இடுகைகள்

இறப்பு லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’

படம்
''மக்களோடு இணைந்து தொற்றுநோய்களுக்கான தீர்வுகளைக் கண்டுபிடிக்கிறோம்'’ கிறிஸ்டியன் ஹேப்பி, ஆப்பிரிக்க தொற்றுநோய் மரபணுவியல் மையத்தின் நிறுவனர். இந்த மையம், ஆப்பிரிக்க மருத்துவர்களுக்கு வேகமாக பரவும் தொற்றுநோய் பற்றிய பயிற்சியை, எச்சரிக்கை செயல்பாடுகளை கருவிகளை வழங்குகிறது. 2025ஆம் ஆண்டு டைம் வார இதழின் செல்வாக்கு பெற்ற மனிதர்கள் பட்டியலில் கிறிஸ்டியன் ஹேப்பி இடம்பிடித்துள்ளார். நீங்கள் செய்துகொண்டிருக்கும் பணி, அதற்கான தீர்வு பற்றி சுருக்கமாக விளக்க முடியுமா? நான் மூலக்கூறு உயிரியல் மற்றும் மரபணுவியல் துறை சார்ந்த பேராசிரியர். ரெட்டீமர் பல்கலைக்கழகத்தில் தொற்றுநோய்க்கான மரபணு மையத்தின் இயக்குநராக பணியாற்றிவருகிறேன். ஆப்பிரிக்காவில் பரவும் தொற்றுநோய்களை தடுக்க, 2013ஆம் ஆண்டு மரபணு மையத்தை தொடங்கினோம். ஆப்பிரிக்காவில் எபோலா தொற்று பரவத்தொடங்கிய காலம்தொட்டு தொற்றுநோய் பரவுதலை தடுக்க முயன்று வருகிறோம். கடந்த பத்தாண்டுகளாக இயங்கி வந்தாலும் இத்துறைக்கு நாங்கள் புதிய நிறுவனம்தான். துறையில் செய்து வரும் அடிப்படைக் கட்டமைப்பு, மேம்பாடு, தொற்றுநோயை எதிர்கொள்வதற்கான மருத்துவப...

புரோஜெரியா எனும் சிறுவயது முதுமை நோய்!

படம்
        அறிவுப்பற்று மிஸ்டர் ரோனி அவசியமான சத்துகள் எவை? மாவுச்சத்து, புரதம், நீர், வைட்டமின், கனிமச்சத்து ஆகியவை உடலுக்கு அவசியமானவை. மாவுச்சத்து, புரதம், கொழுப்பு என்பதை ஆற்றல் சத்துகள். இவை உடலின் தினசரி செயல்பாட்டிற்கு முக்கியமானவை. வைட்டமின் சப்ளிமென்டுகள் அவசியமா? உணவில் இருந்து போதுமான சத்துகள் கிடைக்கவில்லை என்று கூறுபவர்கள் வைட்டமின் சப்ளிமென்டுகளை எடுத்துக்கொள்ளலாம். இதற்கென ஊட்டச்சத்து நிபுணர்கள், மருத்துவர்கள் உள்ளனர். அவர்களிடம் வழிகாட்டுதல் பெறுவது நல்லது. லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்றால் என்ன? மாட்டின் பாலில் உள்ள சர்க்கரைக்கு லாக்டோஸ் என்று பெயர். இதை செரிமானம் செய்ய லாக்டேஸ் என்ற என்சைம் தேவைப்படுகிறது. மனிதர்களுக்கு மாட்டுப்பால் செரிமானம் வயதாக வயதாக குறைந்துகொண்டே வரும். இப்படி பால் செரிமானம் ஆகாதபோது, உடலில் வயிற்றுவலி, வயிற்றுப்போக்கு, வயிற்றுப் பொருமல், அதிகளவு வாயு உருவாவது ஆகிய தொந்தரவுகள் ஏற்படும். இதையே லாக்டோஸ் இன்டாலரன்ஸ் என்று மருத்துவர்கள் கூறிப்பிடுகிறார்கள். இதற்கு ஒரே வழி, பால் பொருட்கள் உண்பதைக் குறைத்துக்கொள்வதுதான். முற்றாக பால் பொருட்...

இறப்பை ஏற்படுத்தும் பாக்டீரிய நச்சு!

படம்
        அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி உணவில் நச்சுத்தன்மை எப்படி ஏற்படுகிறது? உங்களின் ஜென்ம எதிரிகள் மதிய சோறு வாங்கித் தருகிறேன் என்று கூப்பிட்டு சோற்றில் விஷம் வைக்கலாம். எனவே, உங்களின் நண்பர் என்ற போர்வையில் யார் அழைத்தாலும், அவர்களுக்கு நீங்கள் செய்த செயல்களை நன்றாக நினைத்துப் பாருங்கள். இல்லையெனில் பெரும் நஷ்டத்தை, அவமானத்தை, உயிரபாயத்தை சந்திக்க நேரும். இது தெரிந்து ஏற்படுவது. தெரியாமல் பல்வேறு எதிரெதிர் உணவுப்பொருட்களை உணவில் தாறுமாறாக சேர்த்து சாப்பிடும் பழக்கம் பிரபலமாகி வருகிறது. இது வயிற்றுக்குள் கலவரத்தை ஏற்படுத்தும். நிலப்பரப்பு சார்ந்து உணவுகள் மாறும். அதற்கேற்ப நீங்களும் மாறிக்கொள்ளவேண்டும். அனைத்து இடங்களிலும் ஒரே வகையான உணவு என்பது நச்சுத்தன்மையை ஏற்படுத்தக்கூடும். தெரியாமல் உணவில் நச்சுத்தன்மை சேர்வது குழந்தைகள் வளருகிற வீட்டில் ஏற்படுகிற விபத்து. இதற்கு கவனமாக விழிப்புணர்வுடன் இருப்பதே ஒரே வழி. இயற்கையில் இறப்பை ஏற்படுத்தும் வகையிலான நச்சு எது? பாட்டுலினல் என்ற நச்சு, குளோஸ்டிரிடியம் பாட்டுலினம் என்ற பாக்டீரியத்திலிருந்து பெறப்படுகிறது. இந்த நச...

நவீன காலத்தில் மன அழுத்தத்தை ஏற்படுத்தும் காரணிகள்! - மிஸ்டர் ரோனி

படம்
              அறிவியலால் வெல்வோம் மிஸ்டர் ரோனி ஒருவரின் ஆரோக்கியத்தை என்னென்ன விஷயங்கள் பாதிக்கும்? ஒருவரின் வயது, பாலினம், வேலை, குடும்ப வரலாறு, குணம், உடலின் வளர்சிதை மாற்றம் ஆகிய அம்சங்கள் மாறுபாடாக அமைந்தால், குளறுபடியானால் உடல், மனம் என இரண்டுமே கெட்டுப்போகும். இதில் சில அம்சங்கள் மாறாதவை. மற்றவை மாறக்கூடியவையாக இருக்கும். எப்போதும் இன்பத்தை குடும்பத்தோடு பகிர்ந்துகொண்டு சோகமான துக்க கதைகளை பகிரும் நண்பர்களை விட்டு விலகுங்கள். சாதி, மதம், இனம் என பற்று கொண்ட ஆட்கள் இக்காலத்தில் மட்டுமல்ல எப்போதும் ஆபத்தானவர்கள். இவர்களோடு பேசுவது நேரத்திற்கு கேடு, உங்கள் மூளையிலும் பூஞ்சை படர வாய்ப்புள்ளது. குறிப்பாக மெட்டா நிறுவனத்தின் ஆப்களை பயன்படுத்தினால், அதிலிருந்து விலகுங்கள். நாய், பூனையை வளர்க்க முயலுங்கள், குடும்பத்தினரோடு கிடைக்கும் நேரங்களில் வாயாடுங்கள். உங்கள் தன்னம்பிக்கை, அறிவு என இரண்டுமே வளரும். மன அழுத்தத்தை ஏற்படுத்துவது எது? சுற்றியுள்ள சைக்கோ சாடிஸ்டுகள்தான் என இன்ஸ்டன்டாக காரணம் கூறலாம். இருந்தாலும் அறிவியலில் காரணம் தேடுவோம். அமெரிக்காவின் ...

ப்ரீடெர்ம் (preterm) குழந்தைகள் இறப்பு!

படம்
                 மருத்துவம் ப்ரீடெர்ம் என்றால் என்ன? தாயின் வயிற்றிலுள்ள குழந்தை 37 வாரங்களுக்கு முன்பாகவே பிறப்பதை ப்ரீடெர்ம் என மருத்துவர்கள் குறிப்பிடுகிறார்கள். இதில் குழந்தைகள் உயிரோடு இருந்தாலும், அவர்களை பாதுகாப்பது நெடிய போராட்டமாகவே இருக்கும். குழந்தை குறிப்பிட்ட நாட்களுக்கு முன்னதாக பிறப்பது ஆபத்தானது. அதில் சில பிரிவுகள் உள்ளன. அதீதம் இருபத்தெட்டு வாரங்களுக்கு குறைவாக பிறப்பது அபாயம் இருபத்தெட்டு வாரங்களில் பிறப்பது. மத்திமம் முப்பத்தி இரண்டு அல்லது முப்பத்து ஏழு வாரங்களில் பிறப்பது இந்தியாவில் 2020ஆம் ஆண்டு கணக்குப்படி 13.4 மில்லியன் குழந்தைகள் முழுமையாக பிரசவகாலம் நிறைவு பெறுவதற்கு முன்னதாகவே பிறந்துள்ளன. அதாவது பத்தில் ஒரு குழந்தை இப்படி பிறக்கிறது. 2019ஆம் ஆண்டு மட்டும் ஒன்பது லட்சம் குழந்தைகள் முன்கூட்டியே பிறந்து பிறப்பு சிக்கல்களால் இறந்து போயுள்ளன. காரணம் என்ன? அடுத்தடுத்த கர்ப்பங்கள், குழந்தை திருமண கர்ப்பம், நோய்த்தொற்று, நீரிழிவு, ரத்த அழுத்தம், மரபணு பிரச்னைகள், மோசமான ஊட்டச்சத்து நிலை

ஐரோப்பாவில், ஏடிஸ் கொசுக்கள் இனப்பெருக்கம் அதிகரித்து வருகிறது!

படம்
  டெங்கு மலேரியா பரவலை காலநிலை மாற்றம் ஊக்கப்படுத்துகிறதா? நவீன மருத்துவத்தின் உதவியால் டெங்கு, மலேரியா இறப்புகள் பெரிதும் கட்டுப்படுத்தப்பட்டுவிட்டன. அதைத் தாண்டி அவை பரவுகின்றன, உயிர்ப்பலி வாங்குகின்றன என்றால் அதற்கு காரணம் மருத்துவ வசதிகள் கிடைக்காமல் இருக்கும் பகுதிகளாக இருக்கலாம். ஆனால், ஐரோப்பாவில் ஏடிஸ்  மூலம் பரவும் டெங்கு வேகமாக பரவி வருகிறது. இந்த நோய் பரவுவதற்கு தட்பவெப்பநிலையும் முக்கியமான காரணம்.  ஒருவர் வெளியில் பயணித்து டெங்கு, மலேரியாவுடன் வந்தாலும் கூட ஐரோப்பாவில் உள்ளவர்களுக்கு நோய் பெரிய பாதிப்பை தருவதில்லை. வீட்டில் ஓய்வெடுத்தாலே அவர் நோயிலிருந்து மீண்டு வந்துவிட முடியும். கடந்த 2015 -19 காலகட்டத்தில் மூன்றாயிரம் டெங்கு நோயாளிகள் பற்றிய பதிவுகள் உள்ளன. இவை அனைத்துமே பயணம் சார்ந்து ஏற்பட்டவை. இதில் ஒன்பது நோயாளிகள் மட்டுமே உள்ளூர் அளவில் நோய் வந்து பாதிக்கப்பட்டவர்களாக இருந்தனர். ஆனால் நிலைமை அப்படியே இருக்கவில்லை. கடந்த 2022, 2023 ஆண்டுகளில் டெங்கு நோயாளிகளின் எண்ணிக்கை கூடத் தொடங்கியது. 2022இல் மட்டும் பிரான்சில் 65 நோயாளிகள் பாதிக்கப்பட்டுள்ளனர். இத...

வெப்ப அலையை இயற்கை பேரிடர் பட்டியலில் சேர்ப்பதற்கு தயக்கம் என்ன?

படம்
        வெப்ப அலைகள் பேரிடராக அறிவிக்கப்படக்கூடுமா? நாடு முழுக்க வெப்ப அலைகளின் தாக்குதல் தீவிரமாகியுள்ளது. பள்ளி திறப்பு கூட தள்ளி வைக்கப்பட்டது. குடிநீர் தட்டுப்பாடு ஏற்படத் தொடங்கியுள்ளது. இந்த சூழலில் வெப்ப அலை தாக்குதலை, பேரிடர் மேலாண்மை சட்டத்தில் பேரிடராக அறிவிக்க முடியுமா என்பது பற்றிய விவாதங்கள் உருவாகியுள்ளன. பேரிடர் மேலாண்மைச் சட்டம் 2005ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. வெப்பஅலை தாக்குதலுக்கு உள்ளானவர்களுக்கு மாநில அரசுகள் தம் சொந்த நிதியையே இப்போதுவரை செலவிட்டு வருகின்றன. பேரிடர் மேலாண்மை சட்டத்தின் கீழ் வெப்ப அலை வந்தால், நிதி ஒன்றிய அரசிடமிருந்து வர வாய்ப்புள்ளது. 1999ஆம் ஆண்டு ஒடிஷாவில் ஏற்பட்ட புயல் பாதிப்பு, 2004ஆம் ஆண்டு ஏற்பட்ட சுனாமி சம்பவம் ஆகியவற்றின் காரணமாக தேசிய பேரிடர் மேலாண்மை சட்டம் உருவாக்கப்பட்டது. இயற்கை அல்லது மனிதர்கள் உருவாக்கிய செயல்பாடு என இரண்டு வகையிலும் ஒன்றிய அரசின் உதவியை பேரிடர் காலத்தில் பெறலாம். இயற்கை பேரிடரில் சொத்துகள் இழப்பு, மக்கள் உயிரிழப்பு பேரளவில் ஏற்படும். அதை ஈடுகட்ட ஒன்றிய அரசு உதவுகிறது. ஒரு மாநிலத்தில் இயற்கை பேரிட...

டைம் 100 - சிக்கில் செல் நோயைத் தீர்க்கும் சிகிச்சையைக் கண்டறிந்த ஆராய்ச்சியாளர்!

படம்
            ஸ்டூவர்ட் ஆர்கின் stuart orkin மரபணு தொடர்பான நோய்களை தீர்ப்பது, குணப்படுத்துவது, குறைந்தபட்சமான வலி, வேதனையை குறைப்பது கடினமான ஒன்று. உலகமெங்கும் உள்ள மரபணு ஆராய்ச்சியாளர்கள் விடாமுயற்சியோடு செயல்பட்டு, சிகிச்சையை மேம்படுத்த, தீர்வுகளைக் கண்டறிய முயன்று வருகிறார்கள். அவர்களில் முக்கியமான ஆராய்ச்சியாளர், ஸ்டூவர்ட் ஆர்கின். இவர் சிக்கில் எனும் நோயைக் குணப்படுத்தும் ஆராய்ச்சியை செய்துவருகிறார். ஹீமோகுளோபின் மரபணுவில் உள்ள டிஎன்ஏவில் ஏற்படும் மாறுதலால் சிக்கில் நோய் ஏற்படுகிறது. இதன் காரணமாக ரத்த செல்களின் வடிவம் மாறி, உடலில் ரத்தவோட்டத்தில் தடை ஏற்படுகிறது. இது உயிருக்கே ஆபத்தான நிலை. ஆர்கின், கிரிஸ்பிஆர் நுட்பத்தை சிக்கில் நோயைத் தீர்க்கும் சிகிச்சைக்குப் பயன்படுத்துகிறார். கிரிஸ்பிஆர் சிகிச்சையாளர்கள், வெர்டெக்ஸ் பார்மசூட்டிகல் நிறுவனம் ஆகியோர் இணைந்து ஆர்கினின் கண்டுபிடிப்பை சிகிச்சைக்கு பயன்படுத்த அமெரிக்க அரசிடம் அனுமதி பெற்றுவிட்டனர். கடந்த ஆண்டு டிசம்பர் மாதம் பெற்ற அனுமதி மூலம், சிக்கில் நோயால் பாதிக்கப்பட்ட நோயாளிகளின் உடலில் கிரிஸ்பிஆர் ...

ஐஇடி வெடிகுண்டுகள் - ஒரு அலசல்

படம்
  காவிக்கட்சி ஆட்சியில் கலவரங்கள் தேசியமயமாக்கப்பட்டு சட்டப்பூர்வமாக நடைபெறுகிறது. நாளிதழ்களில், இந்தமுறை எத்தனை பேர் இறந்தார்கள் என எண்ணிக்கை விளையாட்டுதான் மக்கள் விளையாட வேண்டும். அந்தளவு சிறுபான்மையினர் திட்டமிட்டு கொல்லப்படுகிறார்கள். சொத்துகள் சூறையாடப்பட்டு வருகின்றன. இதில், அதீதமாக வெடிகுண்டு வைப்பதும் புதிதாக சேர்ந்துள்ளது. தேசப்பற்று கொண்ட வட இந்தியர்கள் கட்டுப்பாடு தவறாமல் காவிக்கட்சிக்கு வாக்களித்துவிட்டு வேலை செய்யவும், வாழவும் தென்னிந்தியாவுக்கு வந்துவிடுகிறார்கள். இந்த ராஜதந்திரம் புரியாத வடநாட்டிலேயே வேலை செய்யும் மக்கள் மாட்டு மூத்திர பைத்தியங்களிடம் மாட்டிக்கொள்கிறார்கள்.  பெங்களூருவில் உள்ள ராமேஸ்வரம் கஃபே என்ற இடத்தில் ஐஇடி என்ற வெடிகுண்டு வெடித்துள்ளது. இந்த விபத்தில் பத்துபேர் காயமுற்றிருக்கிறார்கள். ஐஇடி என்பதற்கு இம்ப்ரூவைஸ்டு எக்ஸ்ளோசிவ் டிவைஸ் என்று விரிவாக்கம் கூறுகிறார்கள்.  சிசிடிவி கேமராவில் கஃபேயில் மர்ம மனிதர் பேக்கோடு வந்து உட்கார்ந்திருக்கும் காட்சியை காவல்துறை கைப்பற்றியுள்ளனர். வீட்டிலேயே தயாரிக்கப்பட்ட குண்டு வகையில் ஐஇடி வருகிறது. இதை...

வாழ்க்கை, இறப்பு என இரண்டு புள்ளிகளுக்குள் ஓடும் ஓட்டம்!

படம்
  வாழ்க்கையில் நல்லது, கெட்டது என இரண்டு விஷயங்களும் உண்டு. இதை ஒருவர் தவிர்க்கவே முடியாது. நல்ல விஷயங்களை எதிர்கொள்ளும் நேரம், நினைத்தே பார்க்க முடியாத விஷம் கொண்ட சுயநலமான மனிதர்களையும் எதிர்கொள்ளவேண்டும். இதுதான் ஒருவரின் பிறப்பு முதல் இறப்பு வரையில் ஒருவரை சுழன்றடித்துக்கொண்டே வருகிறது. நன்மை, தீமை என இரண்டு விஷயங்களுமே சமூகத்தை ஒருவகையில் முன்னே நகர்த்துகின்றன என்று கூறவேண்டும். ஒன்று இல்லாதபோது மற்றொன்று இல்லை.  இறப்பு பற்றிய பயத்தை ஒருவர் நீக்கிக்கொள்ளவே பாலியல் மீதான ஈர்ப்பு உதவுகிறது என ஃப்ராய்ட் கருதினார். ஆராய்ச்சியாளர் மெலானி கிளெய்ன், இந்த கருத்தை விரிவுபடுத்தினார். இறப்பு பயத்தை வெளியே கொண்டு வந்தால், அது உள்ளுணர்வில் ஆபத்தை உணர்ந்து தப்பிக்கும் ஆவேசம் கொண்ட தன்மையை அடைகிறது. இதை பாலியல் உணர்வுக்கு எதிராக நிறுத்தலாம். வளர்ச்சி, புதுமைத்திறன் என்ற ஆசைகள் எந்தளவு ஆழமாக வேர்விடுகிறதோ, அதற்கு நிகராக அதை எதிர்க்கும் அழிவு சக்திகளும் வேர்விட்டு வளர்கின்றன. இந்த முரண்பாடுகள்தான் வன்முறை, ஆவேசம் ஆகியவற்றுக்கு அடிப்படையான காரணமாக அமைகிறது. பிறந்த குழந்தை வெளியுலகிற்கு ஏற்...

புரொஜெக்ட் சீட்டா வெற்றி பெறுமா?

படம்
  சீட்டா அறிமுகம் வெற்றி பெற்றதா? கடந்த செப்டம்பர் மாதம், எட்டு ரேடியோகாலர் பொருத்தப்பட்ட சீட்டாக்கள் நமீபியாவிலிருந்து இந்தியாவின் குனோ தேசியப்பூங்காவிற்கு கொண்டு வரப்பட்டன. ஏறத்தாழ 5 ஆயிரம் மைல் தூர பயணம். புரொஜெக்ட் சீட்டா என்ற பதிமூன்று ஆண்டு கால திட்டத்தின்படி சீட்டாக்களை இந்தியாவிற்கு கொண்டு வந்தனர். கடந்த எழுபுது ஆண்டுகளில் இந்தியாவில் இருந்த புல்வெளிப்பகுதி சீட்டாக்கள் வேட்டையர்களால் வேட்டையாடப்பட்டன. எனவே, சீட்டாக்கள் எளிதாக அழிந்துவிட்டன. செப்டம்பர் மாதம் 18ஆம் தேதி, புரொஜெக்ட் சீட்டா திட்டத்தின் இரண்டாவது   கட்டம் தொடங்கியது. மொத்தமுள்ள இருபது சீட்டாக்களில் எட்டு சீட்டாக்கள், மூன்று குட்டிகள் இறந்துவிட்டன. இப்போது மீதமுள்ள சீட்டாக்களை பாதுகாக்க தேசியப்பூங்கா அதிகாரிகள் முயன்று வருகிறார்கள். உண்மையில் சீட்டாக்கள் கொண்டு வரப்பட்டு அவற்றை பாதுகாக்க முடியாது போனது இந்தியாவுக்கு தர்மசங்கடமான நிலைமைதான். அவற்றை எப்படி பாதுகாப்பது, பராமரிப்பது என்று பணியாளர்களுக்கு தெரியவில்லை என்று கருத்துகள் பேசப்பட்டுவருகின்றன. இறப்பிற்கான முக்கியக் காரணம், ரேடியோ காலர் பொருத்தப்ப...

பிஆர்சிஏ 2 மரபணு ஏற்படுத்தும் புற்றுநோய்! - தலைமுறைகளைத் தாண்டி தொடரும் வேதனை

படம்
  புற்றுநோய் வருவதற்கான வாய்ப்பு இன்று அதிகரித்திருக்கிறது. வாழ்க்கை முறை, உணவு, மரபணு வழியாக எளிதாக புற்றுநோய் ஒருவரை தாக்கி அழிக்கிறது. கூடவே, அவரது குடும்பத்தையும் பாதிக்க 50 சதவீதம் வாய்ப்புள்ளது. எனவே, இந்த ஆபத்திலிருந்து தப்பி பிழைக்க பலரும் மருத்துவ சிகிச்சையை நாடி வருகிறார்கள். இதில் பொருளாதார சிக்கல்களும் உள்ளன. அமெரிக்க மருத்துவர் சூசனா உங்கர்லெய்டர், அவரது அப்பாவிற்கு சோதனை மூலம் கண்டறிந்த கணைய புற்றுநோயால் ஆடிப்போயிருந்தார். அப்பாவிற்கு வந்த உயிர்க்கொல்லி நோய் மூலம் தனக்கு எதிர்க்காலத்தில் வரும் ஆபத்தை அவர் முதலில் உணரவில்லை. 2022ஆம் ஆண்டு சூசனாவின் அப்பா ஸ்டீவனை சோதித்த மருத்துவர்கள் அவரது உடலில் இருந்த பிஆர் சிஏ 2 எனும் மரபணு, மார்பு, கருப்பை, கணையத்தில் புற்றுநோய்   உண்டாக்குவதோடு அவரது பிள்ளைகளுக்கும் புற்றுநோய் பாதிப்பை ஏற்படுத்தும் என்பதை அடையாளம் கண்டனர். அவர்களின் பரிந்துரை பெயரில் சூசனாவும் அவரது சகோதரியும் மரபணு சோதனையை செய்து புற்றுநோய் அபாயத்தை அடையாளம் கண்டுகொண்டனர். நாற்பத்து மூன்று வயதாகும் சூசனா, மருத்துவமனை ஒன்றில் மருத்துவராக செயல்பட்டுவருகி...

சுயத்தை அழித்து காதலை அடையாளம் காண்போம் - ஜே கிருஷ்ணமூர்த்தி

படம்
        தென் தேர் ஈஸ் லவ் ஜே கிருஷ்ணமூர்த்தி தமிழாக்கம்   குழந்தைகளின் வளர்ப்புக்கு நிறைய பெற்றோர் பொறுப்பேற்று கொள்கிறார்கள். ஆனால் அவர்கள் அந்த பொறுப்பை எப்படிப் புரிந்துகொள்கிறார்கள் என்பது மாறுபடுகிறது. குழந்தைகள் எதை செய்யவேண்டும், எதை செய்யக்கூடாது, அவர்கள் என்ன வேலையை செய்யவேண்டும் என பெற்றோர் தீர்மானித்துக் கூறுகிறார்கள். தங்கள் பிள்ளைகள் சமூகத்தில் முக்கியமான இடத்தை அந்தஸ்தை அடைய வேண்டுமென நினைக்கிறார்கள். இதற்குள்தான் அவர்கள் பிள்ளைகளை வளர்க்கும் பொறுப்பை ஒரு பகுதியாக வைத்திருக்கிறார்கள். சமூகத்திற்கு பொருத்தமான மனிதர்களாக்க அவர்களை உருவாக்கி போர், முரண்பாடு, கொடூரங்களை செய்யும் விதமாக மாற்றுகிறார்கள். இப்படி பிள்ளைகளை வளர்ப்பதை அக்கறை, அன்பு என்று கூறமுடியுமா? ஒரு செடியை, விதையூன்றி வளர்க்க நாம் நிறைய விஷயங்களை செய்கிறோம். மண்ணைச் சோதித்து, மரக்கன்றை நட்டுவைத்து அதற்கு தினமும் தண்ணீர் ஊற்றுகிறோம். ஆனால் பிள்ளைகளை வளர்க்கும்போது, அம்முறையின் வழியாக  அவர்களை மெல்ல கொல்கிறோம். உண்மையில் நீங்கள் பிள்ளைகளை சரியாக வளர்க்கிறீர்கள் என்றால், உலகில் போர் ந...

பணம் சம்பாதிக்க முதியவர்களை திட்டம் தீட்டி கொன்ற பெண்மணி - ஏமி

படம்
  1873ஆம ஆண்டு பிறந்தவர், ஏமி. இருபது வயதில் ஜேம்ஸ் ஆர்ச்சர் என்பவருடன் திருமணமானது. இவருக்கு பிறந்த பெண்பிள்ளையின் பெயர் மேரி. இவருக்கு செவிலியர் படிப்பு படிக்க ஆசை, ஆனால் படிக்கவில்லை. ஆனாலும் தன்னம்பிக்கை இருந்தது. படிக்காவிட்டால் என்ன படித்ததாக கூறிக்கொள்வோம் தவறில்லை என நினைத்தார். எனவே, கனெக்டிகட்டில் வயதானவர்களுக்கான நர்சிங் ஹோமை தொடங்கி நடத்தினார். 1907ஆம் ஆண்டு ஏமி, தனது நர்சிங் ஹோமை விண்ட்சோர் எனுமிடத்திற்கு மாற்றிக்கொண்டார்.வயதானவர்களுக்கான இல்லமாக மாற்றி நடத்தினர்.   தொடங்கிய காலத்தில் இருந்து முதல் மூன்று ஆண்டுகளில் சேர்ந்த பத்து வயதானவர்கள் நோயாளிகளாக இருந்து காலமானார்கள். 1910ஆம் ஆண்டு கணவர் ஜேம்ஸ் ஆர்ச்சர் இயற்கையான முறையில் இறந்துபோனார். பிறகு மைக்கேல் கில்லிகன் என்பவரை ஏமி மணந்துகொண்டார். இவரது ஆயுள் அதற்குப் பிறகு பனிரெண்டு மாதங்களாக குறைந்துவிட்டது. 1911- 1916 வரையிலான காலகட்டத்தில் நர்சிங் ஹோமில் இருந்தவர்களில் 48 பேர் காலமானார்கள். மைக்கேல் கில்லிகனின் குடும்ப மருத்துவர் மருத்துவர் கிங். இவருக்கு, ஏமியின் செயல்பாடுகளில் நம்பிக்கை இருந்தது. அதனால் அவர், ...

இளம் விதவையைக் காதலித்து அதன் வழியாக தனது அம்மாவை உணரும் பால்ராஜூ! - சாவு கப்புரு சல்லாக

படம்
  சாவு கப்புரு சல்லாக தெலுங்கு இயக்குநர் – கவுசிக் பெகல்படி இசை – ஜேக்ஸ் பிஜோய் இறந்தவர்களை மயானத்திற்கு கொண்டு செல்லும் பஸ்தி பால்ராஜ், சாவு வீட்டில் கணவரை இழந்த பெண்ணைக் காதலிக்கிறார். இந்த காதல் இருவர் வாழ்விலும், குடும்ப உறுப்பினர்களிடையேயும் ஏற்படுத்தும் விளைவுகள்தான் கதை. குடிசைப்பகுதி மக்களாக வாழ்பவர்களின் வாழ்க்கை, மத்திய வர்க்க கிறிஸ்தவர்களின் வாழ்க்கை என இரண்டையும் இயக்குநர் விவரித்துள்ளார். பஸ்தி பால்ராஜூக்கு, அவரது தாயான கங்கம்மாதான் எல்லாமே. கங்கம்மா, விசாகபட்டினம் கடற்கரையில் சோளத்தை சுட்டு வருகிறார். பால்ராஜின் அப்பா, வாதம் வந்து விழுந்து படுக்கையில் கிடக்கிறார். வீட்டுக்கான சம்பாத்தியம் என்பது கங்கம்மாவின் பொறுப்பு. பஸ்தி பால்ராஜ் , இறந்தவர்களை தூக்கிச் சென்று மயானத்தில் அடக்கம் செய்யும் வேலையை செய்கிறார். இதில் கிடைப்பதுதான் அவரது சம்பாத்தியம். சாவு வீட்டுக்குப் போகும்போது அங்கு, இறந்த பிணத்தின் அருகே மல்லிகா என்ற இளம்பெண்ணைப் பார்க்கிறார் பால்ராஜ். உடனே, காதல் வயப்பட்டு பிணத்தை தூக்கி வண்டியில் வைக்கும் முன்னரே காதல் வயப்படுகிறார். உடலை அடக்கம் செய்த...

மிரட்டும் பாம்பு, குறையும் சிகிச்சை!

படம்
  2020ஆம் ஆண்டில் பாம்புகளால் இறந்த மனிதர்களின் எண்ணிக்கை 78 என தமிழ்நாட்டில் ஆவணப்பதிவு சொல்லுகிறது. இதனை நேஷனல் ஹெல்த் புரோஃபைல் அமைப்பின் (என்ஹெச்பி)  தகவல் உறுதி செய்துள்ளது. கோடைக்காலம் வந்துவிட்டால் பாம்புகளின் வருகை வீடு, வயல், கிடங்கு என தொடங்கிவிடும். இதனை பிடிக்கவென பயிற்சிபெற்ற வல்லுநர்கள் உள்ளனர் கோவையில் நடப்பு ஆண்டில் அதிகளவாக 55 பேர் பாம்பு கடித்து இறந்துள்ளனர். இது தமிழ்நாட்டிலேயே அதிகளவு மரண எண்ணிக்கை.  நகரம், கிராமம் ஆகிய இடங்களில் பெரிய வேறுபாடு இன்றி பாம்புகள் மனிதர்களை கடித்துள்ளன. நகரங்களைப் பொறுத்தவரை தங்களின் வாழிடத்திற்காக பாம்புகள் நகர்ந்துசெல்லும்போது குறுக்கே வரும் மனிதர்களை கடிக்கின்றன. கிராமத்தில், மலம் கழிக்க செல்லும் பெண்களை பெரும்பாலும் தீண்டுகின்றன.  வாரத்திற்கு ஒருமுறை பாம்புகள் உணவு உண்கின்றன. அப்படி கிடைக்கும் உணவும் மனிதர்களின் தலையீட்டால் கிடைக்காமல் போகும்போது பாம்புகள் ஆவேசம் கொள்கின்றன. மனிதர்களை கடிக்கின்றன. என்ஹெச்பி தகவல்படி, இந்தியாவில் தமிழ்நாடு பாம்பு கடியால் மனிதர்கள் இறப்பதில் இரண்டாவது இடத்தைப் பிடித்துள்ளது.  ஏ...

மேற்கு நாடுகள் ஹூவாவெய் மீது நடத்திய வன்ம தாக்குதல்!

படம்
  ஹூவாவெய், உலகளவில் முக்கியமான தொலைத்தொடர்பு சேவை நிறுவனம். சிறந்த நிறுவனங்களோடு இணைந்து பணியாற்றியும் வந்தது. ஆனாலும் அதன் பூர்விகம் சீனா என்பதை யாரும் மறக்கவில்லை. இதை ரென் உணர்ந்தபோது நிறுவனத்தின் பெயரை ஊடகங்கள் வெறுப்புடன் உச்சரித்துக்கொண்டிருந்தனர்.   2005ஆம் ஆண்டு சீனாவில் ஹூவாவெய் நிறுவன அலுவலகத்தில் வேலை செய்த பணியாளர் மூளை அழற்சியால் இறந்துபோனார். உடனே அந்த விவகாரத்தை கையில் எடுத்த ஊடகங்கள், அய்யகோ மெத்தை கலாசாரம் தொடங்கிவிட்டது. அதனால்தான் இப்போது ஒரு உயிர் போய்விட்டது என கூக்குரலிடத் தொடங்கின. மேலும் விவரங்கள் தெரியவேண்டுமா? விளம்பரத்திற்கு பிறகு பாருங்கள் என ஸ்க்ரோல் செய்திகள் போட்டன.   ஹூவாவெய் நிறைய விஷயங்களில் மாறியிருந்தது. ஆனால் கலாசாரம் சார்ந்த விஷயங்களில் பெரிய மாற்றமில்லை. காரணம், ரென்னின் ராணுவப்பணிதான். முன்னமே ரென் சில கொள்கைகளை பின்பற்றுகிறார் என குறிப்பிட்டிருந்தோம். அது வேறொன்றுமில்லை. ராணுவத்தில் இருக்கும் முக்கிய கொள்கையான கீழ்படிதல். அந்த இயல்பு இல்லாமல் ராணுவத்தில் ஒருவர் வேலை செய்யமுடியாது. மேலதிகாரியின் உத்தரவுக்கு கீழ்ப்படிந்தே ஆகவேண்டும...

கோவிட் இறப்புகள் இந்தியாவில் அதிகமா?

படம்
  இந்தியாவில் 47 லட்சம் மக்கள் கொரானாவால் பலியானார்கள் என்பதை உலக சுகாதார நிறுவனம் கண்டுபிடித்து சொல்லியிருக்கிறது. இது எந்த நாடுகளையும் விட அதிகம் என்பதால், பதறிப்போன இந்தியா, இதனை அப்படியெல்லாம் கிடையாது என ஒரே பேச்சாக முடிவாக மறுத்துள்ளது. உண்மை என்ன என்று டைம்ஆஃப் இந்தியா செய்தியை வெளியிட்டுள்ளது.  2020 -2021 காலகட்டத்தில் இந்தியா 47.4 லட்ச மக்களை இழந்துள்ளது என உலக சுகாதார நிறுவனம் தனது ஆவணங்களின்படி கூறியுள்ளது. இதற்கு அடுத்த நிலையில் ரஷ்யா உள்ளது. இந்த நாடு, 10.7 லட்ச மக்களை நோய்க்கு பலி கொடுத்துள்ளது. இதற்கு அடுத்த நிலையில் இந்தோனேஷியா, அமெரிக்கா ஆகிய நாடுகள் வருகின்றன.  லத்தீன் அமெரிக்கா, கிழக்கு ஐரோப்பா குறிப்பாக உக்ரைன், போலந்து, ரோமானியா ஆகிய நாடுகளில் மக்களி இறப்பு சதவீதம் இந்தியாவை விட அதிகம். இந்தியாவின் மக்கள்தொகையோடு ஒப்பிட்டால், உலக சுகாதார நிறுவனம் கூறும் இறப்பு எண்ணிக்கை குறைவு.  இதனை எப்படி கணக்கிடுகிறார்கள்? நூறு லட்சத்திற்கும் அதிகமாக மக்கள்தொகை கொண்ட நாடுகளை பட்டியலிட்டுக்கொள்ளவேண்டும்.  அடுத்து அதில் லட்சத்திற்கு எத்தனை பேர் கொரானாவால் இ...