தொப்பி போட்ட பூனை செய்யும் சேட்டை! - தி கேட் இன் தி ஹேட்!





The Cat in the Hat (2003) - IMDb



தி கேட் இன் தி ஹேட் 2003

இயக்கம் போ வெல்ச்
மூலக்கதை - தியோடர் சியஸ் தி கேட் இன் தி ஹேட்
ஒளிப்பதிவு இம்மானுவேல் லூபெஸ்கி
இசை டேவிட் நியூமன்

ஆன்வில்லே என்ற ஊரில் நடைபெறும் கதை. குழந்தைகளுக்கான படம். ஜோன்ஸ் என்ற கணவர் இல்லாத பெண், ரியல் எஸ்டேட் நிறுவனத்தில் பணியாற்றி வருகிறார். அவருக்கு ஆண், பெண் என இரு பிள்ளைகள்(கான்ராட், சாலி) இருக்கின்றனர். இதில் கான்ராட் என்ற சிறுவன் சேட்டைக்காரன். இவனைக் கட்டுப்படுத்த அவன் தாய் அரும்பாடுபடுகிறார். இவரது தாய்க்கு ஸ்கெட்ச் போட்டு தன் கடன்களை அடைத்துவிட பக்கத்துவீட்டு ஆண் நண்பர் திட்டமிடுகிறார். ஜோன்ஸ் வீட்டில் அன்று ஆபீஸ் சந்திப்பு நடத்துவதாக ஏற்பாடு. அன்று அவர்களின் வீட்டிற்கு வரும் புதிய விருந்தினர் அனைத்து விஷயங்களையும் மாற்றிவிடுகிறார். அந்த சந்திப்பு நடைபெற்றதா, கான்ட்ராக்ட் குறும்புகள் செய்யாமல் இருந்தானா?என்பதுதான் கதை. 

ஆஹா
படத்தில் வரும் விஷயங்கள் அனைத்தும் ஃபேன்டசி என்பதால் ஜாலியாக ரசிக்கலாம். முடிந்தளவு தமிழில் பார்த்தால் சந்தோஷமாக நிறைய காட்சிகளை ரசிக்க முடியும். பெரிய பூனை வரும் காட்சிகள் அனைத்தும் பிரமாதமாக இருக்கிறது. அனைவருமே நன்றாக நடித்திருக்கிறார்கள். பெரும்பாலான காட்சிகளில் உண்மையாக நடிப்பவர்களே காமிக்ஸ், அனிமேஷன் கதாபாத்திரங்களின் முக பாவனைகளை காட்டுகிறார்கள். எனவே, நமக்கு படமே முழுக்க அனிமேஷன் படம் போலவே தெரிகிறது.
தாங்கள் செய்த குற்றங்களை குழந்தைகள் ஒப்புக்கொள்வதுதான் தீம். அதனை நன்றாக பொழுதுபோக்கும் அம்சங்களுடன் சொல்லியிருக்கிறார்கள். 

கோமாளிமேடை டீம்