இடுகைகள்

கிம்பர்லி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

செயற்கை வைரங்களை நோக்கி நகரும் வைர விற்பனை நிறுவனங்கள்! - இயற்கை வைரத்தை அகழ்ந்தெடுக்க கூடுகிறது பொருட்செலவு

படம்
            செயற்கை வைரங்களை நோக்கி நகரும் உலகம் ! செய்தி ஆஸ்திரேலியாவின் கிழக்கு கிம்பர்லி பகுதியில் செயல்பட்டு வந்த பழமையான ஆர்கைல் வைரச்சுரங்கம் , லாபகரமாக இயங்கவில்லை என்பதால் மூடப்பட்டிருக்கிறது . பல்வேறு நாடுகளில் இயங்கி வரும் வைரச்சுரங்கங்கள் காமதேனு போல வைரங்களை கொடுத்துக்கொண்டே இருக்காது . ஆர்கைல் வைரச்சுரங்கம் லாபகரமாக இயங்கவில்லை என்று அதன் உரிமையாளர் ரியோ டின்டோ கூறி , அதனை மூடியுள்ளார் . 1983 ஆம் ஆண்டு முதல் இயங்கத் தொடங்கிய இச்சுரங்கத்தில் 8 கோடியே 65 லட்சம் கேரட் வைரங்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளன . உலகில் விற்பனையாகும் 90 சதவீத பிங்க் வைரங்கள் ஆர்கைல் சுரங்கத்திலிருந்துதான் பெறப்பட்டன . தொண்ணூறுகளில் அதிக விலைக்கு விற்காத தரம் குறைந்த பழுப்பு மற்றும் பல்வேறு நிறமுடைய வைரக்கற்களை வாங்கி , பட்டை தீட்டி விற்பனை செய்தது இந்தியாவிலுள்ள குஜராத் மாநில வியாபாரிகள்தான் . ஆர்கைல் சுரங்கம் மூடப்படுவதால் இனி இருப்பிலுள்ள வைரங்களை நகை வணிகர்கள் விற்கலாம் . அரியவை என்பதால் அதன் விலை அதிகரிக்கப்பட வாய்ப்புள்ளது . இனி விற்பனைக்கு வரும் வைரங்கள் ஆய்வகத