இடுகைகள்

நிழல் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

நாவலை திரைப்படமாக எடுக்க ஆசைப்படுபவர்களுக்கான வழிகாட்டி நூல்!

படம்
            நாவலும் சினிமாவும் தொகுப்பு - திருநாவுக்கரசு நிழல் வெளியீடு நிழல் என்பது சினிமா தொடர்பான பத்திரிகை. இந்த பத்திரிகையில் பல்வேறு எழுத்தாளர்கள் சினிமா தொடர்பாக எழுதிய கட்டுரைகளை தொகுத்து நூலாக்கியிருக்கிறார்கள். நூலின் மையப்பொருள், நாவலை அடிப்படையாக வைத்து எப்படி திரைப்படங்களை உருவாக்குவது, அப்படி உருவாக்கியதில் சிறந்த திரைப்படங்கள் உள்ளனவா, அந்த பணியில் சொதப்பிய படங்கள் எவை, எந்த இடத்தில் பார்வையாளர்களை கவராமல் போயின என்ற விளக்கமாக கூறியுள்ள நூல். நூலின் இறுதியில், திரைப்பட இயக்குநர்கள் எந்தெந்த நாவல்களை திரைப்படமாக எடுக்கலாம் என குறிப்பிட்டு முருகேச பாண்டியன் அவர்கள் ஒரு பட்டியலைக் கொடுத்துள்ளார். அதை வாசிக்கும் ஆர்வமுள்ளவர்கள் நூல்களாக வாங்கி வாசித்து பயன்பெறலாம். மற்றபடி கதை, திரைக்கதை என அனைத்துமே தான் என்று போட்டுக்கொள்ள விரும்பாத பெருந்தன்மை கொண்ட இயக்குநர்கள் கதைகளை படித்து உரிமை வாங்கி திரைப்படமாக மாற்றிக்கொள்ளலாம். நாவல்களை படித்தால் கூட அதை திருடி தன்னுடைய படத்தில் வைத்து ஜெயிக்க முயல்பவர்களே அதிகம். அதையும் மீறி யோக்கிய இயக்குநர்கள் இருந்தால் எழுத்தாளர்களுக்கு நன்ம