வாசிக்கவேண்டிய சாகச நூல்கள்!

பலரும் கொரோனா பாதிப்பால் தனிமையாக இருக்கும்படி நேரலாம். மேற்குலகில் தனியறையில் என்றால் இந்தியாவில் இங்கு குடும்பமே ஒன்றாக உட்கார்ந்து டிவி பார்த்துக்கொண்டிருக்கும். டிவியில் படங்கள் சுவாரசியமாக இருந்தாலும் நூல்களைப் போன்ற அனுபவங்களை திரைப்படங்கள் தருவது இல்லை. சில சுவாரசியமான திரில் தரும் நூல்களைப் பார்ப்போம்.




Preview thumbnail for 'Spirit Run: A 6,000-Mile Marathon Through North America's Stolen Land



லத்தீன் குடும்பத்தில் பிறந்த அமெரிக்காவைச் சேர்ந்தவர் நோ ஆல்வாரெஸ். இவரது குடும்பத்தில் கல்லூரி படிக்கட்டில் கால் வைத்த முதல் ஆள் இவர். கனடா தொடங்கி குவாத்திமாலா வரை ஓடத்தொடங்கினார். இதன்பிறகுதான் அல்ட்ரா மாரத்தான்கள் பிரபலமாயின. இதுதொடர்பான அனுபவங்களை இந்த நூல் பேசுகிறது.



Preview thumbnail for 'Scenic Science of the National Parks: An Explorer's Guide to Wildlife, Geology, and Botany



அமெரிக்காவில் உள்ள தேசியப் பூங்காக்களுக்கு இப்போது போக முடியாது. அதற்காக அப்படியே விட்டுவிட முடியுமா? அதற்குத்தான் அந்த பூங்காக்களின் சிறப்பு என்ன, அங்குள்ள தாவர வகைகள் ஆகியவற்றைப் பற்றி அறிய இந்த நூல் உதவும்.

Preview thumbnail for 'Walls of Change: The Story of the Wynwood Walls





மியாமியிலுள்ள வின்வுட் வால்ஸ் என்ற இடம் பிரபலமானது. இந்த இடத்தில் பல்வேறு கலைஞர்கள் சுவர் ஓவியங்களை வரைந்திருப்பார்கள். அதனை படம் எடுக்க இளைஞர்கள் அலைமோதுகின்றனர். இங்கு சுவரோவியங்கள் உருவான வரலாறு, அதன் பின்னணி ஆகியவை பற்றி பேசுகிறார்கள். 



Preview thumbnail for 'Footnotes: A Journey Round Britain in the Company of Great Writersநாங்கள் யார்? எங்களுக்கு என்ன தேவை என்று ஜெயமோகன், சாரு நிவேதிதா நம்மடம் பேசினால் எப்படியிரக்கும்? அதேமகிழ்ச்சியை இந்த நூலைப் படித்தால் உணரலாம். நூலில் புகழ்பெற்ற எழுத்தாளர்கள் தங்களைப் பற்றி பேசுகிறார்கள். படிக்க சுவாரசியமாக இருக்கிறது.
















நன்றி- ஸ்மித்சோனியன் வலைத்தளம்.

பிரபலமான இடுகைகள்