இடுகைகள்

3டி துப்பாக்கி! லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

3டி துப்பாக்கி ரெடி!

படம்
அனைவருக்கும் 3 டி துப்பாக்கி ! அமெரிக்காவின் சுதந்திர சமூகம் உலகிற்கு இதைவிட மோசம் செய்்துவிடமுடியாது. துப்பாக்கி, போதைப்பொருட்களுக்கு அடுத்து 3டி முறையில் எளிதில் மெட்டல் டிடெக்டர்களுக்கு டிமிக்கி கொடுக்கும் பிளாஸ்டிக் துப்பாக்கியை சட்டப்பூர்வமாகவே சந்தைக்கு கொண்டு வந்துவிட்டனர்.  உலகிலுள்ள அனைவரும் விரைவில் 3 டி பிளாஸ்டிக் துப்பாக்கி டிசைனை தரவிறக்கி ஆயுதம் செய்யலாம் ; அதுவும் சட்டப்பூர்வமாகவே . " பார்க்லாண்டு துப்பாக்கிச்சூடு நிகழ்வு உள்ளிட்ட எதுவும் பிளாஸ்டிக் துப்பாக்கி (AR-15) யை மக்கள் பெறுவதை தடுக்க முடியாது " என்கிறார் 3 டி துப்பாக்கியின் கர்த்தாவான கோடி வில்சன் . இவர் 2013 ஆம் ஆண்டு உருவாக்கிய 3 டி துப்பாக்கி , தண்ணீர் துப்பாக்கியை போன்ற வடிவில் இருந்தது . அமெரிக்க அரசு https://ghostgunner.net தளத்தை தடுத்தாலும் 2015 ஆம் ஆண்டு வழக்கு தொடர்ந்து கடந்த ஜூனில் வில்சனுக்கு ஆதரவாக தீர்ப்பு வந்துள்ளது . தனிப்பட்ட பயன்பாட்டிற்காக என்று கூறி சட்டம் அனுமதித்தாலும் விபரீத விளைவுகளை உருவாக்கும் என்ற அச்சம் 3 டி துப்பாக்கி மூலம் ஏற்பட்டுள்ளது .