இடுகைகள்

இன்சோம்னியா லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சமையல் கலைஞனை இயக்கும் சிறுவயதுத் தோழி! தீனி

படம்
      தீனி             தீனி தமிழ் டப் அசோக் செல்வன், நித்யா, ரிது ஏ.எஸ் சசி லண்டனில் உள்ள அமரா என்ற ஹோட்டலுக்கு தேவ் என்ற இளைஞன் வேலைக்கு வருகிறான். அவனுக்கு உடல் எடை அதிகம். தசை தொடர்பான நோய் இருப்பதாக கூறுகிறான். நிறைய நேரங்களில் திடீரென வினோதமாக நடந்துகொள்கிறான். பாத்திரங்களை தட்டி விடுகிறான். பிறர் மீது மோதுகிறான். யாரோ இழுத்தது போல வேறு திசைக்கு செல்கிறான். ஆனால் இந்த குறைபாடுகளைத் தாண்டி அவனுக்கு நல்ல மனம் உள்ளது. பிறரின் பிரச்னைகளை அவனால் கவனிக்கமுடியும்.  அவன் வேலை செய்யும் ஹோட்டல் தலைமை சமையல்காரர் நாசர் மிக கண்டிப்பானவர். அவர்  பதினைந்து ஆண்டுகளாக சமைக்காமல் இருக்கிறார். அதற்கு அவர் தனது ஆசை மகளை பிரிந்ததுதான் காரணம். இதனால் தினசரி தற்கொலை செய்துகொள்ளலாமா என்ற அளவிற்கு மன அழுத்தத்திற்கு சென்று திரும்புகிறார். இந்த நேரத்தில் தேவின் வருகை அவரசது செயல்பாடுகளில் மாற்றத்தை ஏற்படுத்துகிறது. இறுக்கமாக இருக்கும் அந்த சமையல் அறையின் சூழலை கலகலப்பாக மாற்றுகிறான் தேவ். அவன் சமையல் காரன் என்றாலும் கூட அவனை உடனே சமைக்க விடவில்லை. பாத்திரங்களை கழுவ வைக்கிறார்கள். இதற்கெல்லாம் அவன் கவலைப்பட

இசட் டிரக்ஸ் - தூக்கமாத்திரைகளை ஒழுங்குமுறை செய்வதன் அவசியம் என்ன?

படம்
          இசட் டிரக்ஸ் தூக்கமின்மைக்கு மருத்துவர்கள் வழங்கும் மருந்துகளை இசட் டிரக்ஸ் என்று அழைக்கின்றனர் . ஸோல்பைடம் , ஸோபிகுளோன் , ஸால்ப்ளோன் ஆகிய மருந்துகள் ஆம்பியன் , இன்டர்மெஸோ , சோனாடா என்ற பெயரில் விற்கப்படுகின்றன . 1980 களில் இம்மருந்துகள் புகழ்பெறத்தொடங்கின . பென்ஸோடியாஸ்பைன்ஸ் போன்ற வகையில் இசட் மாத்திரைகள் வேலை செய்கின்றன . ஒருவகையில் உடலில் வேகமாக செயல்படும் திறன் கொண்டவை . தினசரி களைப்பை குறைத்து உற்சாகம் அளிக்கிறது . ஆனால் இம்மாத்திரை அடிமைத்தனம் ஏற்படுத்துவதில் குறைவான விளைவுகளை ஏற்படுத்துகிறது என்கின்றனர் . கோடைன் , பென்ஸோடயாஸ்பைன்ஸ் ஆகிய மருந்துகளைப் போலவே இவையும் பயன்படுத்துவர்களை மெல்ல அடிமையாக்கும் குணம் கொண்டவை . இந்த மருந்துகளை ஒருவர் குறைந்தகாலத்திற்கு மட்டுமே பரிந்துரைக்க வேண்டும் . அதாவது ஒருமாதம் என்ற கால அளவிற்கு . இன்சோம்னியா ஏற்படுவதற்கு மனநிலைக் கோளாறுகளான பிளவாளுமை , பிடிஎஸ்டி , மன அழுத்தம் ஆகியவையும் முக்கிய காரணம் . இம்மருந்துகளைப் பயன்படுத்தி பாதிப்பு ஏற்படுவது பற்றிய புரிதல் மருத்துவர்களுக்கு இல்லை என்கிறார் மருத்துவர்

தூக்கம் வரலையா? இந்த டெக் ஐட்டங்களைப் பயன்படுத்துங்க!

படம்
பொதுவாக எங்கள் பக்கத்து வீட்டில் மனைவி, அதிகாலையில் எழாவிட்டால் தண்ணீர் பிடித்து வரும் கணவர் அடியே மூதேவி என்று அலறி மனைவியை எழுப்புவார். ரெஸ்ட் எடுத்தா தப்பாங்க என்பார் அவரின் மனைவி. வேலைதான் முக்கியம். ரெஸ்ட் அப்புறம் என்பார் மனைவி. இது நம்ம ஊரூ அலாரம் என நினைத்துக்கொள்ளுங்கள். விஷயம் இதுதான். இதெல்லாம் விட ஸ்மார்ட்டான ஆப், பொருட்கள் சந்தையில் கிடைக்கின்றன. அவற்றில் சில... காஸ்பர் லைட் 108 பௌண்டுகள் விலை கொண்ட லைட். வாங்கலாமா வேண்டாமா என்பது நிச்சயம் உங்கள் முடிவுதான். இதில் காலையில் எழும்போது உற்சாகமாக இருப்பதற்கான விஷயங்கள் கிடையாது. அதாவது, அதனை செட் செய்யும் மனதில்தான் உள்ளது. எனவே லைட்டை டிம்மாக வைப்பதாக, பிரைட்டாக வைப்பதா என முடிவு செய்து ஆப் மூலம் செட் செய்யலாம். அரோமா ஸ்லீப் ஷீப் தூக்கம் வர வைக்க இன்று செக்ஸ் மட்டும் உதவுவதில்லை. சிறிது நறுமணம் கொண்ட சுகந்தமான சூழலும் அவசியம். பல்வேறு வித எண்ணெய்களைக் கொண்ட இந்த பொருள், உங்கள் தூக்கத்திற்கு உத்தரவாதம் தருகிறது. டோடோவ் இந்த கருவியில் உள்ள நீலநிற ஒளி உங்கள் மூச்சின் வேகத்தை நிதானமாக

இன்சோம்னியா ஸ்டேஜ் 1 - தூக்கம் வராமல் தவிப்பதுதான்!

படம்
மிஸ்டர் ரோனி காலையில் நான்கு மணிக்கு எழுகிறேன். பின்னர் தூங்க முயன்றாலும் தூக்கம் வரமாட்டேன்கிறது. என்ன காரணம்? தூக்கம் வரவில்லையென்றால் அடையாளம் பதிப்பகத்தின் நூல்களை எடுத்து படியுங்கள். நூற்றாண்டுக்கான தூக்கம் உங்களை வந்தடையும். அப்படியும் தூக்கம் ஏமாற்றினால் பா.வெங்கடேசனின் நாவல்களை வாசியுங்கள்.இதற்கும் மிஞ்சி தூக்கம் வரவில்லை என்றால் உங்களுக்கு வந்திருப்பது இன்சோம்னியா ஸ்டேஜ் 1. சரியான மருத்துவரை அணுகி ஆலோசனை பெறுவது நல்லது. பொதுவாக தூக்கம் வரவில்லையென்றால், அரசு உத்தரவுப்படி திறந்துள்ள நள்ளிரவுக் கடைகளில் ஷாப்பிங் செய்யுங்கள். இல்லையெனில் அறைக்குள் நடக்கலாம். மொட்டைமாடியில் நடந்தால், மனைவியுடன் தூங்குபவர்கள் மிரள்வார்கள். எனவே அறைக்குள் தூக்கப் பஞ்சாயத்தை முடித்துக்கொள்ளுங்கள். இதற்கும் மிஞ்சி தூக்கம் பற்றாக்குறையானால் நீங்கள் மருத்துவரிடம் ஆலோசனை பெறுவது நல்லது. நன்றி - பிபிசி

ரத்தத்தில் காஃபீன் எவ்வளவு நேரம் இருக்கும்?

படம்
ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி  காபி, கோலா ஆகியவற்றிலுள்ள காஃபீன் நம் உடலில் எவ்வளவு நேரம் ஆக்டிவாக இருக்கும்? லியோ காபியில் சுரத்தே இல்லாத காபியை ஆஹா பேஷ் பேஷ் என சொல்லி குடித்தால் பிரமாதமாக காலை விடியும். குடித்தவுடனே ரத்தத்தில் 45 நிமிடங்கள் கழித்து வித்தியாசத்தை உணர்வீர்கள். ஆனால் இதே காஃபீனை மாத்திரையாக எடுத்துக்கொண்டீர்கள் என்றால், காஃபீன் ரத்தத்தில் பரவ 60 அல்லது 75 நிமிடங்கள் ஆகும். ஆறுமணிநேரங்களுக்குப் பிறகு காபீன் அளவு பாதியாக குறைந்துவிடும் என்பதே உண்மை. இதன் அர்த்தம், மாலை ஏழுமணிக்கு மாமி மெஸ்ஸில் காபி குடித்தால், இரவு பதினொரு மணிக்கு படுக்கும்போதும் ரத்தத்தில் காபீன் அழுத்தம் இருக்கும். நன்றி: பிபிசி படம் -டெம்போ இங்க்லீஸ்

தூங்கும்போது புதிய விஷயங்களைக் கற்க முடியுமா?

படம்
Pinterest/we heart it ஏன்?எதற்கு?எப்படி? மிஸ்டர் ரோனி தூங்கும்போது புதிய விஷயங்களைக் கற்க முடியுமா? ஆர்க்கிமிடிஸ் யுரேகா என்று கத்தியதை மனதில் வைத்து இப்படியொரு கேள்வி வந்திருக்கலாம். நாம் எதை மனதில் தீவிரமாக யோசிக்கொண்டு இருக்கிறோமோ அதற்கான தீர்வு நமக்கு கிடைக்கும். அது எப்படி கிடைக்கிறது என்பதுதான் மேஜிக். தூங்கும்போது பாடலைக்கேட்டுக்கொண்டே தூங்குகிறார் ஒருவர் என்றால் நம்மால் அதனை பதிவு செய்ய முடியாது. தூங்கும்போது மூளை ஓய்வெடுக்கிறது என்பது உண்மை. தூக்கத்தில் கற்பதை ஹிப்னோபீடியா என்று கூறுகின்றனர். இதற்கு மருத்துவரீதியாக வரலாறும் உண்டு. 1914 ஆம் ஆண்டு ஜெர்மன் உளவியலாளர் ரோசா ஹெய்ன் என்பவர் இதுகுறித்த ஆராய்ச்சி செய்து ஆய்வறிக்கையை வெளியிட்டார். ஒருநாளில் தினசரி கற்பதைவிட மாலைநேரத்தில் நாம் கற்பது அதிகம் என்பது இவரின் ஆய்வு முடிவு. தூக்கம்தான் நமது அன்றைய நிகழ்ச்சி நினைவுகளை மாற்றி அமைத்து சேமிக்க வேண்டும் என்றால் சேமித்தும் இல்லையென்றால் அதனை அழித்து நம் மனதில் உணர்ச்சி சமநிலையை ஏற்படுத்துகிறது. 1950 ஆம்ஆண்டு செய்த ஆய்வுகளில் தூக்கத்தில் கற்பது என்பது உடான்ஸ் ப்ரோ