இடுகைகள்

சாம் செம்பெரிஸ் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

டைம் 100 - மாற்றத்தை உருவாக்கிய மனிதர்களின் வரிசை

படம்
               நன்மையின் விசை - லெஸ்லி லோக்கோ lesley lokko கட்டுமானத்துறையில் சாதித்து வரும் நட்சத்திர அந்தஸ்தை உழைப்பால் அடைந்த ஆப்பிரிக்க பெண். ஜோகன்னஸ்பர்க் பல்கலைக்கழகத்தில் கட்டுமானக்கலை படிப்பை படித்தவர். கடந்த ஆண்டு கோடைக்காலத்தில் கட்டுமானக்கலை சார்ந்த கண்காட்சி நடத்தப்பட்டது. அதன் நிர்வாகத்தில் முக்கியமான பொறுப்பு வகித்தவர் லோக்கோவும் கூடத்தான். அதில் தனது பங்களிப்பாக எதிர்காலத்திற்கான ஆய்வகம் என்ற பெயரில் படைப்பொன்றை வைத்திருந்தார். அந்த கண்காட்சியில் ஆப்பிரிக்காவைச் சேர்ந்த, அதே பாரம்பரியம் கொண்ட 89 கலைஞர்களை பங்கெடுக்க வைத்திருந்தார். லெஸ்லி லோக்கோ காதல், சாகசம் என்ற வகையில் டஜன் கணக்கிலான நூல்களை எழுதியுள்ள எழுத்தாளரும் கூடத்தான். கடந்த ஜனவரி மாதம், ராயல் இன்ஸ்டிடியூட் ஆப் பிரிட்டிஷ் ஆர்க்கிடெக்சர் என்ற அமைப்பில் கட்டுமானக்கலை பணிக்காக தங்கப்பதக்கம் பெற்றுள்ளார். அந்த அமைப்பு நிறுவப்பட்ட ஆண்டு 1848. இதுவரை கருப்பினத்தைச் சேர்ந்தவர்களுக்கு எந்த விருதும் வழங்கப்பட்டதில்லை. முதல்முறையாக லெஸ்லி லோக்கோவுக்கு விருது வழங்கப்பட்டுள்ளது. இதை அந்த அமைப்பு சற்று தாராள மனப்பான்மை கொண