பற்கள், செரிமானம், தூக்கம் - அறிவியல் அறிவோம்.
முத்துப்பல் வரிசை இந்தியாவில் உள்ள ஊடகத்தினர் பலருக்கும் பற்கள் பறிபோய்விட்டது. முதுகெலும்பும் இற்றுவிட்டது. அதனால்தான் ஊடகத்தினர் தாங்கள் சமூகத்தில் காவல் நாய்கள் என்பதை மறந்துவிட்டு அதிகாரத்திற்கும் பணத்திற்கும் வாலை குலைத்து நிற்கிறார்கள். இவர்கள் அனைவருக்கும் பெல்ட்டில் சிகிச்சை தேவைப்படுகிறது. சரி இருக்கட்டும். நாம் அறிவியல் பக்கம் நிற்போம். பற்களைப் பற்றி பேசுவோம். குழந்தையாக இருக்கும்போது ஒருவருக்கு இருபது பற்கள் இருக்கும். பிறகு, இவற்றுக்கு கீழேயே பெரிய பற்கள் முளைக்கும் தருவாயில் குழந்தை பற்கள் விழுந்துவிடும். ஈறுகளுக்கு குழந்தை பற்கள் பொருத்தமாக இருக்காது. எனவே, பெரிய பற்களே உணவை அரைக்க உதவும். ஒருவரின் ஆறு முதல் பனிரெண்டு வயது வரையிலான காலத்தில் குழந்தை பற்கள் விழுந்துவிடுகின்றன. தினசரி பட்டாணி அளவு பற்பசையை பல்துலக்க பயன்படுத்தலாம். அதை இருமுறை பயன்படுத்த வேண்டுமா என்பதை, நீங்கள் சாப்பிடும் உணவில் இறைச்சி உண்டா, மாவுப்பொருட்கள் உண்டா என்பதை அடிப்படையாக கொண்டு தீர்மானிக்கலாம். அமெரிக்க தயாரிப்பான கோல்கேட், இங்கிலாந்து நாட்டின் தயாரிப்பான பெப்சோடென்ட் ஆ...