இடுகைகள்

ஆயுர்வேதா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

மாற்று மருத்துவமுறைகளுக்கு அதிகரிக்கும் மவுசு! சித்த, ஆயுர்வேத, ஹோமியோபதிக்கு திரும்பும் மக்கள்

படம்
            இந்திய அரசு ஆயுஷ் அமைச்சகத்தின் மூலம் அலோபதியை தவிர்த்த பிற மருத்துவ முறைகளை அதிகம் ஊக்குவித்து வருகிறது . இதன் புதிய தாக்கமாக அலோபதி மருத்துவர்களிடம் சித்த ஆயுர்வேத மருத்துவர்கள் அறுவை சிகிச்சை கற்று்க்கொள்ளுவது பற்றிய விதிகள் வெளியிடப்பட்டு சர்ச்சை ஏற்படுத்தின . இதை எதிர்த்து அலோபதி மருத்துவர்கள் சங்கம் மிக்சோபதி என்ற பெயரில் எதிர்ப்பு தெரிவித்து போராட்டங்களை நடத்தினர் . கோவிட் -19 காலம் மாற்று மருத்துவமுறைகளின் மீது நம்பிக்கை வெளிச்சம் பாய்ச்சியுள்ளது . புல் , பூண்டு என கிண்டல் செய்யப்படும் பாரம்பரிய மருத்துவமுறைகள் நோயாளிகளுக்கு நோய் எதிர்ப்பு சக்தியை அளித்துள்ளன . சித்த மருத்துவத்தில் கபசுர குடிநீர் முக்கியமான உதாரணம் . பதினைந்து மூலிகைகளை கொண்டு மாத்திரை , சூரணமாக விற்கப்பட்டு வருகிறது . தமிழக அரசு இதனை மாநிலமெங்கும் குடிக்க பரிந்துரை செய்தது . அலோபதியை விட ஹோமியோபதி , சித்த ஆயுர்வேத மருந்துகள் கோவிட் -19 க்கு சிறப்பான பயன்களைத் தந்துள்ளன . புகழ்பெற்ற தெரபி முறைகள் ரெஃப்ளெக்ஸாலஜி உடலின் பல்வேறு ஆற்றல் புள்ளிகளை தடையில்லாமல் இயங்கச்செய்த