இடுகைகள்

ஆகஸ்ட் 15 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

அறியப்படாத விடுதலை வீரர்களுக்கு புதிய கௌரவம்! - விடுதலைப் பெருநாள் சிறப்பு திட்டம்

படம்
  இந்திய அஞ்சல்தலை சுதந்திர இந்தியாவின் முதல் ஸ்டாம்ப் அறியப்படாத உள்ளூர் விடுதலைப் போராட்ட வீரர்களுக்கு அஞ்சல் தலைகளை வெளியிடும் இந்திய அரசு! எழுபத்தைந்தாவது விடுதலை பெருநாள் விழா தொடர்பான நிறைய திட்டங்களை இந்திய அரசு தொடங்கியது. அதில் முக்கியமானது, வரலாற்றில் இடம்பெறாத உள்ளூர் விடுதலை வீரர்களை ஆவணப்படுத்துவது இந்த வகையில் இந்திய அரசின் கலாசாரத்துறை அமைச்சகம், நாடு முழுவதும் உள்ள 25 வரலாற்று ஆய்வாளர்களோடு இணைந்து விடுதலை போராட்ட வீரர்களை   கண்டறிய முயன்றது. இந்திய அரசின் முயற்சியைத் தொடர்ந்து நாட்டிலுள்ள மாநில அரசுகளின் உதவியோடு தொடக்க கட்டமாக 10 ஆயிரம் விடுதலைப் போராட்ட வீரர்கள் கண்டறியப்பட்டுள்ளனர். இவர்களின் உருவங்களை இந்திய அரசு அஞ்சல் தலையாக மாற்றி அவர்களை பெருமைப்படுத்தவிருக்கிறது. தனிநபர்கள், குறிப்பிட்ட தொகையை அஞ்சல் அலுவலகத்தில் கட்டி அவர்களின் புகைப்படங்களைக் கொடுத்தால் அதையே அஞ்சல் தலையாக மாற்றித் தரும் செயல்பாடு உள்ளது. அதிலிருந்து விடுதலை வீர ர்களின் அங்கீகாரம் எப்படி மாறுபடுகிறது என தெரியவில்லை. உத்தரப்பிரதேசத்தைச் சேர்ந்தவர் மகேந்திர பிரதாப் சிங். இவர் உள்ளூர் கலை