சாதி தேசத்தின் சாம்பல் பறவை
சாதி மேலாதிக்கவாதிகளின் வன்முறைகளே அதிகம். சாதி மறுப்பு திருமணங்களால் பட்டியலின மக்கள் அதிகம் கொல்லப்பட்டு இருக்கிறார்கள்.பெண்ணோ, ஆணோ சுயமாக முடிவெடுப்பதை சாதி ஆதிக்க சமுதாயம் ஏற்பதில்லை. தேவதத் பட்நாயக் கூறுவது போல, சாதி தூய்மை தமிழ்நாட்டில் தேவைப்படுகிறது. வடக்கு நாட்டில் மத, சாதி தூய்மைவாதம் உண்டு. தொண்டு நிறுவனங்களை ஒன்றிய அரசு தடை செய்து மதவாத, கலவரங்களை உருவாக்க, பாதிக்கப்பட்டவர்கள் குரல் வெளியே தெரியாமல் இருக்கும்படி செய்தது. அதைப் பற்றிய கட்டுரை முக்கியமானது. இறுதிக்கட்டுரையில் ஆணவ கொலைவழக்கை விசாரித்த அரசியல் பின்புலம் இல்லாத தலித் காவல்துறை அதிகாரி உளவியல் ரீதியாக துன்புறுத்தப்பட்டு தற்கொலைக்கு தள்ளப்படுகிறார். படுமோசமான நிலைமை அல்லவா? கொத்தடிமைகளை மீட்க வேண்டிய ஆட்சியர், முதலாளிகளுக்கு குற்றவாளிகளுக்கு ஆதரவாக நின்று கதிரை மிரட்டியது அதிர்ச்சி தரக்கூடிய ஒன்று..... நூல் முழுக்க சாதி மேலாதிக்க தாக்குதல்கள், பட்டியலின பெண்களை வல்லுறவு செய்வது, தலித்துகளின் வீட்டை எரிப்பது, சொத்துகளை அழிப்பது, தீண்டாமையைக் கடைபிடிப்பது... பிணங்களை புதைக்க பொதுவழியில் அனுமதி மறுப்பு என்று தமிழ்நாட்டின் நிலைமை பீதியூட்டுகிறது. செப்டிக் டேங்குகளை சுத்தம் செய்பவர்கள் பற்றி தனி அத்தியாயம் உள்ளது.
கருத்துகள்
கருத்துரையிடுக