரசியல் விமர்சகராக செயல்பட்ட பத்திரிகையாளரை சுட்டுக்கொன்றுள்ளது நீதி அமைப்புக்கு விடப்பட்ட சவால். காவல்துறை என்ன செய்கிறது என்ற கேள்வியை நாம் எழுப்பவேண்டியது அவசியம் என்கிறார் அரசியல் விமர்சகரான மரியம் வர்தாக். கொல்லப்படுவதற்கு முன்பாகவே தீவிரவாத அமைப்புகள் மேனாவைக் கடத்திச்சென்று பணம் கேட்டு மிரட்டியுள்ளனர். போலீஸ் பின்னர் இவர்களை கைது செய்தாலும், மேனாவின் குடும்பம் பணம் கொடுத்து அவரை மீட்டுள்ள செய்தி ஊடகங்களுக்கு தெரிய வந்துள்ளது. கடந்த இருபது ஆண்டுகளாக பெண்களுக்காக குரல் கொடுக்கும் பத்திரிக்கையாளர்கள், கல்வியாளர்கள், சமூக ஆர்வலர்கள் ஆகியோர் மத அமைப்புகளால் கொலை செய்யப்படுவது தொடர்ச்சியாக நடந்து வருகிறது. மேனா மங்