இடுகைகள்

தோள் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மனிதர்களின் உடலில் எத்தனை விதமான மூட்டுகள் உள்ளன தெரியுமா?

படம்
   மூட்டுகள் பற்றி அறிவோம்... மனிதர்களின் உடலில் 206 எலும்புகள் உள்ளன. இவை, உடலிலிருந்து நழுவாமல் இயங்க மூட்டுகள் உதவுகின்றன. இவற்றில் அசையும் மூட்டு, அசையா மூட்டு என இருவகை உண்டு. அசையும் மூட்டுகளுக்கு தோள்மூட்டு, இடுப்பு மூட்டு எடுத்துக்காட்டாகும். அசையா மூட்டுக்கு மண்டையோட்டு எலும்புகள் சான்று.    முழங்கால், முழங்கை ஆகியவை  கீல் மூட்டு இணைப்பைக் கொண்டவை. இவை கதவைப் போல திறந்து மூடுபவை. எலும்புகளை உறுதியான வளையும் தன்மை கொண்ட குருத்தெலும்பு (Cartilage) பாதுகாக்கிறது. முதுகுத்தண்டிலுள்ள எலும்புகளை குருத்தெலும்பு இணைக்கிறது. இதன் வளையும் தன்மை, அதிர்ச்சியை தாங்கும் ஆற்றலைத் தருகிறது. முதுகுத்தண்டில் ஏற்படும் அதிர்ச்சியை அதன் முள்ளெலும்புகளை இணைத்துள்ள குருத்தெலும்பு தாங்குகிறது.   முளை மூட்டு (Pivot Joint) மனிதர்கள் திரும்புவதற்கு உதவும் தாடைக்கு கீழுள்ள மூட்டு. ஆனால், இவை பக்கவாட்டில், முன், பின்பக்க இயக்கம் கொண்டவை அல்ல.  கீல் மூட்டு (Hinge joint) மணிக்கட்டு, முழங்கால் மூட்டுகள் முன்னே, பின்னே நகரும். ஆனால் பக்கவாட்டில் நகராது.  தகட்டு மூட்டு (Gliding joint) தட்டை எலும்புகளுக்கு இடைய