Whole foods புகழ்பெற்றது எப்படி?


Vegetables, Vegetable Basket, Harvest, Garden, Salad
pixabay



மிஸ்டர் ரோனி


முழுமையான உணவு என்று ஒன்று உண்டா?


முழுமையான உணவு என்பது அறுசுவையும் சேர்ந்து பாரதி மெஸ்சிலும், சரவணபவனிலும் சாப்பிடுகிறோமே அதுதான். இதுதான என திட்டவட்டமாக கூறமுடியாது. ஆனால் அத்தனை பொருட்களிலும் அளவு குறைத்து வைக்கும் தாராள மனசுக்காரர்கள் இவர்கள்தான்.

முழுமையான உணவு இயக்கம் 1940ஆம் ஆண்டு தொடங்கி புகழ்பெற்றது. இது எந்த வகையான உணவுமுறை என்றால் பதப்படுத்தாத பொருட்களை சாப்பிடுவதை வலியுறுத்துகிற முறை. இதில் ஆர்கானிக் என்ற வகை, அப்படி இல்லாத வகையும் உண்டு. ஆர்கானிக் என்றால் விலங்குகளின் கழிவுகளை, மரங்களின் இலைகளை உரமாக போட்டு பயிர்களை விளைவிப்பது. முழுமையான உணவு முறையில் செயற்கை உரங்களையும் பயன்படுத்துகிறார்கள். இதில் நார்ச்சத்து, வைட்டமின்கள் நிறைய உண்டு. ஆனாலும் இது முழுமையான உணவு முறை என கூற முடியாது.

இதில் பதப்படுத்தும் முறைகள் உண்டா?

தக்காளியை அப்படியே சாப்பிட  அனைவராலும் முடியாது. அப்படி சமைத்தாலும் குறைந்தளவு வெப்பநிலையை பரிந்துரைக்கின்றனர். காரணம் அதிலுள்ள சத்துகள் இழக்கப்படுவதுதான்.ஆப்பிளைக் கூட தோலை உரிக்காமல் கழுவிவிட்டு அப்படியே சாப்பிடச் சொல்கிறார்கள். என்ன காரணம்? அதிலுள்ள சத்துக்களை பாதுகாப்பது அதன் மேற்தோல்தான். அதனை வெட்டிவிட்டால் அதிலுள்ள வைட்டமின் சி சத்து காற்றிலுள்ள ஆக்சிஜனோடு வினைபுரிகிறது. இதன் விளைவாக பழத்தின் தன்மை மாறுகிறது. சத்துகள் இழக்கப்படுகிறது.

1920ஆம் ஆண்டு ஐரோப்பாவில் முழுமையான உணவு தொடர்பான விழிப்புணர்வு பரவியது. பூச்சிக்கொல்லிகளைப் பயன்படுத்தாமல் பயிர்களை விளைவிக்கத் தொடங்கினர். ஃபிராங்க் நியூமன் டர்னர் என்பவர் இதற்கான முயற்சிகளைச் செய்தார்.

சிக்கல் என்ன?

ஓட்டல்களில், மெஸ்களில் ஃபிரஷ் ஆன உணவுதான் வேண்டும் என அடம்பிடிக்க முடியாது. இப்போது உலகம் முழுக்கவே மைக்ரோ ஓவனில் சமைத்த உணவுகளை ஸ்நாக்சாக உணவாக சாப்பிட்டு வருகிறது. இந்த நேரத்தில் முழுமையான உணவு என பழங்கள், காய்கறிகள் என தேடினால் உங்கள் பர்சும் இளைக்கும். நீங்களும் சோர்வாகி விட வாய்ப்புள்ளது.

நன்றி - ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்