இந்தியா மேலும் சில உறுதியான நடவடிக்கைகளை எடுக்கவேண்டும்!




Image result for poonam khetrapal singh


பூனம் கேத்ரபால் சிங், உலக சுகாதார நிறுவனம் (கிழக்கு ஆசியா இயக்குநர்)



இந்தியாவில் இரண்டுபேர் கோவிட் 19 பாதிப்பால் இறந்துள்ளனர். இதுபற்றி உங்களது கருத்து என்ன?

இந்தியாவில் ஏற்பட்டுள்ள பாதிப்பு இருவரை பலி வாங்கியுள்ளது. பொதுவாகவே வயதான ஆட்களுக்கும், நோய் எதிர்ப்பு சக்தி இல்லாதவர்களுக்கும்  கோவிட் -19 பாதிப்பு ஏற்பட வாய்ப்பு உள்ளது. சீனாவில் கண்டறியப்பட்ட இந்த வைரஸ் பாதிப்பு இன்று உலகில் ஏற்படுத்தியுள்ள பொருளாதார இழப்பும், உயிரிழப்பும் அதிகம். மத்திய அரசு கோவிட் 19 யை தேசியப் பேரிடர் என்று அறிவித்து, பல்வேறு பொது இடங்களில் மக்கள் கூடுவதை தடை செய்துள்ளது நோயின் பரவலைத் தடுக்கும். இது நல்ல முயற்சி என்பேன்.

புதிதாக நோய் பாதிப்புக்கு உட்பட்டவர்கள் என்ன செய்யவேண்டும்?

சமூகத்திலிருந்து இனி மக்கள் கொஞ்ச காலத்திற்கு விலகி இருக்கவேண்டும். நுரையீரலை இந்த வைரஸ் பாதிப்பதால், சளி, தும்மல் மூலம் கொரோனா பிறருக்கு எளிதாக பரவும். எனவே மக்கள் கூட்டமாக கூடும் இடங்களில்  கூடுவதைத் தவிர்த்தாலே பிரச்னை கிடையாது. வைரஸ் எளிதாக பரவுவதையும் தடுக்க முடியும். உலக சுகாதார நிறுவனமும் பல்வேறு நாடுகளுக்கு இதையே வலியுறுத்தி வருகிறது.

இந்தியா தற்போது எடுத்துவரும் நடவடிக்கைகள் போதுமானவையா? வேறு என்ன நடவடிக்கைகளை செய்யவேண்டும் என கூறுங்கள். 

இந்தியாவைச்சேர்ந்த ஆயிரம் அதிகாரிகளுக்கு நாங்கள் கொரோனாவை எப்படி எதிர்கொள்ள வேண்டும் என பயிற்சி வகுப்புகளை நடத்தினோம். இந்திய அரசு மக்கள் கூடும் இடங்களை மூடி நோய் பாதிப்பை குறைக்க முயற்சி செய்து வருகிறது. நாங்கள் இந்த நடவடிக்கையை வரவேற்கிறோம். அதோடு, தற்போதுள்ள கொரோனா ஆய்வகங்களை மேலும அதிகரிக்க கோருகிறோம். மாதிரிகளை சேகரித்து ஆய்வு செய்து முடிவுகளை அதிகரிக்க அதிக ஆய்வகங்கள் தேவை.


கோவிட் 19 யை கண்டுபிடிக்க என்ன மாதிரியான சோதனைகளை செய்யவேண்டும் என நினைக்கிறீர்கள். 

நியூக்ளிக் ஆசிட் ஆம்ப்ளிஃபிகேஷன் சோதனை நூறு சதவீத துல்லியத் தன்மையைக் கொண்டுள்ளது. இச்சோதனையை பல்வேறு நாடுகளுக்கு நாங்கள் பரிந்துரைத்து வருகிறோம்.

பிற நாடுகள் கோவிட் 19 பற்றிய செய்திகளைப் பகிர்ந்துகொள்வது அவசியமா?

நோய்த்தாக்குதல் பற்றிய தகவல்களை நாடுகள் பகிர்ந்துகொண்டால் அதற்கு பலியாகும் மக்களின் எண்ணிக்கையைக் குறைக்கலாம்.


நன்றி - இந்துஸ்தான் டைம்ஸ்  மார்ச் 16, 2020