இடுகைகள்

செக்ஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆரோக்கியமான உறவுக்கு செக்ஸ் - பாலுறவு அவசியமா?

படம்
 அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி  ஆரோக்கியமான உறவுக்கு செக்ஸ் - பாலுறவு அவசியமா? பொதுவாக திருமண உறவில் பாலுறவு முக்கியமான அங்கம் வகிக்கிறது. பெண்களின் இன்பம் என்பதற்கும் குழந்தை பெறுவதற்கும் எந்த தொடர்புமில்லை. பிள்ளை பெற்றவர்களுக்கு கூட உடலுறவில் முழுமையான திருப்தி இல்லாமல் இருக்கலாம். உடல்ரீதியான தொடர்பு என்பதை உறுதியாக கொள்பவர்களே, இன்பத்தில் கரைத்துக்கொள்பவர்களே இசைவான தம்பதிகள். ஆண், பெண் என இருபாலருக்கும் வயது, பக்குவம் என்பது பாலுறவில் மாறுபடலாம். ஆனால், பாலுறவு முக்கியமானது என்பதை உளவியலாளர்கள் ஏற்கிறார்கள். சுய இன்பம் என்பது ஒருவர் தான் மட்டுமே இன்பத்தை அனுபவிப்பது. பாலுறவு என்பதில் ஆண், பெண் இருவருமே இன்பத்தை பகிர்ந்துகொள்கிறார்கள். திருக்குறளின் காமத்துப்பால், காமசூத்திரம் ஆகிய நூல்களை தெளிவாக பொருளுணர்ந்து படித்து காமத்தில்  ஈடுபடுவது நல்லது.  ஆணுக்கும் பெண்ணுக்குமான பாலுறவு வேறுபாடுகள் என்ன? ஆண்கள், ஆபாசபடங்களைப் பார்த்து ஊக்கம் பெறுகிறார்கள். அந்தவகையில் அவர்கள் புகைப்படங்கள், காணொளி பார்த்து எழுச்சி பெறுகிறார்கள். உடலுறவில் ஈடுபடுகிறார்கள். ஆனால்...

திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா?

படம்
  அறிவியல் கேள்வி பதில்கள் மிஸ்டர் ரோனி திருமணத்தில் பாலுறவு அதிக முக்கியத்துவம் கொண்டதா? பெரும்பாலான திருமணங்களில் பாலுறவுக்கு முக்கிய பங்களிப்பு உள்ளது. திருமணம் செய்வதே வம்ச விருத்திக்குத்தானே? திருப்திகரமான பாலுறவு தம்பதிகளுக்கு நெருக்கமான உறவை ஏற்படுத்துகிறது. ஆண், பெண் என இருவரும் உடல், சிந்தனை அளவில் வேறுபட்டவர்கள். பாலுறவில் ஏற்படும் திருப்தி, குறைகளை களைய உதவுகிறது. அனைத்து தம்பதிகளும் பாலுறவுக்கு முக்கியத்துவம் தருகிறார்களா என்றால் கிடையாது. வயது முதிர்ச்சி அடையும்போது, ஒருவரின் பாலுறவு ஆர்வம், வேகம், திறன் குறையும். பாலுறவு நல்ல முறையில் அமைந்தால் திருமண தம்பதிகள் ஒருவருக்கொருவர் ஒத்திசைந்து போக வாய்ப்புண்டு. சுகர் டாடிக்கள் காசு கொடுத்து கல்லூரி பெண்களை தடவி மகிழ்வது கூட பாலுறவின் இன்பத்தை கொஞ்சமேனும் தொட்டுப் பார்க்கலாமே என்றுதான்.  திருமண உறவில் பாலின பாத்திரங்கள் எப்படி செயல்படுகின்றன? ஆண் மேலாதிக்க சமுதாயத்தில், ஆண்தான் குடும்பத்தலைவர். பெண், அவனுக்கு உதவி செய்யும் துணைப்பாத்திரம்தான். தமிழ் திரைப்படங்களில் வரும் கலையரசன், வாகை சந்திரசேகர் போல குடும்பத்திற்காக ...

சீன மினி டிராமாக்களில் உள்ள கிளிஷேக்கள்!

  சீன மினி டிராமா சீனர்கள் ஏராளமான மினி டிராமாக்களை தயாரித்து தள்ளுகின்றனர். அவை பெரும்பாலும் டிடி1 இல் வரும் டெலிபிலிம் தரத்தில் உள்ளன. டிராமா தலைப்பை சீனமொழியில் எழுதிவிடுகிறார்கள். இதனால் நாடக தலைப்பை குறிப்பிட முடியவில்லை.  நிறைய வசனங்களை எழுதிவிடுகிறார்கள். அதை மானாவாரியாக பேசித் தள்ளுகிறார்கள்.  காமெடிக்கு நிகராக பல பெண்களை பெண்டாளும் ஆண் நாயகனாக இருக்கிறான்.  பெண் அரசியாக இருந்தாலும் அவளை நாயகன் காமக் கண்ணோட்டத்தில் மட்டுமே பார்க்கிறான். அவளை பெண் என்ற அடிப்படையில் பார்க்கிறான். மதிக்கிறான். அவளது அறிவுக்கு புத்திசாலித்தனத்திற்கு எந்த மதிப்பும் கொடுப்பதில்லை.  தொன்மை காலத்தில் நவீன அறிவியல் கருவிகள் வருவது போல ஏராளமான நாடகங்கள் எடுக்கப்பட்டுள்ளன. இப்படியான கதையில் எந்த லாஜிக்கும் கிடையாது. நீங்கள் ரிலாக்சாக காலை நீட்டிவிட்டு பார்க்கலாம். நல்லதே நடக்கும். நாயகனே ஜெயிப்பான்.  பெண் அரசன் அதாவது ஆண் என சொல்லி அரசாளுவாள். அதை நாம் ஒரே பார்வையில் அறிந்துகொள்ளும்போது அன்றைய கால அமைச்சர்கள் கண்டுபிடிக்க ஒன்றரை மணிநேரம் தேவைப்படுகிறது. பெண் திறமையாக இருந்து ஆ...

தர்மம் அர்த்தம் காமம் என உறவுகளில் அறநெறியை வலியுறுத்தும் காம சூத்திரம்!

படம்
       காமசூத்திரம் நாராயண ரெட்டி விகடன் பிரசுரம் ப.1000க்கும் மேல் விலை 230 நூலின் பெயர் காமசூத்திரம் என்றவுடன் பல்வேறு போஸ்களை கற்பனை செய்யவேண்டாம். இந்த நூல் முழுக்க தர்மம், அர்த்தம், காமம் என அடிப்படை நீதிநெறிகளைப் பேசுகிறது. நூலில் எவ்வித ஓவியங்களும் கிடையாது. அப்படி தேடுபவர்கள் வேறு நூல்களை தேடுங்கள். கண்டடையலாம். வடமொழி நூலை தமிழில் மொழிபெயர்த்து இருக்கிறார்கள். அதை புரிந்துகொண்டால் நூலை வாசிக்கும்போது ஏற்படும் இடர்ப்பாடுகளை முன்னமே சகித்துக்கொள்ள முடியும். நூலில் வாத்சாயனார் சொன்னது மட்டும் இல்லை. நாராயண ரெட்டி சொல்லும் பழைமைவாத கருத்துகளும் ஏராளம் உள்ளன. அவற்றை அன்னம் போல பிரித்துப்போட்டுவிட்டு அடிப்படையாக மூல ஆசிரியர் என்ன சொன்னாரோ அதை மட்டும் படிக்கலாம். காமம் என்பதை வாத்சாயனார் முன்னிலைப் படுத்தவில்லை. பெண்ணிடம் மென்மையாக பேசுவது எப்படி, மனதை தாம்பத்திய உறவுக்கு தயார்படுத்துவதற்கான ஆலோசனைகள், உத்திகள் ஆகியவற்றைக் கூறுகிறார். பலவந்தம் என்பதை அவர் ஆதரிக்கவில்லை. அதேசமயம் அவரின் காலத்தில் அரசர்கள், மந்திரிகள், பிரபுக்கள் பிடித்த பெண்களை அடைய பைசாசிக, ராட்சஸ ...

நடுத்தர குடும்பத்திற்கு வரும் அடுத்தடுத்த பணப்பிரச்னையால் தவறான வழிக்கு இறங்குகிறார்கள். விளைவு?

படம்
    நாராயணா அண்ட் கோ தெலுங்கு பட்ஜெட் படம். கதை, திரைக்கதை, இயக்கம் என அனைத்திலும் பணத்தின் பற்றாக்குறை தெரிகிறது. வங்கியில் காசாளராக உள்ளவர் நாராயணா. கிடைக்கும் வருமானத்தில் மனைவி, இரு பையன்கள் என குடு்ம்பத்தை சமாளித்து வருகிறார். மனைவி பட்டுப்புடவை பைத்தியம். மகன் கிரிக்கெட் சூதாட்ட வெறியன். இளையமகன் செக்ஸ் வெறியன். இப்படிப்பட்டவர்கள் குடும்பத்தில் பிரச்னை வராமல் எப்படி இருக்கும்? நாயகனை நல்லவர் என்று கூறிவிட முடியாது. எப்போதும் குறுக்குவழியில் சம்பாதிக்க நினைக்கத் துடித்துக்கொண்டிருப்பவர். அந்த வகையில் கிரிக்கெட் பெட்டிங்கில் ஈடுபட்டு பத்துலட்சம் கடன்படுகிறார். இத்தனைக்கும் படிப்பு வராமல் வாடகை டாக்சி ஓட்டி வருகிறார். அப்படி வேலை செய்யும் நிலையில் ஓசி பார்ட்டிக்கு சென்று வருகையில் ஒரு பெண்ணோடு கசமுசா செய்துவிடுகிறார். அந்த சமாச்சாரமே அப்பெண் சொல்லித்தான் நாயகனுக்கு தெரிகிறது. அதுவும் கர்ப்பமாக இருக்கிறேன் என்று சொல்லுகிறார். இதனால் அவரை மணம் செய்துகொள்ள வேண்டி வருகிறது. அந்த காட்சிகள் நன்றாக எடுக்கப்பட்டுள்ளது. ஆனால், அதற்கு மேல் படம் பெரிதாக முன்னேறவில்லை. நகைச்சுவையும் கை...

டாமினன்ட் ஆட்களை அடையாளம் அறிய சில வழிகள்!

படம்
  ஆதிக்கவாதி கேரக்டர்களை எளிதாக கண்டுபிடித்துவிடலாம். தான் தவறு செய்கிறோம் என்றால் அதை பகிரங்கமாக ஏற்கமாட்டார்கள். அறிமுகமில்லாத ஊருக்கு போகிறீர்கள்.அங்கு குறிப்பிட்ட இடத்திற்கு போக பஸ் தேவை. ஆனால் எந்த பஸ் என தெரியவில்லை. அதற்கு இன்னொருவரின் உதவியை நாடவேண்டும். ஆனால் ஆதிக்கவாதிகள், அதற்கு மலைப்பார்கள். அங்கும் இங்கும் அலைந்துகொண்டிருப்பார்கள். ''எனக்கு உங்களோட உதவி தேவை, உதவறீங்களா?’’ என்று கேட்க ஆதிக்கவாதி மனிதர்களின் மனம் ஒப்புக்கொள்ளாது. அதுதான் அவர்களது பலவீனம். எப்போதும் மனதில் பெருமை சூழ இருப்பார்கள். தன்னை மிகவும் நேர்த்தியானவர்கள் என்று காட்டிக்கொள்பவர்கள், அவசியமான உதவியைக்கூட பிறரிடம் கேட்கத் தயங்குவார்கள். இதில்தான் ஆதிக்கவாதி ஆட்கள் மாட்டிக்கொள்கிறார்கள். உதவியை கேட்டால், இதுவரை தான் உருவாக்கிய தன்னைப் பற்றிய அனைத்து மாயைகளும் உடைந்துவிடுமே என பயப்படுகிறார்கள். ஒருவர் பிறருக்கு அதிகாரமளிப்பது எப்போது நடக்கிறது? உங்கள் நண்பர் உங்களை நம்பி வீட்டுசாவியைக் கையில் கொடுக்கிறாரா? தனக்கு உணவை ஹோட்டலில் ஆர்டர் செய்ய ஓகே சொல்கிறாரா? பள்ளி, கல்லூரிகளில் உங்கள் நண்பர்கள் வாக்க...

டாமினன்ட் ஆட்களை புரிந்துகொள்வது எப்படி?

படம்
டாமினன்ட்/ சப்மிஸிவ் என இரண்டு வகையான உறவு உள்ளது. டாமினன்ட் என்பதை ஆதிக்கவாதி, சப்மிஸிவ் என்பதை அடிமை என்றும் குறிப்பிடலாம். பிடிஎஸ்எம் உறவு முறையில் இதுபோல இருவர் வாழ்வது உண்டு. இந்த உறவு, இருவரும் ஏற்றுக்கொண்டுதான் தொடங்குகிறது. இதில் ஆதிக்கவாதி என்று கூறுபவர், ஆதிக்கம் செலுத்துவார். இவரை அடிமை பின்தொடர்கிறார். ஆதிக்கவாதி என்பவர் எப்படி இருப்பார், அவரது குணம் என்ன என்று கண்டுபிடிப்பது கடினம். அந்தளவு எளிதாக அவரை கண்டறிய முடியாது. அவருக்கு அதிகாரம் தேவை. அதை பிறர் மீது பயன்படுத்துவார் என உடனே நினைக்காதீர்கள். தன்னுடைய வாழ்க்கை, சூழல், தானுள்ள இடம் என அனைத்திலும் கையில் லகானைக் கொண்டிருக்க வேண்டும் என நினைப்பவர். அப்படியென்றால் இப்படியான ஆள் சைக்கோபாத்தோ என உளவியல் ஆய்வு செய்ய நினைக்க கூடாது. அப்படி சோதனை செய்து லேபிள் குத்துவதை ஆதிக்கவாதி ஆட்கள் விரும்புவதில்லை. ஒருவரின் அடிமனதில் உள்ள கோபத்தை, வன்மத்தை வெளியே கொண்டு வர பெரிய சிரமங்கள் ஏதும் படவேண்டியதில்லை. அவருக்கு செய்யும் செயலில், இருக்கும் இடத்தில் கூடுதல் அதிகாரம் கொடுத்தால் போதும். உள்ளிருக்கும் பொய், புரட்டுகள்,மோசடித்தனங்கள...

காஸனோவா, ஒரு பெண் மீது கொள்ளும் காதல் வழியாக உறவுகளின் மதிப்பை அறிந்துகொள்ளும் கதை!

படம்
                கிரேக்க வீருடு நாகார்ஜூனா , நயன்தாரா பெண்கள் என்றாலே உடல் இன்பத்திற்கு மட்டும்தான் என நம்பும் ஒருவர் சூழல்களால் மனம்மாறி குடும்பத்தை நேசிப்பதோடு , காதலித்த பெண்ணை திருமணம் செய்வதுதான் கதை . வெளிநாட்டு தொழிலதிபர் நாகார்ஜூனா . அவரும் , உறவு முறையில் மாமாவும் , நெருங்கிய நண்பன் என இணைந்து நிறுவனத்தை தொடங்கி நடத்தி வருகிறார்கள் . தனது செல்வாக்கு , அழகு ஆகியவற்றைப் பயன்படுத்தி ஏறத்தாழ 99 பெண்களை படுக்கையில் வீழ்த்துகிறார் கிங் நாகார்ஜூனா . பெண்களை போகப்பொருளாக பார்க்கிறார் . நெருக்கமான உறவை அவர் விரும்புவதில்லை . இதனால் அவர் மகிழ்ச்சியாக இருக்கிறார் . இந்த நேரத்தில் அவரால் செக்சுக்காக பயன்படுத்தப்பட்ட பெண் ஒருத்தி , அவருடைய சிஎஸ்ஆர் திட்டம் ஒன்றை வன்மத்தோடு உருக்குலைக்கிறாள் . இதனால் , அந்த பணியை ஒப்படைத்த நிறுவனம் நாகார்ஜூனா மீது வழக்கு போட்டு வெல்கிறார்கள் . அதிக அளவு தொகையில் அபராதம் கட்ட வேண்டும் என்பதே பெரிய பிரச்னை . இந்த நேரத்தில் கிங்கிற்கு இந்தியாவில் பூர்விகமான தாத்தாவிடமிருந்து போன் வருக...

சாக்சியின் கவர்ச்சி தாராளத்தில் களைகட்டும் யுவராஜூ!

படம்
  யுவராஜூ   மகேஷ்பாபு பால் வடியும் முகத்துடன் பிளேபாயாக நடித்துள்ள படம். படத்தை யாருக்காக பார்ப்பது என்றால், தயங்கவே வேண்டாம். சாக்சி சிவானந்தின் கவர்ச்சிக்காக பார்க்கலாம். மூன்று பாடல்கள் அவருக்கென இருக்கிறது. ஒரு பாடல் சிம்ரனுக்காக. இன்னொரு பாடல் நாயகனின் அறிமுகம். மனதை திருடிவிட்டாய் படத்தில் பிரபுதேவா, கௌசல்யாவின் அறைக்கு குடிபோதையில் சென்று தூங்கும் பெண்ணை   கசகசா செய்வாரில்லையா அதே போல்தான் படத்தில் ட்விஸ்ட் உள்ளது. இதில் அந்த சமாச்சாரத்தில் ஆண் குழந்தையைப் பெற்று வளர்த்தே வருகிறார் சிம்ரன். இந்த உண்மையை தெரிந்துகொண்டு மகேஷ்பாபு தனது கல்யாணத்தை நிறுத்தி, சிம்ரனோடு சேர்கிறார். ஆனால், அதற்குள் சாக்சியோடு மழை நடனம் ஆடி, நிச்சயதார்த்தத்தின் போது முதுகு, இடுப்பு, உதடு என முத்தம் கொடுத்து பலவித இளமைக் குறும்புகளை செய்துவிடுகிறார். அதற்குப்பிறகுதான் உண்மை தெரிகிறது. யாருக்கு? முதலில் மகேஷூக்கு பிறகு சாக்சிக்கு. அப்படியும் கூட சிம்ரனுக்கு ரத்தவாந்தி ஏற்பாடு செய்திருக்கிறார். இயக்குநர். ஆனாலும் கூட இறுதியில் சாக்சிக்கு வாய்ப்பு கிடைக்கவில்லை. மகேஷோடு வாழத்தான். வேறு எத...

உலகை மேம்படுத்தும் முக்கியமான போராளிகள், செயல்பாட்டாளர்கள் - டைம் 100

படம்
  ஷாய் சுரூய் 26 பழங்குடி நிலங்களைக் காப்பவர் சுரூய் பிரேசில் நாட்டைச் சேர்ந்தவர். பால்டர் சுரூய் எனும் பழங்குடி இனத்தைச் சேர்ந்தவர். சட்டம் படித்துள்ளார். தனது படிப்பை அடிப்படையாக வைத்து பாரிஸ் ஒப்பந்தத்தை அனுசரிக்காத தனது நாட்டு அரசு மீதே வழக்கு போட்டுள்ள தைரியசாலி. ரோண்டோனியாவில் இளைஞர்களுக்கான அமைப்பை நிறுவி சூழலைக் காக்க பாடுபட்டு வருகிறார். மேலும் முப்பது ஆண்டுகளாக பழங்குடி மக்களுக்காக இயங்கும் அமைப்பையும் ஆதரித்து வருகிறார். ஜிபிஎஸ், கேமரா ஆகியவற்றை இணைத்து தனது பழங்குடி நிலத்தை அரசிடமிருந்தும், பெருநிறுவனங்களிடமிருந்தும் காக்க முயன்று வருகிறார். “நாம் பூமித்தாயின் பிள்ளைகள். உலகம் அழிவதற்கு எதிராக பல்வேறு தீர்வுகளை கண்டுபிடித்து அதை கூறிவருகிறோம்” என்றார். அர்மானி சையத்   பூமெஸா நந்திதா நந்திதா வெங்கடேசன், 33 பூமெஸா சிலே, 33 நோயாளிகளுக்காக போராடும் போராளிகள் மேற்சொன்ன இருவருமே காசநோயில் விழுந்து எழுந்தவர்கள்தான். அதற்காக எடுத்துக்கொண்ட மருந்துகளின் பக்க விளைவால் காது கேட்கும் சக்தியை இழந்துவிட்டனர். இதற்கு சிகிச்சைக்கு பயன்படுத்திய மருந்துகளில் உள்ள நச்சு...

உண்மையான காதலை தவறான மனிதர்களிடம் தேடும் இருவரின் கதை!

படம்
  ஃபர்பெக்ட் கிரைம் - ஜே டிராமா பர்ஃபெக்ட் கிரைம் ஜே டிராமா ராக்குட்டன் விக்கி ஏடிபி என்ற கட்டிட உள் அலங்கார நிறுவனம் ஜப்பானில் இயங்கி வருகிறது. இதில் வேலை செய்யும் டைரக்டர் தகாகுமா சானுக்கு, பிளானிங் பிரிவில் உள்ள மசிமா கவோரி என்ற இளம்பெண்ணோடு முறை தவறிய உறவு இருக்கிறது. அடிக்கடி உடலுறவு கொள்கிறார்கள். அவர்கள் அலுவலகத்திலும் இந்த செக்ஸ் உறவை சிலர் அறிந்திருக்கிறார்கள். டைரக்டருக்கு மணமாகியிருக்கிறது. அவரது மனைவி அவரை காதலிக்கிறார் . ஆனாலும் அவரது கணவர் மசிமாவின் இளமையான உடலுக்கு அடிமையாகி செக்ஸ் இன்பம் அனுபவித்து வருகிறார். மசிமாவுக்கு இந்த உறவு வெளியே தெரிந்தால் தனக்கு கெட்டப்பெயர் ஏற்படும் என நினைக்கிறாள்.   ஆனால் அதில் இருந்து அவளால் உண்மையாகவே வெளியே வர முடியவில்லை. அப்போது அமெரிக்க தலைமை அலுவலகத்தில் இருந்து சினோமோ சான் என்ற வடிவமைப்பாளர் வருகிறார். அவர், மசிமாவின் தகாத உறவை அறிந்து அதை துண்டித்துக் கொள்ள அறிவுறுத்துகிறார். அந்த உறவை துண்டித்துக்கொண்டு சினோமோவுடன் அவள் காதல் கொள்கிறாள். இந்த உறவு நிலைத்ததா, உண்மையான காதலாக மாறியதா என்பதே இறுதிப்பகுதி.   ...