தேசநலனை லட்சியமாக கொண்ட பத்திரிகையாளர் ஏ என் சிவராமன்!
ஏ என் சிவராமனின் பத்திரிகை உலகம் பொன் தனசேகரன் விலை ரூ.30 உலக தமிழாராய்ச்சி நிறுவனம் தினமணி நாளிதழில் நாற்பது ஆண்டுகள் ஆசிரியராக பணியாற்றியவர் பத்திரிகையாளர் ஏ என் சிவராமன். தனது எண்பத்து மூன்று வயதில் பணியில் இருந்து ஓய்வு பெற்றார். அவரது நாளிதழ் செயல்பாடுகளை நூல் கவனம் குவித்துப் பேசுகிறது. நூல் வழியாக ஏ என் சிவராமன் தமிழுக்கென செய்த முக்கியமான செயல்பாடுகள், மொழியாக்கம், எழுதிய கட்டுரைகள், என்னென்ன விஷயங்களில் கவனம் செலுத்தினார் என்பதைப் பற்றி பத்திரிகையாளர்கள் அறிந்துகொள்ள முடியும். ஏ என் சிவராமன், டிஎஸ் சொக்கலிங்கம் என்ற தனது உறவினர் மூலம் பத்திரிகைத்துறைக்கு வந்தார். காந்தியின் ஒத்துழையாமை போராட்டத்தில் பங்கேற்க கல்லூரி படிப்பை கைவிட்டுவிடுகிறார். கல்லூரி படிப்பை கைவிட்டாலும் பல்வேறு நூல்களை வாசிப்பதை கைவிடவில்லை. அதனால்தான் தினமணி நாளிதழில் ஆசிரியராக பொறுப்பேற்று நடத்த முடிந்திருக்கிறது. ஏறத்தாழ நாற்பது ஆண்டுகள் அந்த பொறுப்பில் இருந்திருக்கிறார். வெறுமனே அறைக்குள் இருந்தபடியே கட்டுரைகளை எழுதவில்லை. ஆசிரியராக இருந்தாலும் பல்வேறு அயல்நாடுகளுக்கு பயணித்து ...