தன்னியல்பாக நடைபெறும் மக்கள் போராட்டம் எந்த இடத்தில் தவறாக செல்கிறது? 2010-2020 மக்கள் போராட்டக்கதை!
போராட்டத்தின் வீழ்ச்சி
எங்கு தவறு நடைபெற்றது?
2010 -2020 வரையிலான காலகட்டத்தில் ஏராளமான போராட்டங்கள் சமூக வலைத்தளத்தின் மூலம் கட்டமைக்கப்பட்டு இளைஞர்கள் தெருவுக்கு வந்து போராடினார்கள். இதில் எந்த தலைவர்களும் இல்லை. தன்னியல்பாக கோபம் கொண்ட இளைஞர்கள், பெண்கள் பங்கேற்று போராட்டத்தை நடத்தினார்கள். இப்படி போராட்டம் நடைபெறுவதற்கு அரசியல் வெற்றிடம் காரணம் என சிலர் கருத்து கூறுகிறார்கள். ஆனால் அதற்கு எந்த அடிப்படையும் கிடையாது.
எகிப்தில் ராணுவம், பஹ்ரைனில் சவுதி அரேபியாவும் வளைகுடா கூட்டுறவு கௌன்சிலும், துருக்கியில் எர்டோகன், ஹாங்காங்கில் சீன அரசு, பிரேசில் நாட்டில் வலதுசாரி சக்திகள் என வெற்றிடம் நிரம்பப்பட்டது. எனவே இந்த எடுத்துக்காட்டுகளின் வழியாக வெற்றிடம் என்று கூறப்படும் இடத்தை நிரப்ப யாரோ ஒருவர் தயாராக இருப்பது உங்களுக்கு புரிந்திருக்கும்.
பிரேசில் நாட்டில் நடைபெற்ற போராட்டத்தின்போது இடதுசாரி ஆட்சி நடைபெற்று வந்தது. எம்பிஎல் என்ற இடதுசாரி குழு, பேருந்து விலை குறைப்பிற்கான போராட்டத்தை தொடங்கியது. அதற்கு நாடெங்கும் வரவேற்பு கிடைத்தது. இதனால் அந்த போராட்டத்தில் வலதுசாரி சக்திகளும் உள்ளே ஊடுருவின. அதற்குப் பிறகு போராட்டத்தின் நோக்கம் பேருந்து கட்டண விலைகுறைப்பு என்பது காணாமல் போய் இடதுசாரி ஆட்சியின் ஊழல் என்பதாக மாறியது. இதற்கு வெளிநாட்டு சக்திகளும் உதவின என்று வைத்துக்கொள்ளலாம்.
போராட்டத்தையும் வலதுசாரி இயக்கம் பெயரை சற்றே மாற்றி தன்னுடையதாக மாற்றி நடத்தியது. இதன் விளைவாக இடதுசாரி ஆட்சி கவிழ்ந்தது .அதிபர் ஊழல் புகாரில் கைதானார். வலதுசாரி தலைவர்கள் ஆட்சி அதிகாரத்தைப் பெற்றனர்.
இறுதியாக போராட்டத்தை தொடங்கிய இடதுசாரிக் குழுவிற்கு எங்கே தவறு செய்தோம் என்று புரியவில்லை. இத்தனைக்கும் நாடு முழுக்க அலைந்து திரிந்து குறைகளை அறிந்து போராடியவர்கள் அவர்களே. ஆனால் அந்த போராட்டத்தின் பயன் வலதுசாரி சந்தர்ப்பவாதிகளின் கையில் போய்விட்டது.
உக்ரைனில் 2013ஆம் ஆண்டு மக்கள் போராட்டம் நடைபெற்றது. அந்த போராட்டம் நாட்டிலுள்ள ஜனநாயகம், ஊழல் ஆகியவற்றை அகற்றுவதற்காக நடந்தது. ஆனால் இறுதியாக லட்சியம் எட்டப்பட்டதா என்றால் இல்லை. நாட்டின் நிலை அதைவிட மோசமாக மாறியது. பல்வேறு ஆண்டுகளுக்குப் பிறகு போராட்டத்தில் பங்கேற்றவர்களை சந்தித்து பேசியதில் அவர்கள் அனைவருமே லெனினியம் சார்ந்த வகையில் போராட்டத்தை ஒருங்கிணைக்கும் முடிவுக்கு வந்து சேர்ந்திருக்கிறார்கள். யாருமே தலைவர்கள் இல்லாத, அமைப்பு சார்ந்து இயங்கும், அரசுக்கு எதிரான என்று இயங்கவில்லை. அதை ஆதரிக்கவும் இல்லை.
2010-2020 காலகட்டத்தில் நடந்த போராட்டங்களை முழுக்க தோல்வி என்று கூற முடியாது. வெற்றி என்றும் கூற முடியாது. தென் கொரியாவில் கூட மெழுகுவர்த்தி ஏந்தி பிரதமருக்கு எதிராக போராட்டம் நடைபெற்றது. 2011ஆம் ஆண்டு, சிலி நாட்டில் அரசுக்கு எதிராக மாணவர்கள் போராட்டம் நடைபெற்றது. தோற்றுப்போன போராட்டங்களில் போராடியவர்கள் அனைவருமே தோல்வியை ஏற்பதில்லை. நாங்கள் விதையை விதைத்துள்ளோம். அதற்கான பயன்கள் பின்னாளில் கிடைக்கும் என்கிறார்கள். போராட்ட வெற்றி என்பது எளிதாக கிடைப்பதில்லை. அது உண்மைதான். போராட்டத்திற்கான லட்சியம், நோக்கம் தேவை.
வின்சென்ட் பெவின்ஸ், கார்டியன் நாளிதழில் எழுதிய கட்டுரையைத் தழுவியது.
pixabay
கருத்துகள்
கருத்துரையிடுக