இடுகைகள்

மிரிட்ஸா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

விவசாயிகளின் துயர் துடைக்கும் மிரிட்ஸா!

படம்
  விவசாயிகளுக்கு உதவும் மிரிட்ஸா! ஆந்திர விவசாயிகளுக்கு உதவ பள்ளி மாணவிகள் நால்வர் இணைந்து  திட்டம் ஒன்றை உருவாக்கியுள்ளனர். புராஜெக்ட் மிரிட்சா எனும் திட்டத்தை நந்தினி ராஜூ(16), ஸ்ரீலக்ஷ்மி ரெட்டி(16), சாரதா கோபாலகிருஷ்ணன் (14), அம்ருதா பொட்லூரி (16) ஆகிய மாணவிகள் தொடங்கியுள்ளனர். இதுவரை 1.5 லட்சம் ரூபாய் நிதி திரட்டி இயற்கை விவசாயம் செய்யவும் குளிர்பதனக்கிடங்குகளைக் கட்டவும் விவசாயிகளுக்கு உதவி வருகின்றனர். இதில் சாரதா கோபாலகிருஷ்ணன் சென்னையைச் சேர்ந்தவர். அம்ருதா, அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தைச் சேர்ந்தவர்.  கடந்த ஜூன் மாதம் உருவாக்கப்பட்ட இத்திட்டத்தின் மூலம் விவசாயிகளுக்கு விழிப்புணர்வூட்டும் வீடியோக்களை  உருவாக்குவது, தானியங்களை சேமிப்பதற்கான கிடங்குகளை ஏற்படுத்துவது, இயற்கை விவசாய மாதிரிகளை பிரசாரம் செய்வது, அரசு திட்டங்களை விளக்குவது ஆகியவற்றை செய்து வருகின்றனர்.  ஆந்திரத்தின் குண்டூர் பகுதியில் இன்ஸ்டாகிராம், யூடியூப் என பல்வேறு சமூக வலைத்தளங்களையும் நான்கு மாணவிகளும் பயன்படுத்தி விழிப்புணர்வு பிரசாரங்களை செய்கின்றனர். இங்கு கடன் தொல்லையால் தற்கொலை செய்துகொள்ளும் விவசாயிகளின