இடுகைகள்

மேக்கிங் இந்தியா ஆசம்! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஆபத்தான உணவுக் கலாசாரம்! - நூடுல்ஸ் கலவரம்!

படம்
ஆம். படத்தில் இருப்பது உண்மை. என்ன உடனே நாம் ஒத்துக்கொள்ள மாட்டோம். இந்தியர்கள் பொதுவாக தின்பண்டப் பிரியர்கள். தின்பதில் வஞ்சனை இல்லாத ஆட்கள். நான் 2 ஸ்டேட்ஸ் நூலில் தமிழர்களின் அரசியலோடு பஞ்சாபியர்களின் பால் பொருட்களின் மீதான  பாசத்தையும் எழுதியிருப்பேன். காரணம், உணவுதானே நம் உடலாகிறது. அதனை எப்படி பேசாமல் இருப்பது எழுதாமல் இருப்பது? 2015 ஆம் ஆண்டு மே மாதம் சுவிட்சர்லாந்து நிறுவனமான மேகி நூடுல்ஸ் மீது கடும் குற்றச்சாட்டு ஏவப்பட்டது. அதில் நூடுல்ஸில் காரீயம் அதிகமாக இருப்பதாக கூறப்பட்டது. அப்புறம் என்ன? அதைப் பயன்படுத்திக்கொண்டது பதஞ்சலி நிறுவனம்.  இந்த நேரத்தில் ராம்தேவ் தொடங்கிய பதஞ்சலி நிறுவனம் பூதாகரமாக சுதேசி வியாபாரத்தை தொடங்கியது. தேசிய உணர்ச்சி பொங்கியவர்கள் பதஞ்சலியைப் பின்தொடர்ந்தனர். பின் அதன் தரத்தைப் பார்த்து திகைத்தவர்கள் தானாகவே பன்னாட்டு நிறுவனத்திற்கு திரும்பினர். பேச்சுலர்களின் முக்கியமான உணவான மேகி நூடுல்ஸ் இந்த இடைப்பட்ட காலத்தில் நிறைய வாடிக்கையாளர்களை இழந்தது.  சுதேசி நிறுவனமான பதஞ்சலி,  கோமாதா சோப் என பசுவின் கோமியத்தில்  சோப்பு தயாரித