உலகின் முதல் வெற்றிகரமான குளோனிங் விலங்கு எது?

 

 

அறிவியல் கேள்வி பதில்கள்



மிஸ்டர் ரோனி

பி53 என்ற மரபணுவின் பயன் என்ன?

இந்த மரபணு, டிஎன்ஏ சேதமாகும்போது செல்கள் புதிதாக உருவாவதை தடுத்து புற்றுநோய் அபாயத்தை முற்றாக தடுக்கிறது. அதேசமயம் இந்த பி53 மரபணு ஏதாவது பாதிப்புக்கு உள்ளாகும்போது, புற்றுநோய் ஆபத்து ஏற்படும். இந்த மரபணு பற்றி அறிந்த ஆராய்ச்சியாளர்கள், புற்றுநோய்க்கு மருந்து தயாரிக்க இதை பயன்படுத்திகொள்ள முடியுமா என யோசித்து வருகிறார்கள். பி53 மரபணு, 1979ஆம் ஆண்டு கண்டறியப்பட்டது.

மரபணுவியலின் தந்தை என கிரிகோர் மென்டல் கருதப்பட காரணம் என்ன?

அவர் பதினொரு ஆண்டுகளில் ஆயிரக்கணக்கான தாவரங்களை ஆராய்ந்து அதன் இனப்பெருக்கம் பற்றிய குறிப்புகளை சேகரித்து வைத்தார். மெண்டல் ஆஸ்திரிய நாட்டைச் சேர்ந்த தாவரவியலாளர் மற்றும் துறவி. தனது தோட்டத்தில் உள்ள பட்டாணியை ஆராய்ந்து மரபணு பற்றிய உண்மைகளை உலகிற்கு சொன்னார். வில்லியம் பேட்சன் என்ற ஆராய்ச்சியாளர், மெண்டலின் ஆய்வை அறிவியல் உலகிற்கு கொண்டு வந்தார். மரபணுவியல் என்ற பதத்தையும் வில்லியம் அறிமுகப்படுத்தி வைத்தார்.

டார்வின், மெண்டல் என இரு புகழ்பெற்ற ஆராய்ச்சியாளர்களும் ஒருவரையொருவர் அறிவார்களா?

வாழ்ந்த காலம் ஒன்றுதான். ஆனால் இருவரும் ஒருவரையொருவர் அறிந்திருக்கவில்லை. டார்வின் தனது உயிரினங்களின் தோற்றம் கொள்கையை 1859ஆம் ஆண்டு வெளியிட்டார். மெண்டல், 1865ஆம் ஆண்டு தனது மரபணுவியல் ஆய்வை வெளியிட்டார்.

உலகின் முதல் வெற்றிகரமான குளோனிங் விலங்கு எது?

1970ஆம் ஆண்டு, பிரிட்டிஷ் மூலக்கூறு அறிவியலாளர் ஜான் பி குர்டான், தவளை ஒன்றை குளோனிங் முறையில் உருவாக்கினார். 1996ஆம் ஆண்டு, ஸ்காட்லாந்தில் டாலி என்ற  ஆட்டை குளோனிங்கில் உருவாக்கினர்.

தாவரவியலின் தந்தை யார்?
தொன்மை கிரேகத்தின் தியோபிராஸ்டஸ் என்பவரே தாவரவியலின் தந்தை என கருதப்படுகிறார். ஆன் தி ஹிஸ்டரி ஆப் பிளான்ட்ஸ், ஆன் தி காஸ் ஆஃப் பிளான்ட்ஸ் என்ற இரு படைப்புகள் முக்கியமானவை 550 விதமான தாவரங்களை அப்போதே அலசி ஆராய்ந்து விளக்கி எழுதியிருந்தார்.

ஹேண்டி சயின்ஸ்புக்








 

கருத்துகள்

பிரபலமான இடுகைகள்