அறிவுப்பற்று - காரீய நச்சு ஏற்படுத்தும் ஆரோக்கிய பாதிப்புகள் என்னென்ன? - மிஸ்டர் ரோனி
அறிவுப் பற்று மிஸ்டர் ரோனி காரீய நச்சு, உடல்நலனில் ஏற்படுத்தும் விளைவுகள் என்ன? காரீயம், முன்னர் பெயிண்டுகளில் பயன்பட்டது. காரீயத்தை சேர்த்தால் பெயிண்டில் பளபளப்பு கூடியது. விலையும் மலினமாக இருந்தது. பெயிண்டை பூசி பயன்படுத்திய பாத்திரங்களி்ல காரீயம் அதை பயன்படுத்தியவர்களின் உடலில் மெல்ல சென்று சேர்ந்தது. குறிப்பாக தேநீர், ஒயின், பழச்சாறு, காபி ஆகிய உணவுப்பொருட்களில் காரீய நச்சு கலந்தது. பேட்டரி தொழிற்சாலை, எரிபொருள் ஆகியவற்றில் காரீய வேதிப்பொருள் உண்டு. உடலுக்குள் காரீயம் சென்று சேர்ந்தால், சிறுநீரகம், நரம்பு மண்டலம், எலும்பு மஜ்ஜை ஆகிய பலவீனமடைந்து சேதமடைகின்றன. பெரும்பாலும் இரும்பு குழாய்களில் காரீயம் இருந்து உடலுக்குள் தொடர்ச்சியாக செல்வது பல்வேறு ஆய்வுகளில் கண்டறியப்பட்டுள்ளது. அதிகளவு காரீயம் உடலுக்குள் போனால் கைநடுக்கம், மனநோய்கள், மனநிலையில் மாற்றங்கள் ஏற்படும். குழந்தைகளுக்கு காரீய பாதிப்பால், நரம்புமண்டலம் பாதிக்கப்படுகிறது. கி.மு 150இல் ரோமப் பேரரசு காலத்தில் காரீயத்தை அதன் ஆபத்து தெரியாமல் சமையல் பாத்திரங்கள், உணவு, மரு...