நட்பிலும் வேறுபாடுகள் உண்டு! - சந்திப்போமா... கடிதங்கள்




Rupee, Indian, India, Money, Bank Note, Bill, Business



6
அன்புத்தோழர் சபாவுக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்களா?
உங்கள் வேலையிலும் சிலசமயங்களில் சாதி சார்ந்தும் வேலை சார்ந்தும் பிரஷர் இருக்கலாம். எனக்கு தினசரி பன்னிரண்டு பக்கம் செய்யவேண்டும். பிரஷர் குப்பென எகிறாதா? அதுவும் பத்திரிகை தொடங்கும்போதிலிருந்தே இருப்பவர்கள்தான் என்னைச் சுற்றிலும் இருப்பவர்கள். ஆனால் எதையும் புதிதாக கற்றுக்கொண்டுவிடக்கூடாது என்று கவனமாக இருக்கிறார்கள். தென்னைவோலையில் சிறுநீர் கழித்தால் வரும் சத்தம் போல, அவ்வளவு பேச்சு... அப்புறம் வேலையில் எங்கே மனம் செல்லும்? தின்பதையும் ஊர் சுற்றுவதையும் தாண்டி எதையும் யோசிக்காத ஆன்மாக்கள். இப்போதே ஊதிய உயர்வு பேச்சுக்களை தொடங்கிவிட்டார்கள்.
எடிட்டர் தண்ணீர் ஒட்டாத விம் பாராய் நழுவுகிறார். அவரிடமும் மீட்டிங்கை நடத்தினார்கள். விளைவு, அனைவருக்கும் சிறப்பான செய்தியை பத்திரிகை அதிபர் அனுப்பி அதிரவைத்தார். அப்புறம் மூச்சு வரணுமே?
சினிமாதான் சிறிது ஆசுவாசம் தருகிறது. ப்ரௌச்செவரு என்ற தெலுங்கு படத்தைப் பார்த்தேன். ஸ்ரீவிஷ்ணுவுக்கு முக்கியமான படம். இயக்குநர் விவேக் ஆத்ரேயா திரைக்கதையில் பின்னி இருக்கிறார். விவேக் சாகரின் இசை படத்திற்கு ரத்தம் ஓட்டம் போல உள்ளது. எவ்ரிபடி லவ்ஸ் குட் டிராட் - சாய்நாத் எழுதிய நூலைப் படித்து வருகிறேன். புத்தகத்தைப் படித்து மதிப்பிட்டு அதனை இதழுக்கு பயன்படுத்துவதே நோக்கம். ஏழு மாநிலங்களில் 80 ஆயிரத்திற்கும் மேற்பட்ட மக்களைச் சந்தித்து பேசியிருக்கிறார் ஆசிரியர். எட்டு மாநிலங்களில் என்னென்ன மாற்றங்கள் நடந்தன. எவை சிறப்பான திட்டங்கள், எந்த இடத்தில் சொதப்பின. ஏன் என்ன சூழல் அங்கு நிலவுகிறது என விளக்கமாக கள ஆய்வு செய்து எழுதியுள்ளார் சாய்நாத்.
நன்றி!
சந்திப்போம்!
.அன்பரசு
6.7.2019


Mosquitoe, Mosquito, Malaria, Gnat, Bite, Insect, Blood

7
அன்புள்ள தோழர் சபாபதிக்கு, வணக்கம். நலமாக இருக்கிறீர்கள் என்று நம்புகிறேன். இங்கு இரண்டு நாட்களாக மழை பெய்தது. ஏன் பெய்தது என்று நினைக்கும்படியாக கொசுக்கள் படையெடுத்து வந்துவிட்டன. ஒரே அரிப்பும் பிடுங்கலுமாக இரவுகள் போனது.
கடந்த ஞாயிறுஇ 3 படங்களைப் பார்த்தேன். தெலுங்கு, மலையாளம், ஆங்கிலம் என எல்லாமே ஹைபிரிட் கலவையாகத்தான். கிரான்க் ஆங்கிலத்தில் எடுத்த தெலுங்குப்படம். காட்சிகள் அனைத்தும் அப்படித்தான் இருந்தன. வயது வந்தோருக்கான ஏராளமான காட்சிகள் உண்டு. நாயகனின் இதயத்தை ஒரு கும்பல் திருடுகிறது. அதற்குப் பதிலாக செயற்கை இதயத்தைப் பொருத்திவிடுகிறது. பேட்டரியில் இயங்கும் இதயம் அடிக்கடி சீன போன் போல சார்ஜ் இறங்கிவிடுகிறது. தனது இதயத்தை நாயகன் எப்படி மீட்கிறார் என்பதே கதை. ஒரினச்சேர்க்கை நண்பன், விபச்சார மனைவி, செக்சுக்கு வற்புறுத்தும் தோழி, உடலுறவில் இருக்கும் மூளைக்கார டாக்டர் என அனைத்தும் செக்ஸ், காமெடிதான்.
சந்தீப் கிஷன் படம், பேய்ப்படம். ஆனால் நல்ல பேய் என்பதால் பாதிப்பில்லை. நேர்த்தியாக முயன்றிருக்கிறார் இயக்குநர். ஆனால் கதையில் எதிர்பார்க்கும் முரண் ஏதுமில்லை. மற்றொரு காதல் படமாக முடிந்துபோகிறது. வெண்ணிலா கிஷோர் இருந்தும் பிரயோஜனம் இல்லை. வன்முறை, அதீத கோபம் கொண்ட நாயகன் என ஓப்பனிங் சுவாரசியமாக இருந்தாலும் அவன் இயல்பு ஏற்படுத்தும் பிரச்னைகள் படத்தில் இல்லை. படம் தோற்றுப்போக இது முக்கியமான காரணம்.
நன்றி!
சந்திப்போம்!
. அன்பரசு
24.7.2019



Skin, Eye, Iris, Blue, Older, Fold, Wrinkled Skin, Man


5


அன்பு நண்பர் சபாபதிக்கு, வணக்கம்.
சில ஆண்டுகளுக்குப் பிறகு நான் உங்களிடம் பேசினேன். நம் இருவரின் எண்ணங்களும், அடிப்படையும் வேறுவேறு என்பதில் எந்தவித சந்தேகமுமில்லை. உங்களுடைய பேச்சுகளின் வேகம், கருத்துகளைப் பார்த்தபோது மேற்சொன்னபடி நினைத்தேன். விரைவில் உங்களுக்கு திருமணமாகும் வாய்ப்பு இருக்கும் என மனதில் தோன்றுகிறது. இப்படி பொறுப்பாக பேசினால் சுமையை தோளில் இறக்குவதுதானே நியாயம்?
நவம்பர் 8.2016 அன்று எனக்கு மறக்க முடியாத அதிர்ச்சியைக் கொடுத்தீர்கள். நினைவிருக்கிறதா? வளைந்து கொடுத்து போகவேண்டுமென சட்டென்று சொல்லிவிட்டீர்கள். அச்சொல் என் காதில் ஒலித்துக்கொண்டே இருக்கிறது. அதற்கு சான்றாக பணமதிப்புநீக்கத்தின்போது நீங்கள் செயல்பட்ட விதத்தை விவரித்தீர்கள். செல்வாக்கைப் பயன்படுத்தி உங்களை இழப்பிலிருந்து காப்பாற்றிக்கொண்டது நல்லவிஷயமாக உங்களுக்குப் படலாம், ஆனால் எனக்கு அந்த செயல் சரியாகப் படவில்லை.
நீங்கள் வாழும் காவல்துறை உலகத்தில் தினம் தினம் குற்றங்களை சந்திக்கிறீர்கள். உங்கள் உள்ளமும் மாறியிருப்பதில் ஆச்சரியம் என்ன? நாம் வாழ்கின்ற உலகைப் பொறுத்து கருத்துகளும் எண்ணங்களும் மாறும் என்பதை நான் ஏற்கிறேன். செய்கின்ற வேலையை காசுக்கானதாக மட்டுமே பார்த்து அதன் உச்சியில் சென்று அமர்வது சமூக அழுத்தங்களிலிருந்து நம்மை பாதுகாத்துக்கொள்ளும் ஒரே வழி.


நன்றி!
.அன்பரசு
6.12.2020
Images - Pixabay

பிரபலமான இடுகைகள்