இடுகைகள்

பொருளாதார ஆய்வறிக்கை 2019 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறதா?

படம்
பள்ளிசெல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைகிறது!  2018-19 ஆம் ஆண்டுக்கான இந்திய அரசின் பொருளாதார ஆய்வறிக்கை வெளியிடப்பட்டுள்ளது. அதில், பள்ளி செல்லும் குழந்தைகளின் எண்ணிக்கை குறைந்துள்ளது சுட்டிக்காட்டப்பட்டுள்ளது. சீனாவுக்கு அடுத்து அதிக மக்கள் தொகை கொண்ட நாடு, இந்தியா. ஆனால், ஆய்வில் இந்திய மக்கள்தொகை எதிர்பார்த்த எண்ணிக்கையை விட குறையும் என பொருளாதார ஆய்வறிக்கை தகவல் கூறி ஆச்சரியப்படுத்தி உள்ளது.  அதேநேரம் 2030 ஆம் ஆண்டு அதிகரித்து வரும் வயதானவர்களின் எண்ணிக்கையையும் இந்திய அரசு சமாளிக்கவேண்டிய தேவை உள்ளது. இதில் நாம் கவனிக்க வேண்டியது, பள்ளிக்குச்செல்லும் 5 முதல் 14 வரையிலான குழந்தைகளின் எண்ணிக்கை குறைவைத்தான். தற்போது தமிழ்நாடு மட்டுமல்லாது பல்வேறு மாநில அரசுகளும் அரசு பள்ளிகளை மூடி வருகின்றன. காரணம், போதிய மாணவர்கள் அங்கு இல்லாததுதான். மாநில அரசுகள் புதிய பள்ளிகளைத் தொடங்குவதை விட மாணவர்களின் எண்ணிக்கை குறைந்த பள்ளிகளை இணைப்பது நல்லது என அறிவுறுத்தல்களையும் இந்த அறிக்கை கூறியுள்ளது. இந்தியாவில் அடுத்த இருபது ஆண்டுகளில் மக்கள் தொகை எண்ணிக்கை குறையும். இதனால் அர