பெண்கள் அத்துமீறலை தைரியமாக பேசவேண்டும்!
சன்னி லியோன் பெயரைச் சொன்னாலே
ஐட்டம் சாங்குக்கு ரெடியாகும் கூட்டம் சத்தியமாக நம் இந்தியர்கள்தான். ஆபாச பட நடிகையாக
இருந்து இந்திப் படவுலகில் இன்றும் கிராக்கி உள்ள நடிகையாக திகழ்கிறார் சன்னி லியோன்.
நீங்கள் தத்தெடுத்த குழந்தைகள் உட்பட மூன்று பேர் வீட்டில்
உள்ளனர். எப்படி சமாளிக்கிறீர்கள்?
கஷ்டம்தான். எங்கள் வீட்டில்
இரண்டு இரட்டையர்கள், நான்கு வயது பெண்குழந்தை ஒன்று உள்ளது. தினந்தோறும் அவர்கள் வளர்ந்து
வருவதைப் பார்ப்பது மகிழ்ச்சியாக உள்ளது. அவர்களுக்கான டைம் டேபிளை போட்டு அதற்கேற்ப
அவர்களுக்கான விஷயங்களை செய்து வருகிறேன். அவர்களுக்கான உணவு, உடை, படிப்பு, விளையாட்டு
ஆகியவை அதற்கான நேரங்களில் நடைபெறுமாறு ஏற்பாடுகளை செய்துள்ளேன். அவர்களைப் பார்த்துக்கொள்ள
தனி பணியாளர்கள் உள்ளனர். அவர்கள் என்ன செய்கிறார்கள் என்பதை நான் கண்காணித்து வருகிறேன்.
குழந்தைகளின் மீதான கவனிப்பை எப்படி செலுத்த முடிகிறது?
நானும் என் கணவர் டேனியலும்
குழந்தைகளை வளர்க்க நினைத்தபோது சில விஷயங்களை பேசி தீர்மானித்துக்கொண்டோம். இருவரும்
ஒருவரையொருவர் கவனிக்கவில்லையென்று சண்டை போடக்கூடாது. குழந்தைகளின் படங்களை சமூக வலைத்தளங்களில்
பதிவு செய்யக்கூடாது என்ற சில விதிகள்தான் அவை. அதேசமயம் இதையெல்லாம் செய்வது ஊடகங்களைக்
கண்டு குழந்தைகள் பயப்படுவதற்காக அல்ல. அவர்கள் ஊடகங்களுக்கு ஹலோ மட்டும் சொல்லிவிட்டு
கிளம்பிவிடுவார்கள். இல்லையெனில் தேவையில்லாத ஊடக கவனம் பெற்று பிரச்னைக்கு உள்ளாகும்
வாய்ப்பு உள்ளது.
பெண்ணாக நீங்கள் பெருமைப்படும்
விஷயம் என்ன ?
எங்கள் குழந்தைகளை பெற்றோராக
நானும் டேனியலும் வளர்ப்பதுதான். அவர்களுக்கான உணவு, நொறுக்குத்தீனிகள் தருவது, அவர்களை
படுக்க வைப்பது ஆகியவற்றை இருவரும் பகிர்ந்தே செய்து வருகிறோம். நாங்கள் இருவரும் திருமணம்
செய்துகொள்ளாமல் தனியாக இருக்கும்போது குழந்தைகளை வளர்ப்பதை யோசித்தே பார்த்திருக்க
முடியாது. நாங்கள் எங்கள் குழந்தைகளை மிகவும் விரும்புகிறோம். குழந்தைகளின் முதல் ஐந்து
ஆண்டுகள் மிக முக்கியமானவை. அதில் அவர்களுக்கும், அவர்களது சகோதரிகளுக்கும் ஏற்படும்
உறவை கவனிக்கவேண்டும். நாங்கள் இன்று குடும்பமாக இருப்பதையே நான் பெருமையாக கருதுகிறேன்.
# மீ டூ இயக்கம் இந்தியாவில்
பிரபலமானபோது பல்வேறு துறை சார்ந்த பெண்கள் மனந்திறந்து பேசினார்கள். அதைப்பற்றி என்ன
நினைக்கிறீர்கள்.
பெண்கள் மட்டுமல்ல இந்த
விஷயத்தில் ஆண்களும் கூட பாதிக்கப்பட்டு இருக்கிறார்கள். பெண்கள் தாங்கள் பாதிக்கப்பட்ட
சமயத்திலேயே இது பற்றி குரல் எழுப்ப வேண்டும் என நினைக்கிறேன். அதை எழுப்ப முடியாதபடி
சூழல்கள் சுவர்களாக மாறி நின்றிருக்கலாம். மீடு இயக்கத்திற்கு உலகளவில் நிறைய ஆதரவு
கிடைத்துள்ளது. இன்றேனும் தனக்கு நேர்ந்த கொடுமைகளை பெண்கள் பேச முன்வந்திருப்பது சிறப்பான
விஷயம். நான் இதனை வரவேற்கிறேன்.
நன்றி – டெக்கன் கிரானிக்கல்
– சுபாஷ் கே ஜா