நிர்பயாவின் அம்மாவுக்கு மட்டும்தான் உரிமை உள்ளதா? - ஏ.பி.சிங் வழக்குரைஞர்
the asian age |
ஏ.பி.சிங், வழக்குரைஞர்.
நிர்பயா வழக்கில் பாதிக்கப்பட்ட குற்றவாளிகள் சார்பாக வாதிட்டு அவர்களுக்கு
உரிமைகளைப் பெற்றுத்தந்தவர். இவரை ஊடகங்கள் பலரும் தூற்றினாலும் நான்
அரசியலமைப்புச்சட்டம் சாதாரண குடிமகனுக்கு தரும் உரிமைகளைப் பெற்றுத்தர
முயற்சிக்கிறேன் என்று கூறுகிறார். அவரிடம் பேசினோம்.
ஆங்கிலத்தில் – ஜீவன் பிரகாஷ் சர்மா
தற்போது நிர்பயா வழக்கில் மூன்றாவது குற்றவாளியான பவன் குப்தா, தன்னுடைய
கருணை மனுவை அனுப்பியுள்ளார். இனி இந்த மனுவுக்குப் பிறகு தூக்கு தண்டனையை தள்ளி
வைக்க வாய்ப்பில்லை. அடுத்த என்ன செய்யலாம் என்று நினைக்கிறீர்கள்.
குற்றவாளிகளுக்கு சட்டரீதியான வாய்ப்புகள் இல்லையென்று உங்களுக்கு யார் சொன்னது?
அவர்களது தூக்குதண்டனையைத் தள்ளிவைக்க பல்வேறு விஷயங்களை என்னால் கூற முடியும்.
ஆனால் அதனை சரியான நேரத்தில் கூறவேண்டும் என காத்திருக்கிறேன். உச்சநீதிமன்றம்
எனது வாதிகளின் மனுவை தள்ளுபடி செய்தாலும் நான் அவர்களைக் காப்பாற்ற போராடுவேன்.
எவ்வளவு தூரம் சட்டம் அனுமதிக்குமோ அவ்வளவு தூரம் அவர்களைக் காப்பாற்ற முயல்வேன்.
கொடூரமான குற்றம் செய்தவர்கள் அவர்கள். நீங்கள் அவர்களை ஏன் காப்பாற்ற
நினைக்கிறீர்கள்?
நான் என் உள்ளுணர்வை நம்புகிறேன். அவர்கள் வெகுளியான மனிதர்கள் என்கிறேன்.
வழக்குரைஞராக நான் என் வாதிகளை குற்றத்திலிருந்து காப்பாற்ற நினைக்கிறேன்.
காவல்துறை அவர்கள் செய்த குற்றத்தை அறிவியல் முறையில் அதாவது டிஎன்ஏ
ஆதாரத்தை முன்வைத்து நிரூபித்திருக்கிறார்கள். எப்படி அவர்களை நீங்கள் காப்பாற்ற
முடியும்?
சட்டத்தில் எனது வாதிகளைக் காப்பாற்ற நிறைய வழிகள் உள்ளன. அவற்றை நான் நீதிமன்றத்தில்
கூறி என தரப்பு வாதிகளை தண்டனையிலிருந்து காக்க முயல்வேன். குற்றம்சாட்டப்பட்டு
சிறையில் இருந்த பவன் குப்தாவை, போலீசார் ஊடக
அழுத்தங்களால் குற்றவாளியாக்கி உள்ளனர். இதுபற்றி திகார் சிறை அதிகாரி தான்
எழுதிய பிளாக் வாரண்ட் நூலில் கூறியுள்ளார். குற்றம் நடந்ததைப் பார்த்த சாட்சிகள்
குற்றவாளிகளை அடையாளம் காட்டும் நிகழ்ச்சி நடைபெற்றது. அதில் சிறை அதிகாரி
இல்லாமலேயே நீதிபதி மட்டும் குற்றவாளிகளை பார்வையிட்டிருக்கிறார். இதுபோன்ற
ஏராளமான குறைபாடுகள் இந்த வழக்கில் முரண்பாடுகளாக உள்ளன.
நீங்கள் வழக்கை தாமதப்படுத்துகிறீர்கள் என்று உணர்ந்திருக்கிறீர்களா?
உங்களால் பாதிக்கப்பட்ட 22 வயதுப்பெண்ணுக்கு நீதி கிடைக்கவில்லை?
குற்றம் நடைபெற்றால் அதுதொடர்பாக முதல் தகவல் அறிக்கை பதிவாக வேண்டும்.
புகாரின் உண்மைத் தன்மையைப் பரிசோதித்து விசாரணை நடைபெறவேண்டும். அனைத்தும் இந்த
வழக்கில் நடந்தேறி இருக்கிறதே? இது நம் நாட்டு அரசியலமைப்பு சொல்லும் விஷயம்தான்.
உரிமைதான். ஆனால் பாதிக்கப்பட்டவர்கள் குற்றவாளிகளை தூக்கிலிடச்சொல்ல எந்த
உரிமையும் கிடையாது. நீங்கள் இவர்களுக்கு நீதி கிடைக்கவேண்டும் என்கிறீர்கள்.
1984ஆம் ஆண்டு நடைபெற்ற கலவரத்தில் பாதிக்கப்பட்ட ஜெசிகா லால், நிதிஷ் கடாரா,
நிகாரி ஆகியோரின் குழந்தைகள் பற்றி கவலைப்பட்டிருக்கிறீர்களா? அவர்களை இந்த சமூகம்
ஏன் கைவிட்டது?
அரசியல்வாதிகளின் பலத்தைப் பெற்றிருக்கிற பெரும்பாலான குற்றவாளிகள் எந்த
தண்டனைகளுமின்றி தப்பி வருகிறார்கள். அவர்கள் சம்பந்தப்பட்ட வழக்கில் எத்தனை
பேருக்கு தூக்கு தண்டனை வழங்கப்பட்டுள்ளது. தண்டனையை தரவேண்டும் என்று சொல்லுகிற
உரிமை நிர்பயாவின் அம்மாவுக்கு மட்டும்தான் இருக்கிறதா?நீங்கள் பேசுவது மோசமான ஒரு
சார்பு நிலைப்பாடு.
நன்றி - அவுட்லுக் இதழ்