இடுகைகள்

பொருளாதாரம் - வங்கி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கூட்டுறவு வங்கிகளை கையகப்படுத்தும ரிசர்வ் வங்கி! - கூட்டுறவு வங்கிகள் வாழுமா? வீழுமா?

படம்
இந்து தமிழ் ஆர்பிஐயின் பிடியில் கூட்டுறவு வங்கிகள்! கடந்த பிப்ரவரி மாதம், ரிசர்வ் வங்கி கூட்டுறவு வங்கிகளைக் கட்டுப்படுத்தும் சட்டத்திருத்தத்திற்கு மத்திய அரசு ஒப்புதல் அளித்தது. ரிசர்வ் வங்கி, கூட்டுறவு வங்கிகளின் செயல்பாட்டில் தலையிடுவதற்கு முக்கிய காரணம் இருக்கிறது. மும்பையில் 36 ஆண்டுகளாக செயல்பட்டு வந்த பஞ்சாப் மகாராஷ்டிரா கூட்டுறவு வங்கி திவாலான செய்தியை அறிந்திருப்பீர்கள். போலி கணக்குகள் மூலம் ஹெச்டிஐஎல் (HDIL) நிறுவனத்திற்கு 4,355 கோடி ரூபாய் கடன்தொகை, வழங்கப்பட்டிருப்பதை ரிசர்வ் வங்கி கண்டுபிடித்தது. இதனால், ஆயிரக்கணக்கான வாடிக்கையாளர்கள் பாதிக்கப்பட்டனர். சிலர் அதிர்ச்சியால் இறந்தும்போனார்கள். இதுபோன்ற பொருளாதார குளறுபடிகளையும், சட்டவிரோத செயல்பாடுகளையும் தீர்க்கவே ரிசர்வ் வங்கி, நாட்டிலுள்ள 1,500 கூட்டுறவு வங்கிகளையும் தனது கட்டுப்பாட்டில் கொண்டுவந்துள்ளது. இதற்கான அறிவிப்பை நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் மார்ச் மாதம், நாடாளுமன்றத்தில் வெளியிட்டார். வங்கி ஒழுங்குமுறைச்சட்டம் 1949 இன் கீழ் ரிசர்வ் வங்கிக்கு, கூட்டுறவு வங்கிகளை ஒழுங்குமுறைப்படுத்த அதிக அதிகாரம் வழங்கப்படுக

சாதி மனநிலையை மாற்றினால் மட்டுமே பொருளாதாரம் உயரும் - சேட்டன் பகத்

படம்
ஸ்கூப்வூப்  மனநிலையை மாற்றினால் மட்டுமே பொருளாதாரம் உயரும்! சேட்டன் பகத் நன்றி: டைம்ஸ் ஆப் இந்தியா 2017ஆம் ஆண்டு இந்திய அரசின் கடன் தகுதி மற்றும் வளர்ச்சி பற்றி மூடி நிறுவனம், சில இடங்களை முன்னேறியுள்ளது என்றதற்கு அரசிடம் நேர்மறையான தன்மை வெளிப்பட்டது. கடந்த வாரம் அதே மூடி நிறுவனம் இந்தியாவின் தகுதியை குறைத்து வெளியிட்டவுடன் அரசிடமிருந்து எந்த பதிலும் வரவில்லை. கனத்த சங்கடமூட்டும் மௌனம் அரசு தரப்பில் நிலவுகிறது. மூடி நிறுவனத்தின் செயல்பாடு எனக்கு பெரிய ஆச்சரியத்தை தரவில்லை. காரணம் பெருந்தொற்று காரணமாக இந்தியாவின் தரமதிப்பீடு புள்ளிகள் குறையவில்லை. முன்னர் இந்திய அரசு செய்த பொருளாதார தவறுகளின் விளைவாகவே இந்த தரமதிப்பீடு இந்தியாவுக்கு கிடைத்துள்ளது. இதனையும் அந்த நிறுவனம் தெளிவான தனது அறிக்கையில் குறிப்பிட்டுள்ளது. இதற்கு என்ன காரணம் என்று பார்ப்போம். தனியார் முதலீடுகளை ஈர்க்கும் வண்ணம் பல்வேறு கொள்கைகளையும், சீர்திருத்தங்களையும் அமல்படுத்தப்படுத்தவில்லை. பல்வேறு கொள்கைகளை மத்திய அரசும், மாநில அரசுகளும் முறையாக நடைமுறைப்படுத்தவில்லை. அவற்றில் சீரான செயல்பாட்டுத்தன்மை இல்லை.

மக்களுக்கு நேரடியாக பணம் வழங்குவது மட்டும் ஒரே வழி அல்ல! - நிர்மலா சீதாராமன்

படம்
நிர்மலா சீதாராமன் , நிதி அமைச்சர் இந்திய அரசு அறிவித்து ள்ள இருபது லட்சம் கோடி ரூபாய் நிதியுதவி இதுவரை இல்லாத அளவு மக்களிடம் கடும் விமர்சனங்களை கிளப்பியுள்ளது . அரசு இதனை எப்படி மக்களுக்கு அளிக்கவிருக்கிறது என்பது பற்றி நிதியமைச்சர் நிர்மலா சீதாராமனிடம் கேட்டோம் . இந்திய அரசு அளித்துள்ள நிதியுதவியை என்னென்ன அம்சங்களை பரிசீலனை செய்து அறிவித்துள்ளது ? இந்திய அரசு , பெருந்தொற்று பாதிப்பு ஏற்பட்டதிலிருந்து இதனால் ஏழைகள் , இடம்பெயர்ந்த தொழிலாளர்கள் பாதிக்கப்படுவார்கள் என்று கருதியது . பல்வேறு மாநிலங்களிலுள்ள நிதி அமைச்சர்கள் , அதிகாரிகள் , முதல்வர்கள் ஆகியோரின் பல்வேறு கருத்துகளைக் கேட்டு நாங்கள் இத்தொகையை அறிவித்துள்ளோம் . பிஎம் காரிப் கல்யாண் நிதியுதவி வேகமாக பல்வேறு மாநிலங்களுக்கு வழங்கப்பட்டு பாதிப்பைக் குறைத்தோம் . பிரதமர் அலுவலகம் , நிதியமைச்சக அலுவலகம் மற்றும் பிற துறைகள் அனைத்தும் ஒருங்கிணைவாக செயல்பட்டுத்தான் இந்த நிதி திட்டத்தை மக்களுக்கு கொண்டுபோய் சேர்த்துள்ளோம் . மக்களின் வங்கிக்கணக்குக்கு நேரடியாக பணம் அனுப்புவதை நீங்கள் ஏற்கவில்லையா ? அது வேலைவாய்ப்ப

நிதி வழங்காமல் செலவுகளைக் குறைக்க இந்திய அரசு வற்புறுத்துகிறது - கேரள நிதியமைச்சர் தாமஸ் ஐசக்

படம்
தாமஸ் ஐசக், மாத்ருபூமி தாமஸ் ஐசக், கேரள நிதியமைச்சர் பெருந்தொற்று பாதிப்பால் பொருளாதாரம் நலிந்துள்ளது. இதனை சரிசெய்ய எவ்வளவு காலம் பிடிக்கும் என்று நினைக்கிறீர்கள்? நாட்டில் உடனே நிலைமை சீராக வாய்ப்பில்லை. தொழில்துறைகள் இயங்கத் தொடங்கி நிலைமை இயல்புக்கு திரும்ப ஓராண்டு ஆகலாம். எங்கள் கேரள மாநிலத்தில் ஊரங்கு காலத்தில் ஜிஎஸ்டி 50 சதவீதம்தான் வசூலானது. இது மிகவும் குறைவான தொகையாகும். சிறு, குறு தொழில்கள் பணமதிப்பு நீக்க நடவடிக்கை தொடங்கி காணாமல் போகத் தொடங்கின. பெருந்தொற்று காலத்தில் அவை ஆதார வளங்கள் சரிவர கிடைக்காமல் தங்கள் தொழிலகங்களை மூடத்தொடங்கியுள்ளனர். நினைத்துப் பார்க்க முடியாத பொருளாதார சீர்குலைவு காலம்தான் இது. மாநிலங்கள் நிதி ஆதாரத்தை பெறுவதற்கான விதிகளை மாற்றிக்கொள்ள மத்திய அரசு உதவ வேண்டும் என்று தெலங்கானா முதல்வர் சந்திரசேகர் ராவ் கூறியுள்ளது பற்றி உங்களது கருத்து? அது சரியானதுதான். மாநிலங்கள் கடன் பெறுவதற்கான வரம்பை மத்திய அரசு உயர்த்தினால் பெருந்தொற்று காலத்தில் பல்வேறு உதவிகளை எளிதாக மக்களுக்கு வழங்க முடியும். பட்ஜெட்டிற்கு முன்னர் அனைத்து மாநில நிதியமைச்சர்கள் ம

நீங்களும் வங்கி தொடங்கலாம் எப்படி?

படம்
123RF.com உள்ளூர்ப்பகுதி வங்கி தொடங்குவது எப்படி? பாரத ரிசர்வ் வங்கி இந்தியா முழுக்க ஏராளமான கிளைகளை தொடங்கி செயல்பட்டு வருவதை கண்டிருப்பீர்கள். சில மாவட்டங்களிலுள்ள வங்கிகளுக்கு வேறு இடங்களில் கிளைகள் கூட இருக்காது. காரணம், இவை குறிப்பிட்ட மாவட்டங்களில் மட்டும் செயல்படும் லோக்கல் வங்கி. செந்தமிழில் ரிசர்வ் வங்கி இதனை உள்ளூர்ப்பகுதி வங்கிகள் என குறிக்கிறது. பல்லாண்டுகளாக நிதிச்சேவைகளை வழங்கி வந்த நிறுவனங்களுக்கு வங்கிச்சேவை அளிக்க ரிசர்வ் வங்கி அனுமதி அளித்து வருகிறது. உள்ளூர் வங்கி தொடங்குவதற்கு முன்பாக குழுமங்கள் பதிவாளர் அலுவலகத்தில் பதிவு செய்வது அவசியமில்லை. ஆனால் ரிசர்வ் வங்கியின் ஒப்புதல் பெறுவது மிக முக்கியம். மக்களுக்கான வங்கி! விண்ணப்பத்தில் இணைக்கப்படக் கோரும் ஆவணங்களை இணைத்து வங்கி வாரியக்குழு, தலைவர் ஆகிய தகவல்களுடன் ரிசர்வ் வங்கிக்கு விண்ணப்பிக்க வேண்டும். அனுமதி கிடைத்தபின், குழுமங்கள் பதிவாளரிடம் வங்கிப்பெயரை பதிவு செய்யலாம். உள்ளூர்வங்கியை குறைந்தது 4 லட்சம் பேர் உள்ள கிராமத்தில் அல்லது குறுநகரத்தில் தொடங்கலாம். பின்தங்கிய நகரில் தொடங்குவது சிறப்பு