இறைச்சி பற்றாக்குறை ஏற்படுமா?
pixabay |
இப்போது பண்ணை விலங்குகள் தரும் இறைச்சி உணவு பற்றிய தகவல்களை பார்ப்போம்.
பொதுவாக கட்டி வைத்து வளர்க்கப்படும் பசு, பன்றி பெரியளவு ஊட்டச்சத்து கொண்டவையாக இருப்பதில்லை. அவை அதன் போக்கில் திரிந்து புற்களையும், பருப்புகளையும், புழுக்களையும் சாப்பிட்டு வளரும்போதுதான் அதன் இறைச்சி நுண்ணூட்டச்சத்துகள் கொண்டதாக மாறுகிறது.
சாதாரணமாக வீடுகளில் வளர்க்கப்படும் பன்றிக்கு புற்கள், இலைகள் ஆகியவையே உணவு. இதனால் இதன் இறைச்சியில் ஒமேகா 3 சத்துகள் காணப்படுகின்றன.ஆனால் இவை பண்ணை விலங்காக வளர்க்கப்படும்போது விரைவில் இறைச்சி உண்டாக அதிகளவு சோளத்தை உணவாக போடுகின்றனர். இதன் மூலம் அதன் உடலில் ஒமேகா -6 சத்துகள் உருவாகின்றன. இவை மனிதர்களின் ஆரோக்கியத்தைப் பாதிக்கின்றன.
பண்ணை விலங்குகளின் கழிவுகளிலிருந்து 168 வகையான சுற்றுச்சூழலை பாதிக்கும் வாயுக்கள் வெளியாகின்றன. விலங்குகள் நோய்வாய்ப்படுவது இயற்கையானது. ஆனால் அவை வணிகத்தில் இருக்கும்போது, நோய்வாய்ப்பட்டால் குறிப்பிட்ட காலத்தில் அதன் எடை அதிகரிக்காது. கறிக்கடைக்களுக்கு வெட்டி அனுப்ப முடியாது. இப்படித்தான் ஆன்டிபயாடிக் மருந்துகளை பல்வேறு விலங்குகளுக்கு பயன்படுத்த தொடங்கினர். இதனால் இவற்றைச் சாப்பிடும் மனிதர்களின் உடலிலும் பல்வேறு பிரச்னைகள் தோன்ற ஆரம்பித்தன. முக்கியமாக ஒவ்வாமை. பல்வேறு நோய்களுக்கு கொடுக்கும் மருந்துகள் செயலிழந்து போயின. இப்போது மார்க்கெட்டில் ஆன்டிபயாடிக் பயன்படுத்தாத இறைச்சிகள் சிறப்பாக விற்கப்பட்டு வருகின்றன. அரை சதுர மீட்டர் இடத்தில் நின்றுகொண்டே வளர்ந்து எடை பிடித்து அப்படியே டிரேயில் கொண்டு வந்து இறக்கப்பட்டு கறியாகி சமைக்கப்படுகின்றன கோழிகள்.பிற விலங்குகளுக்கும் இதே நிலைமைதான்.
நன்றி: ஹவ் இட் வொர்க்ஸ் இதழ்