போலியோவை அழித்தது இந்தியாவின் சாதனை!





Image result for polio the odyssey of eradication


போலியோவை அழித்தது இந்தியாவின் முக்கியமான சாதனை!

தாமஸ் ஆபிரஹாம்

உங்களுக்கு போலியோ பற்றிய அக்கறை ஏற்பட்டது எப்படி? இத்துறை உங்களுக்கு புதிதானது ஆயிற்றே?

2003ஆம்ஆண்டு சார்ஸ் பாதிப்பு பரவியபோது நான் ஹாங்காங்கில் இருந்தேன். அப்போதே அதுபற்றிய நூலை எழுத முயன்றேன். ஆனால் அதற்கான வாய்ப்பு அமையவில்லை. சார்ஸைப் போலவேதான் கொரோனாவும் கூட. நுண்ணுயிருகளுக்கும் மனிதர்களுக்கும் உள்ள உறவு என்பது நீண்டது. பழமையான வரலாற்றைக் கொண்டது. நாம் இறந்துபோனாலும் இந்த நுண்ணுயிரிகள் பூமியில் அப்படியே இருக்கும். இப்படி சுழற்சி நடைபெறுவதால் நாம் போலியோவை அழித்துவிட்டோம் என்று சொல்வது சரியானதாக எனக்குப் படவில்லை.

பாகிஸ்தானில் இன்னும் போலியோ அழிக்கப்படவில்லை. இது போலியோ அழிக்கும் முயற்சியில் பின்னடைவு அல்லவா?

ஆப்கானிஸ்தானிலும், பாகிஸ்தானிலும் போலியோ இன்னும் அழிக்கப்படாமல் இருப்பது வேதனையான நிகழ்ச்சிதான். 2011ஆம் ஆண்டு போலியோ இந்தியாவில் முற்றிலும் அழிக்கப்பட்டதாக கூறப்பட்டது. போலியோசொட்டு மருந்து மீதான நம்பிக்கையின்மையும் வளர்ந்து வருகிற ஆபத்து. மேலும் அமெரிக்கா, பாகிஸ்தான், தலிபான் ஆகியோருக்கு இடையிலான பிரச்னையும் போலியோ பிரச்னையை அதிகரிக்கிறது.

போலியோ தடுப்பூசியில் இந்தியாவின் சாதனை என்ன?

பீகார், உத்தரப்பிரதேசம் போன்ற ஏழை மாநிலங்களில் அரசு போலியோவை அழித்தது நம்பவே முடியாத உண்மை. இது இந்திய அரசின் சாதனை என்றே சொல்லலாம்.

போலியோ சொட்டு மருந்து போடுவதில் நிறைய சர்ச்சைகள் உள்ளனவே?

ஆம். வாய் வழியாக போடும் சொட்டு மருந்து விலை குறைவானது. சக்தி வாய்ந்தது. அதன் மீது பல்வேறு சர்ச்சைகளை கிளப்பி அதனை தடை செய்ய முயன்று வருகிறார்கள். இதில் ஊசி மருந்தாக பயன்படுத்துவது பற்றிய யோசனையும் முன்வைக்கப்படுகிறது. இதில் பக்கவிளைவுகள் குறைவு என்று கூறுகிறார்கள்.

நன்றி - இந்தி ஆங்கிலம் - முரளி என் கிருஷ்ணசாமி