பரிசு தரும்போது குழப்பம் ஏற்படுகிறதா?





Gift GIF


மிஸ்டர் ரோனி

பிறருக்கு பிறந்தநாள், திருமணம் என வரும்போது பரிசுகளைத் தேர்ந்தெடுக்க மிகவும் திணறுகிறேன். ஏன் இப்படி?


எங்கள் அலுவலகத்தில் கூட ஒருவர் கல்யாணத்திற்கு ரெடியானார். அவர் பத்திரிகை வைக்கும்போதே அலுவலக சகா, நான் திருமணத்திற்கு வர முடியாது என்று சொன்னார். சொல்லிவிட்டு உடனே இன்டக்ஷன் ஸ்டவ்வை எடுத்து நீட்டிவிட்டார். அதை எதிர்பாரக்க நண்பர், சட்டென முகம் சுருங்கிவிட்டார். பின்னர் சமாளித்துக்கொண்டு பரிசை ஏற்றுக்கொண்டார். இங்கு இரண்டு விஷயங்கள் நீங்கள் கவனிக்க வேண்டும். ஒன்று திருமணம் செய்பவருக்கும் பரிசளித்த நண்பருக்கும் அவ்வளவு நெருக்கம் கிடையாது. இரண்டு, திருமணம் நடந்து முடிந்த பிறகு கூட அவர் இன்டக்ஷன் ஸ்டவ்வைத் தந்திருக்கலாம்.

உடனடியாக பரிசு தந்து  அதன் வழியாக நான் வரவில்லை என்பது நாகரிகமான முறை அல்ல.

உங்களுக்கு நேருவதும் இதுதான். நீங்கள் பரிசளிக்கப் போகிறவர் உங்களுக்கு நெருக்கமானவர் என்றால எளிதாக பரிசைத் தேர்ந்தெடுத்து விடலாம். ஆனால் அவருக்கு என்ன பிடிக்கும், அமேசானில் விஷ் லிஸ்ட் என எதைத்தேர்ந்தெடுத்து வைத்திருக்கிறார் என பார்க்காமல் இருந்தீர்கள் என்றால் கஷ்டம்தான். நீங்கள் கொடுக்கும் பரிசு அவருக்கு தேவைப்படும் ஒன்றாக இருக்கலாம். அல்லது உங்களுடைய விருப்பத்தை ஒட்டி இருக்கலாம். அவருக்கு பயன்படும் என அவருக்கு உள்ளாடைகளை யாரும் வாங்கித்தர மாட்டார்கள்.

நீங்கள் ஒருவருக்கு பரிசளிக்க நிறைய நேரம் செலவழிக்கிறீர்கள். இந்த விஷயம் அந்தப் பரிசில் தெரியும். அதுதான் முக்கியம். நீங்கள் பர்சிலுள்ள காசை எந்த மட்டுக்கு செலவழிக்கிறீர்கள் என்பதல்ல.

நன்றி - பிபிசி