நியூஸ் கார்ப் - ஊடக குழுமத்திற்கு வரும் புதிய வாரிசு
நியூஸ் கார்ப்
- ஊடக குழுமத்திற்கு வரும் புதிய வாரிசு
ஆஸ்திரேலியா,
இங்கிலாந்து, அமெரிக்கா என பல்வேறு நாடுகளில் செய்தி ஊடகங்களை நடத்தி வந்த ரூபர்ட்
முர்டோக் பற்றி பலரும் அறிவார்கள். வலதுசாரி தாராளவாத கருத்துக்களைக் கொண்ட ஊடக முதலாளி.
இவர் இப்போது ஓய்வு பெறுவதாக கூறியிருக்கிறார். இவருக்கு அடுத்து மகன் லாச்லன் தனது
52 வயதில் நிறுவனத்தின் தலைவராக பணியாற்றவிருக்கிறார்.
ஃபாக்ஸ் கார்ப்,
நியூஸ் கார்ப் என இரண்டு நிறுவனங்களின் தலைவராக லாச்லன் பொறுப்பேற்கவிருக்கிறார்.
2019ஆம் ஆண்டே இவரை முர்டோக் தனது வாரிசு என்பதாக கூறிவிட்டார். இந்த வாய்ப்பை லாச்லன்
பயன்படுத்திக்கொண்டு எப்படி தன்னை நிரூபிக்கிறார் என்பதே முக்கியமான விஷயம்.
லாச்லன் லண்டனில்
பிறந்து அமெரிக்காவில் வளர்ந்தவர். பதினெட்டு வயதில் தனது அப்பாவின் ஊடக நிறுவனத்தில்
வேலைக்குச் சேர்ந்துவிட்டார். பிறகு நான்கு ஆண்டுகளில் தனக்கென தனி பத்திரிகையை உருவாக்கி
குயின்ஸ்லாந்தில் இயங்கினார். பிறகு 34 வயதில் நியூஸ் கார்ப்பின் அதிகாரம் வாய்ந்த
மூன்று அதிகாரிகளில் ஒருவராக அடையாளம் காணப்பட்டார். அமெரிக்காவில் இயங்கிய ஃபாக்ஸ்
டிவி சேனல்கள், நியூயார்க் போஸ்ட் ஆகிய நிறுவனங்களில் செல்வாக்கு செலுத்தினார்.
2005ஆம் ஆண்டு
நிறுவனத்தில் நேர்ந்த அரசியல் போட்டியில் அப்பா முர்டோக் மகனுக்கு ஆதரவாக நிற்கவில்லை.
ரோஜர் அய்லெஸ் என்பவருக்கு ஆதரவாக நின்றார். எனவே, லாச்லன், தனது மனைவி குழந்தைகளோடு
ஆஸ்திரேலியாவுக்கு திரும்பிச் சென்றார். அங்கு முதலீட்டு நிறுவனமான இல்ரியாவைத் தொடங்கி
நடத்தினார்.
2014ஆம் ஆண்டு
குடும்ப பஞ்சாயத்து காரணமாக சமாதானம் உருவானது.
ஃபாக்ஸ் கார்ப்பரேஷனின் இயக்குநராக நியமிக்கப்பட்டார். அந்த நேரம் 2019ஆம் ஆண்டு
டிஸ்னி நிறுவனத்திடம் செஞ்சுரி பாக்ஸ் நிறுவனம் விற்கப்பட்டது. டிரம்ப் தேர்தலில் வெல்லும்போது,
அவரின் படம் போட்ட டாய்லெட் பேப்பரை லாச்லன் வைத்திருந்ததாகவும், வெற்றியைக் கேட்டு
குடும்பத்துடன் அழுதார் என எழுத்தாளர் மைக்கேல் வோல்ஃப் கூறுகிறார். இவர் ஃபால் – தி
எண்ட் ஆஃப் ஃபாக்ஸ் நியூஸ் அண்ட் தி முர்டோக் டைனஸ்டி என்று நூலை எழுதியிருக்கிறார்.
2024ஆம் ஆண்டு
அமெரிக்காவில் சுதந்திர கட்சி வேட்பாளராக டிரம்பை நிற்க வைக்க ஃபாக்ஸ் டிவி சேனல்கள்
முயலும் என்பது வெளிப்படையாக தெரிகிறது. ஆனால், ஊடகங்களுக்கு இன்று பொருளாதார ரீதியாக
கடுமையான பிரச்னைகள் உள்ளன. இந்த சூழலில் லாச்லன் தனக்கு கொடுக்கப்பட்ட பொறுப்பை எப்படி
செய்வார் என்பதே நாம் பொறுத்திருந்து பார்க்கவேண்டிய விஷயம்.
எட் பில்லிங்டன்,
டொம்னிக் ருசெ
கார்டியன்
இதழ்
கருத்துகள்
கருத்துரையிடுக