சாக்சியின் கவர்ச்சி தாராளத்தில் களைகட்டும் யுவராஜூ!
யுவராஜூ
மகேஷ்பாபு
பால் வடியும் முகத்துடன் பிளேபாயாக நடித்துள்ள படம். படத்தை யாருக்காக பார்ப்பது என்றால்,
தயங்கவே வேண்டாம். சாக்சி சிவானந்தின் கவர்ச்சிக்காக பார்க்கலாம். மூன்று பாடல்கள்
அவருக்கென இருக்கிறது. ஒரு பாடல் சிம்ரனுக்காக. இன்னொரு பாடல் நாயகனின் அறிமுகம்.
மனதை திருடிவிட்டாய்
படத்தில் பிரபுதேவா, கௌசல்யாவின் அறைக்கு குடிபோதையில் சென்று தூங்கும் பெண்ணை கசகசா செய்வாரில்லையா அதே போல்தான் படத்தில் ட்விஸ்ட்
உள்ளது. இதில் அந்த சமாச்சாரத்தில் ஆண் குழந்தையைப் பெற்று வளர்த்தே வருகிறார் சிம்ரன்.
இந்த உண்மையை தெரிந்துகொண்டு மகேஷ்பாபு தனது கல்யாணத்தை நிறுத்தி, சிம்ரனோடு சேர்கிறார்.
ஆனால், அதற்குள் சாக்சியோடு மழை நடனம் ஆடி, நிச்சயதார்த்தத்தின் போது முதுகு, இடுப்பு,
உதடு என முத்தம் கொடுத்து பலவித இளமைக் குறும்புகளை செய்துவிடுகிறார். அதற்குப்பிறகுதான்
உண்மை தெரிகிறது. யாருக்கு? முதலில் மகேஷூக்கு பிறகு சாக்சிக்கு. அப்படியும் கூட சிம்ரனுக்கு
ரத்தவாந்தி ஏற்பாடு செய்திருக்கிறார். இயக்குநர். ஆனாலும் கூட இறுதியில் சாக்சிக்கு
வாய்ப்பு கிடைக்கவில்லை. மகேஷோடு வாழத்தான். வேறு எதையும் கற்பனை செய்துகொள்ளாதீர்கள்.
மகேஷின் பெயர்
ஶ்ரீனிவாஸ், சாக்சி பெயர் ஶ்ரீவள்ளி. இந்த பாத்திரங்களை எப்படி வடிவமைத்திருக்கிறார்கள்
என்றே புரியவில்லை. கல்லூரிக்கு தொப்புள் தெரிய
உடை உடுத்தி செல்லும் ஶ்ரீவள்ளி, பாரில் ட்ரான்ஸ்பரன்ட் உடை உடுத்தி நடனம் ஆடுகிறார்.
தனது நண்பனிடம் ஸ்கைப்பில் உரையாடும்போது டவல் கட்டியபடி பேசுகிறார். இதை என்னவென்று
சொல்வது என புரியவில்லை. அவர் வெளிநாட்டு நண்பராக இருந்தாலும் ஶ்ரீவள்ளியின் வயதுதான்.
ஏறத்தாழ பிளேபாயாக திரியும் ஶ்ரீனிவாஸ் வயது.
கதையில் பெரிய
சுவாரசியம் இல்லை. வெளிநாட்டில் படிக்கும் ஶ்ரீனிவாஸ். மது, மாது, செக்ஸ் என வாழ்கிறார்.
எனவே அவரை நல்வழி படுத்த அம்மா, இந்தியாவில் ஆந்திராவுக்கு கூட்டி வருகிறார். இங்கு
வரும் ஶ்ரீனி வெளிநாடு போலவேதான் இருக்கிறார். கூடுதலாக ஶ்ரீவள்ளியை டீஸ் செய்து அவரை
காதலிக்கிறார். அவர் கோவிலுக்கு ஷார்ட்ஸ் போடாமல் தலையை முக்காடிட்டு வந்து தனது அம்மாவை
காலில் விழுந்து வணங்குவது கண்டு கல்யாணம் செய்துகொள்ள நினைக்கிறார். நிச்சய விழாவில்
ஶ்ரீவள்ளியின் தோழி ஶ்ரீலதா வருகிறார். அவர்தான் இடுப்பழகி சிம்ரன். அவர் தனது மகனுடன்
வருகிறார். விஷயம் புரிகிறதா? நெவர் பிஃபோர் எவர் ஆஃப்டர் ஸ்டோரி இதுதான்.
வெளிநாட்டில்
பழங்குடிகளை ஆராய்ச்சி செய்யப்போய் மகேஷூடன் உறவு கொண்டுவிடுகிறார் சிம்ரன். அதாவது,
ஒன் நைட் ஸ்டாண்ட். மகேஷின் குணத்திற்கு உறவு கொள்வது என்பது பெரிய விஷயமே இல்லை. அவர்
தினசரி அப்படித்தான் வாழ்கிறார். வீட்டுக்கே அவரது வெள்ளையின காதலிகள் வந்து போகிறார்கள்.
ஆனால், சிம்ரன் தன்னோடு உறவு கொண்டதால் மகேஷ் தன்னை காதலிக்கிறான் என நினைக்கிறார்.
ஆனால் அவரே முட்டாள் என சர்வசாதாரணமாக கூறிவிட்டு செல்கிறார்.
ஆனால் சிம்ரன்
காதலின் அடையாளமாக கருவுற்று பிள்ளையை பெற்றெடுக்கிறார். அவரைப் பார்த்து மகேஷ், கண்ணீர்
சிந்துகிறார். வேறுவழியின்றி அவரை வைத்து சிம்ரனுடன் சேரும் சூழல்.
சிம்ரன் ஏர்போர்ட்டில்
ரத்தவாந்தி எடுக்கும்போது கூட செத்துரு சவமே… மகேஷ் சாக்சியோடு வாழட்டும் என நமது அந்தராத்மா
கதறுகிறது. ஆனால் இயக்குநர் ஒரு பாட்டில் ரத்த வாந்தி எடுத்தாலும் சிம்ரன்தான் மகேஷூடன்
சேர வேண்டுமென கச்சை கட்டி படத்தை எடுத்திருக்கிறார். சாக்சி கையைவிட்டு போய்விட்டார்
என வருத்தமாகவே இருக்கிறது.
குழந்தை பெறுவதற்கு காதல் தேவையில்லை. அந்த நேரத்தில்
மதுவெறியில் உடலுக்கு தேவை ஏற்பட சிம்ரனை பயன்படுத்திக்கொள்கிறார் மகேஷ். இறுதிவரை
அவருக்கு சிம்ரன் மீது காதலே வரவில்லை. அப்புறம் ஏன் மகன் என்ற ஒரு சிக்கலை மையமாக
வைத்து ஒன்று சேரவேண்டும்?
சாக்சியை
மகேஷ் காதலிக்கிறார். அவரால் காதலிக்கப்படவேண்டும் என முயல்கிறார். இந்த காதலை, காதலியை
மகேஷின் அம்மாவும் கூட ஏற்கிறார். இருவரும் பல்வேறு சில்மிஷங்களைச் செய்கிறார்கள்.
நிச்சயம் முடிந்த பிறகும் கூட கல்யாணத்தை சிம்ரனை வைத்து நிறுத்துவது ஏற்கவே முடியவில்லை.
மகேஷூக்கு சாக்சி மீது கட்டற்ற காதல் உள்ளது. ஆனால் சிம்ரன் மீது இல்லை.
சிம்ரன் பெற்றது
தனது பிள்ளை என்று தெரிந்த பிறகு மகேஷ் சொல்வது, உனக்கு என்மீது காதல் இருந்தால் அதை
சொல்லியிருக்கலாம். ஆனால் அதை ஏன் சொல்லவில்லை என பேசுகிறார். ஆனால், கதையில் அவர்
சிம்ரனால் காதலிக்கப்பட்டதை பெரிதாக எடுத்துக்கொள்ளவில்லை. ஆனால், செய்த உடலுறவால்
மகன் உருவாகியிருப்பதைத்தான் சங்கடமாக எதிர்கொள்கிறார்.
மகேஷ் பற்றி
உண்மை தெரிந்த்தும் சாக்சி ஏர்போர்ட் போகிறார். ஆனால் தனது கோபத்தை, விரக்தியை, மகேஷ்
கிடைக்காமல் போன துயரத்தை அவர் வெளிப்படுத்துவதே இல்லை. அவரது வீட்டில் உள்ளவர்களும்
மகேஷின் மோசடியை பெரிதுபடுத்துவது இல்லை. டேக் இட் ஈஸி போல…அரே துங்கபோத்து யெதவா….
கோமாளிமேடை
டீம்
கருத்துகள்
கருத்துரையிடுக