அகதிகளை க்ரீசில் அடித்து உதைக்கின்றனர்.! - மனித உரிமைகள் கண்காணிப்பகம்



Image result for lespos island refigee



நேர்காணல்
பில் ஃபிரெலிக், அகதிகள் மறுவாழ்வு இயக்கத்தின் தலைவர்


அண்மையில் க்ரீஸ் தனது நாட்டிற்குள் அகதிகள் வருவதை தடுக்கும் நடவடிக்கைகளை எடுத்து வருகிறது. இதே நேரத்தில் துருக்கி அகதிகளை அனுமதிக்கும் முயற்சியை எடுத்து வருகிறது. க்ரீசில் உள்ளே வரும் அகதிகளை அடித்து நொறுக்கி வெளியே வீசி எறிய ஆட்கள் தயாராக ஆயுதங்கள் உள்ளனர். அங்குள்ள நிலைமை பற்றி பில் நம்மிடம் பேசினார்.


நீங்கள் முன்னர் வந்ததற்கும் இப்போதைக்கும் லெஸ்போஸ் தீவில் என்ன மாதிரியான நிலைமை உள்ளது?

நான் இத்தீவிற்கு 2016ஆம் ஆண்டு வந்தேன். அப்போது காணப்பட்ட நிலைமைக்கும் இன்றைய நிலைமைக்கும் முக்கியமான வேறுபாடு உள்ளது. அது சட்டதிட்டங்களே இல்லாத நிலமாக இன்று மாறியுள்ளதைத்தான் சொல்லவேண்டும். முதலில் அங்குள்ள மொரியா கேம்பின் அளவு 3 ஆயிரம் மக்களைத்தான் தங்க வைக்க முடியும். ஆனால் இன்று அங்கு 20 ஆயிரம் பேரைத் தங்க வைத்திருக்கிறார்கள். இந்த எண்ணிக்கையை மெல்ல அதிகரித்து வருகின்றனர். இது அநீதி அல்லவா? ஐரோப்பிய யூனியன் கண்காணிக்கும் பகுதியில் இந்த நிலைமை. ஐரோப்பிய நாடுகளைச் சேர்ந்தவர்கள் இந்த தீவுக்கு சுற்றுலா வருவது வாடிக்கை. அத்தீவையே அவர்கள் இன்று கண்டுகொள்ளாமல் இருப்பது வேதனையாக இருக்கிறது.


இடம்பெயர்ந்து வந்த மனிதர்கள் எப்படி நடத்தப்படுகிறார்கள்?

நான் அண்மையில் அங்கு வாழும் அகதி ஒருவரை பேட்டி கண்டேன். அவர் க்ரீசுக்கு படகில் தப்பித்துச்செல்ல முயன்று தோற்றுப்போனவர். மொரியா கேம்பிலிருந்து வெளியே வந்தவரை பல்வேறு குழுக்கள் அடித்து, உதைத்து கொலை செய்ய முயன்றுள்ளன. அவர்கள் இவரை அன்று உயிரோடு விட்டதே, இன்னொரு அகதி அவர்களின் கையில் கிடைத்ததனால்தான் என்று பேசினார். காவல்துறை நமக்கென்ன என்று விலகிப் போயுள்ளனர். போலீசாரின் உதவி என்பது போக்கிரிகளிடமிருந்து அவரை விலங்கு போட்டு அழைத்துச்சென்று கேம்புக்கு கொண்டுபோய் விட்டதுதான்.

போலீசார் அனைத்து இடங்களிலும் நட்பாக நடந்துகொள்கிறார்களா?

அனைத்து இடங்களிலும் நட்பாக நடந்துகொள்கிறார்கள் என்று கூறமுடியாது. துறைமுகப்பகுதியில் ஒரு சம்பவம் நடைபெற்றது. அங்கு சென்ற குடும்பத்தினரை போலீசார் அங்கிருந்து திரும்பிப்போகச் சொன்னார்கள். தந்தை, தாய், சிறுவன் என மூன்று பேர் கொண்ட குடும்பம் அது. தாய், தன் உடல்நிலையைச் சுட்டிக்காட்டி திரும்ப முகாமுக்கு போகமுடியாது என்று சொல்லியிருக்கிறார். பிறகு சிறிது நேரத்திற்குப் பிறகு, அச்சிறுவனை மட்டும் போலீசார் இழுத்து வந்து முகாமில் ஒப்படைத்திருக்கின்றன. அவனின் பெற்றோர் போன இடம் தெரியவில்லை. துறைமுகத்தை அடைய முடியாதபடி பல்வேறு சமூகவிரோதிகள் தடுப்புகளை ஏற்படுத்தி மக்களை அடித்து உதைத்து பயமுறுத்தி வருகின்றனர்.

தன்னார்வத் தொண்டு நிறுவனங்கள் என்ன செய்து வருகிறார்கள்?

அவர்களின் அலுவலகங்களை அடித்து நொறுக்கி, அவர்களின் பணிகளைத் தடுக்கும் பணிகளை சமூகவிரோதிகள் குழுக்களாக செய்து வருகின்றனர். ஆட்கள் குறைவாக இருந்தாலும் அவர்கள் தம் பணியை  செய்துகொண்டுதான் இருக்கிறார்கள்.


ஐரோப்பிய யூனியன் என்ன கூறியுள்ளது?

க்ரீஸ் ஐரோப்பிய யூனியனின் பாதுகாப்பு கவசம் என புகழப்பட்டுவருகிறது. ஆனால் சமூக விரோதிகள் மூலம் அகதிகளை துன்புறுத்துவது தொடர்கிறது. அதைப்பற்றிய ஐரோப்பிய யூனியன் ஏதும் சொல்லவில்லை.