இடுகைகள்

பிரசாரம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காலநிலை மாற்றத்தை எதிர்கொள்ள தைரியமான நடவடிக்கைகள் தேவை!

படம்
  ஜேன் ஃபாண்டா jane fonda stephanie zacharek அமெரிக்காவில் புகழ்பெற்ற நடிகை. இவரை விட இவரது பெற்றோருக்கு புகழ் அதிகம். ஹென்றி ஃபான்டா, பிரான்சிஸ் ஃபோர்ட் சீமோர் ஆகியோருக்கு பிறந்த பிள்ளை. பெற்றோர் தொழி்ல் நடிப்பு என்றாலும் கம்யூனிச சிந்தனை கொண்டவர்களாக இருந்தனர். திரைப்படங்களில் நடித்து புகழ்பெற்றவர், டிவி தொடர்களிலும் கூட நடித்துள்ளார். கிரேஸ் அண்ட் ஃபிராங்கி என்ற தொடரை இந்த வகையில் குறிப்பிடலாம்.  ஜேன், 1970ஆம் ஆண்டிலேயே பூர்விக அமெரிக்கர்களான செவ்விந்தியர்களுக்கு ஆதரவு தெரிவித்தவர். கூடவே, அமெரிக்கா வியட்நாம் மீது தொடுத்த போரையும் கூட தவறு என்று வாதிட்டார். தற்போது தன்னார்வ அமைப்பைத் தொடங்கி தன்னைபோல ஈடுபாடு கொண்டவர்களோடு இணைந்து பணியாற்றி வருகிறார். 2020ஆம் ஆண்டு அரசுக்கு எதிராக சட்டமறுப்பு போராட்டம் நடத்தி சூழல் பிரச்னைகள் மீது கவனம் கொண்டு வந்தார். அதற்கு எதிர்வினையாக ஐந்துமுறை காவல்துறையால் கைது செய்யப்பட்டு சிறையில் அடைக்கப்பட்டிருக்கிறார். சிறையில் அடைபடுவதைப் பற்றி பெரிதாக கவலைப்படவில்லை. அவர் போக்கி்ல் இயங்கி வருகிறார்.  காட்டுத்தீ காரணமாக பறவைகள் வலசை செல்ல முடியாது தவிக்க

சிறுவயதிலிருந்தே பறவைகளை கவனிப்பது பிடிக்கும்!

படம்
  அதிதி முரளிதர் இயற்கை செயல்பாட்டாளர் உங்களைப் பற்றி கூறுங்கள். நான் மும்பையில் பறவைகளைப் பற்றி ஆராய்ச்சி செய்து வருகிறேன். இயற்கை, பறவைகள் பற்றியும் நான் எனது எர்த்தி நோட்ஸ் என்ற வலைத்தளத்தில் எழுதி வந்தேன். இப்படித்தான் மெல்ல இயற்கை பற்றிய செயல்பாடுகளுக்குள் நான் வந்தேன்.  பறவைகளைக் கவனிக்கத் (Bird watching) தொடங்கியது எப்போது? சிறுவயதில் அம்மாவுடன் உட்கார்ந்து, பறவைகளைப் பார்த்துக்கொண்டிருப்பது நினைவில் உள்ளது. கல்லூரியில் படிக்கும்போது, உயிரியல் ஆய்வகத்தில் அதிக நேரம் செலவிடுவேன். அப்போதும் வெளியே உள்ள பறவைகளைத் தான் கவனித்துக் கொண்டிருப்பேன். ஹூப்போ (Hoopoe) என்ற பறவை எங்கள் கல்லூரிக்கு அடிக்கடி வரும். சிறுவயதில் பறவைகளின் ஒலிகளைக் கேட்டு நினைவில் வைத்துக்கொள்ள முயன்றிருக்கிறேன்.  உங்களுக்குப் பிடித்த பறவைகள் என்னென்ன? எனக்கு அனைத்து பறவைகளும் பிடிக்கும். ஆனால் சிறுவயதில், வால்க்ரீப்பர், ஆசியன் ஃபேரி ப்ளூபேர்ட், ஃபயர் பிரெஸ்டெட் ஃபிளவர்பெக்கர் (Wallcreeper, Asian Fairy-bluebird,  Fire-breasted Flowerpecker) ஆகிய பறவைகள் பிடித்தமானவை. இவையே அன்று என் கவனத்தை ஈர்த்தவை.  பறவை கவனித்

அன்பெனும் தானியம் இந்திய மண்மீது - இந்தியா 75 -

படம்
  வெறுப்பு எப்படி பரவுகிறது என்றால் தொடர்ச்சியாக நரம்பில் சலைன் ஏற்றுவது போல மெல்ல மெல்ல தினமொரு செய்தியைக் கொடுத்து வெறியேற்றுகிறார்கள். அண்மையில் கிறிஸ்துவ மிஷனரியில் படித்த நண்பரொருவர், தான் படித்த இடம், கற்ற விஷயங்களைக் கூட மறந்துவிட்டு வீரத்துறவியின் காவி உடையே கட்டுமளவு துணிந்துவிட்டார். கலாசாரம் மாறாமல் இருக்கவேண்டும், தன்னைத் தவிர பிறர் அனைவரும் கட்டாயம் நேர்மையாக இருக்கவேண்டும் என சத்தியம் தர்மம் மானம் ஆகிய கொள்கைகளை பின்பற்றுபவர்.  ஒருநாள் நான் இன்னொரு நண்பரிடம் மதமாற்றம் பற்றி பேசும்போது, திடீரென உள்ளே புகுந்தவர் கிறிஸ்தவர்கள் வேண்டுமென்றே அதை செய்கிறார்கள். மக்களும் காசு பணத்திற்கு ஆசைப்பட்டு விலை போகிறார்கள் என்று சலித்துப்போய் கோபம் மேலிட பேசினார்.  நான் எனது விவாத நண்பரைப் பார்த்தேன்.அவர் புருவங்கள் சுருங்க வீரத்துறவி நண்பரைப் பார்த்தார்.  சூழலைப் பற்றி அவருக்குப் புரிய வைக்க  நானே பேசினேன்.   பிழைப்புவாதிகள் எல்லா இடத்திலும் உண்டு.இதில் குறிப்பிட்ட மதம் என்று வரம்புகள் எல்லாம் கிடையாது. ஒருவருக்கு தன்னுடைய மதம், சாதியில் கௌரவமில்லை. இழிவாக நடத்துகிறார்கள். இன்னொரு மதத்த

போலியோவை அழித்தது இந்தியாவின் சாதனை!

படம்
போலியோவை அழித்தது இந்தியாவின் முக்கியமான சாதனை! தாமஸ் ஆபிரஹாம் உங்களுக்கு போலியோ பற்றிய அக்கறை ஏற்பட்டது எப்படி? இத்துறை உங்களுக்கு புதிதானது ஆயிற்றே? 2003ஆம்ஆண்டு சார்ஸ் பாதிப்பு பரவியபோது நான் ஹாங்காங்கில் இருந்தேன். அப்போதே அதுபற்றிய நூலை எழுத முயன்றேன். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. சார்ஸைப் போலவேதான் கொரோனாவும் கூட. நுண்ணுயிருகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு என்பது நீண்டது. பழமையான வரலாற்றைக் கொண்டது. நாம் இறந்துபோனாலும் இந்த நுண்ணுயிரிகள் பூமியில் அப்படியே இருக்கும். இப்படி சுழற்சி நடைபெறுவதால் நாம் போலியோவை அழித்துவிட்டோம் என்று சொல்வது சரியானதாக எனக்குப் படவில்லை. பாகிஸ்தானில் இன்னும் போலியோ அழிக்கப்படவில்லை. இது போலியோ அழிக்கும் முயற்சியில் பின்னடைவு அல்லவா? ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் போலியோ இன்னும் அழிக்கப்படாமல் இருப்பது வேதனையான நிகழ்ச்சிதான். 2011ஆம் ஆண்டு போலியோ இந்தியாவில் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. போலியோசொட்டு மருந்து மீதான நம்பிக்கையின்மையும் வளர்ந்து வருகிற ஆபத்து. மேலும் அமெரிக்கா, பாகிஸ்தான், தலிபான் ஆகியோருக்கு இடையில

தடுப்பூசியில் அலுமினியம் உள்ளதா?

படம்
ஆங்கிலப் பேராசிரியர் ஒருவர் தடுப்பூசியில் அலுமினியம் உள்ளதாக கூறி அதற்கு எதிரான செயல்பாடுகளுக்கு நிதி திரட்டியுள்ள சம்பவத்தை கார்டியன் பத்திரிகை வெளிப்படுத்தியுள்ளது. இங்கிலாந்தைச் சேர்ந்த பல்கலைக்கழக பேராசிரியர் எக்ஸ்லி, தடுப்பூசிக்கு எதிரான பிரச்சாரத்தை செய்து வருகிறார். அவர் பல்கலைக்கழக வலைத்தளத்தில் தடுப்பூசிக்கு எதிராக நிதியுதவிகளைப் பெற்றிருப்பது தற்போது வெளியாகியுள்ளது. இவர் 2017 ஆம் ஆண்டு செய்த ஆராய்ச்சி அறிக்கையில், அலுமினியம் ஆட்டிசக்குழந்தைகளின் மூளையில் படிந்துள்ளது. இதற்கு காரணம் தடுப்பூசி என சர்ச்சையைக் கிளப்பினார். தனது ஆராய்ச்சிக்கான நிதியாக மக்களிடமிருந்து 22 ஆயிரம் பவுண்டுகளைப் பெற்றிருக்கிறார். குறைந்த பட்ச தொகை நூறு பவுண்டுகள். இதற்கு நிதியுதவி செய்தது, தடுப்பூசிக்கு எதிராக செயல்படும் சில்ரன் மெடிக்கல் சேப்டி மெடிசின் இன்ஸ்டிடியூட் ஆகும். இந்த விவரங்களை தகவல் அறியும் சட்டத்தின் கீழ் தி கார்டியன் நாளிதழ் வாங்கி பிரசுரித்து உள்ளது. இதுகுறித்து எக்ஸ்லியிடம் கேட்டபோது, இதில் தவறு ஏதும் இல்லை. நான் ஆய்வகச்செலவுகளுக்காக இத்தொகையைப் பயன்படுத்தினேன். இதில் ச