மௌன வசந்தம் நூலின் பங்களிப்பு!
பல்லுயிர்தன்மை என்றால் என்ன?
குறிப்பிட்ட இனத்தில் பல்வேறு வேறுபாடுகளைக் கொண்ட உயிரினங்கள் இருக்கும். அதாவது அவற்றின் மரபணுக்கள் வேறுபட்டவையாக இருக்கும். உலகம் முழுக்க 15 அல்லது 100 மில்லியன் உயிரினங்கள் இருக்கும் என அறிவியலாளர்கள் மதிப்பிட்டுள்ளனர். ஆண்டுக்கு ஒரு லட்சம் ஏக்கர் சதுப்புநிலங்கள் அழிக்கப்பட்டு வருவதால் பல்லுயிர்த்தன்மை அழிந்து வருகிறது.
அமெரிக்கா காடுகள் அனைத்தும் அரசுக்கு சொந்தமா?
இல்லை அரசுக்கு சொந்தமான காடுகள் இருபது சதவீதம் மட்டுமே. பெருநிறுவனங்களுக்கு பதினைந்து சதவீதங்கள் சொந்தமாக உள்ளன. ஐம்பத்தேழு சதவீத காடுகள் தனியார் சொத்துக்களாகவே உள்ளன.
பருவ மழைக்காடுகளின் முக்கியத்துவம் என்ன?
பருவமழைக்காடுகளில் இருந்துதான் புற்றுநோய்க்கான மருந்துகளின் மூலம் பெறப்படுகிறது. உலகிலுள்ள பெரும்பாலான நாடுகளுக்கு தேவையான மருந்துகளின் அடிப்படை மூலிகைகள் பருவ மழைக்காடுகளில் உள்ளன. அவற்றைப் பெறாமல் மருத்துவதுறை உயிரோடு இருக்க முடியாது. ஏகபோகமாக லாபம் ஈட்டவும் முடியாது.
காடுகள் அழிவதற்கு என்ன காரணம்?
வேளாண்மை, நகரங்களைக் கட்ட காடுகளை அழித்தல், காட்டுத்தீ, மழை வெள்ளம் ஆகியவையும் முக்கியக் காரணங்கள். இயற்கையான காரணங்களை விட செயற்கையாக மனிதர்கள் செய்யும் செயல்பாடுகளே பேராபத்தை உருவாக்கி வருகின்றன.
சதுப்பு நிலம் என்றால் என்ன?
ஆண்டு முழுக்க நிலத்தில் தண்ணீர் நிற்கும். இப்படியான நிலப்பரப்பில், அதற்கேற்ப இயல்புடைய தாவரங்கள் வளரும்.
லிம்னோலஜி என்றால் என்ன?
நன்னீர் நிலைகளைப் பற்றி படிக்கும் துறைக்கு லிம்னோலஜி என்று பெயர். குளம், ஏரி, ஆறு ஆகியவற்றை பற்றி வாசிக்கலாம். எப் ஏ போரல் என்ற ஸ்விட்சர்லாந்து நாட்டைச் சேர்ந்தவர், லிம்னோலஜி துறையை உருவாக்கினார்.
காலர்பா டாக்சிபோலியா என்றால் என்ன?
கொலைகார பாசி என்பது இதன் பட்டப்பெயர். பிரான்ஸ், ஸ்பெயின், இத்தாலி, குரோஷியா ஆகிய நாடுகளின் கடல்புறத்தில் முப்பத்து இரண்டாயிரம் ஏக்கர் பரப்பில் கொலைகார பாசி ஆக்கிரமித்துள்ளது. மத்தியக் கடல் பகுதியில் தொடர்ச்சியாக வளர்ந்து வருகிறது.
சயனோபாக்டீரியா என்றால் என்ன?
குளம், குட்டை, ஏரி ஆகிய நீர்நிலைகளில் பரவி ஆக்கிரமித்து வாழும் பாசியை சயனோபாக்டீரியா என்று கூறுகிறார்கள். நீர்நிலையில் மனிதர்களின் செயல்பாடு காரணமாக நைட்ரேட், பாஸ்பேட் ஆகியவை அதிகரித்தால் அங்கு, எளிதாக பாசி பரவி வளரும். எடுத்துக்காட்டாக மைக்ரோசிஸ்டிஸ், நாஸ்டாக், அனபெனா ஆகிய பாசிகளை கூறலாம்.இவை நீர்நிலைகளில் பரவி வளர்வதோடு நியூரோடாக்சின் எனும் நச்சை வெளியிடுகிறது.
உணவுச்சங்கிலியின முக்கியத்துவம் என்ன?
தாவரங்கள் தொடங்கி அதை உண்ணும் விலங்குகள் என சங்கிலியாய் உணவுச்சங்கிலி விரிவடைந்து செல்லும். நிறைய விலங்குகள் பல்வேறு வகை உணவுகளை சாப்பிடுவதால் உடனே இதை புரிந்துகொள்வது கடினமாக தோன்றலாம். ஜெர்மனியைச் சேர்ந்த விலங்கியலாளர் கார்ல் செம்பர், உணவுச்சங்கிலி முறையை கண்டுபிடித்தார்.
சூழலில் மௌன வசந்தம் நூலின் பங்களிப்பு என்ன?
1962ஆம் ஆண்டு ரேச்சல் கார்சன் எழுதிய மௌனவசந்தம் வெளியானது. இந்த நூல், நீர்நிலைகளில் கலக்கும் பூச்சிக்கொல்லிகள், களைக்கொல்லிகள் குறிப்பாக டீடீடி என்ற பிராண்ட் மருந்தைப் பற்றிய பல்வேறு அதிர்ச்சி தரும் உண்மைகளைப் பற்றி மக்களுக்கு தெரிவித்தார். உண்மையை கூறியதால், மருந்து நிறுவனங்கள், எழுத்தாளரை மிரட்டின. சூழல் இயக்கங்களுக்கு ஊக்கம் தந்த ரேச்சல் கார்சல்ன் கூட புற்றுநோயால் பாதிக்கப்பட்டு இறந்துபோனார்.
கருத்துகள்
கருத்துரையிடுக