கிராமத்தில் பெண் பித்தனான தந்தையைக் கொன்ற கொலைகாரனை தேடும் புலனாய்வு பத்திரிகையாளன்!
ட்ரூ தெலுங்கு இப்படத்தில் வில்லனும், நாயகனும் ஒருவரே. உளவியல் அடிப்படையிலான கதை. லண்டனில் பத்திரிகையாளராக வேலை செய்துகொண்டிருக்க கூடிய நாயகன், ஆந்திரத்திற்கு வருகிறார். அவரது அப்பா திடீரென மின்சார தாக்குதலில் இறந்துவிடுகிறார். அதற்காகவே அயல்நாட்டிலிருந்து வருகிறார். அவர் செய்யவேண்டியதை நெருங்கிய நண்பன் செய்து எரியூட்டிவிடுகிறான். இப்போது நாயகன் செய்வதற்கு வேலை ஒன்றுமில்லை. எனவே, அப்பாவின் இறப்பு கொலையா என துப்பறிகிறார். ஆதாரங்களை சேகரிக்கிறார். இறந்துபோன இடத்திற்கு சென்று ஆராய்கிறார். அப்போது அவரை சிலர் விசாரணை செய்யாதே என எச்சரிக்கிறார்கள். யார் அவர்கள் என தேடிப்போகிறார். அப்போது அதிர்ச்சியான செய்தி ஒன்று கிடைக்கிறது. அவரை மிரட்டிய இளம்பெண், அவரது காதலி என்று கூறுகிறார். கூடவே வீடியோ ஒன்றையும் கொடுக்கிறார். அப்போதுதான் இறந்துபோனவர் பற்றிய இன்னொரு பக்கம் தெரியவருகிறது. மலையாளத்தில் கிஷ்கிந்தா காண்டம் என்ற படம் வந்தது யாருக்கேனும் நினைவிருக்கிறதா? அதேபாணி. நாயகனின் அப்பா கைத்தொழில் மன்னன். காம சூத்திர கண்ணன். வட்டிக்கு பணம் கொடுத்துவிட்டு அதற்கு வட்டியாக அக்குடும்பத்தில் உள்ள பெண்...