இடுகைகள்

ஆதி லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

காதலை ஆயுதமாக்கி மோசடி செய்யும் தில்லாலங்கடி பெண்! நீ எவ்வரோ தெலுங்கு

படம்
      நீ எவ்வரோ தமிழில் யாரோ இவன் கண் தெரியாத செஃப் கல்யாண். 12 டேபிள்ஸ் என்ற உணவகத்தை வெற்றிகரமாக நடத்தி வருகிறார். அவரை சிறுவயது தோழியான அனு காதலித்து வருகிறாள். ஆனால் அவள் மேல் கல்யாணுக்கு பெரிய ஈர்ப்பில்லை. அந்த நேரத்தில் கல்யாணின் உணவகத்திற்கு வெண்ணிலா என்ற பெண் வருகிறாள். சாலையில் இருக்கும் வயதானவர் ஒருவருக்கு உணவு கேட்கிறாள். சில நாட்களின் சந்திப்பில் அவளை கல்யாணுக்கு கல்யாணமே செய்துகொள்ளலாம் என்று நம்பிக்கை பிறக்குமளவு பிடித்துவிடுகிறது. அப்போது பார்த்து கடனுக்காக அவளை சிலர் மிரட்டுகிறார்கள். பணம் கொடுத்து அவளை மீட்கலாம் என்று நினைக்கும்போது கல்யாணுக்கு விபத்து நேர்கிறது. விபத்து காயங்களுக்கு சிகிச்சை அளிக்கும்போது, கல்யாணுக்கு கண்பார்வையும் மீள்கிறது. எப்படி வெண்ணிலாவை அவன் மீட்கிறான் என்பதுதான் கதை. ஆதி(கல்யாண்) நடிக்கும் படத்தை நிச்சயமாக பார்க்கலாம் என்ற நம்பிக் கை இந்த முறையும் சோடை போகவில்லை. இதில் ரித்திகா சிங்கிற்கு பெரிய வாய்ப்பு இல்லை, முழுக்க டாப்சி பானுவுக்குத்தான் வரிந்து கட்டி நடிக்கும் வாய்ப்பு. அதையும் அவர் நன்றாக பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். இரட்டை அர்த்த போலீ

பெட்டிங் அப்பாவைக் காப்பாற்றும் குடும்ப காதல் காவியம் - ஜோடி!

படம்
ஜோடி - தெலுங்கு இயக்கம் விஸ்வநாத் அரிகெலா ஒளிப்பதிவு விஸ்வேஸ்வர் எஸ்.வி இசை - பானி கல்யாண்  ஆதி சாய்குமார் - ஷ்ரத்தா ஸ்ரீநாத், நரேஷ், கொல்லப்புடி மாருதி ராவ்   ஆஹா! ஆதி, ஷ்ரத்தா, நரேஷ், கொல்லப்புடி மாருதிராவ், பானி கல்யாண் இசை ஆகியவற்றைச் சொல்லலாம். ஐயையோ! அடிக்கடி காணாமல் போகும் வில்லன் அவினாஷ். கதையில் பெரும்பாலான கதாபாத்திரங்கள் பணத்தை மட்டுமே தடையாக வாழ்வில் எதிர்கொள்ளுவது. மெலோடிராமா கதை. சிலசமயம் படம் பார்க்கிறோமா இல்லை சீரியல் பார்க்கிறோமா என்று தோன்றுகிறது. கிரிக்கெட் பெட்டிங்கால் விளையும் விபரீதங்கள், பலியாகும் உயிர்கள், பிரச்னைதான். அதற்குள் காதலை நுழைத்திருக்கிறார்கள். அப்போதுதானே அழகான பானி கல்யாணின் பாடல்களை அங்கு வைக்க முடியும். ஓகே. புர்ர கதா படத்திற்கு இந்தப்படம் எவ்வளவோ தேறலாம். ஆதி முன்னேறி வர வாய்ப்புள்ளது. என்ன முடியுமோ அந்தளவு செய்திருக்கிறார். நரேஷ், ஆதி இருவருக்குமிடையேயான காட்சிகள் நன்றாக வந்துள்ளன. ஷ்ரத்தா - ஆதி காதல் காட்சிகள் ஆஹா சொல்ல வைக்கின்றன.  உறவுகள் முக்கியம், அவர்களுக்காக நேரம் செலவிடவேண்டும் என்கிற மெசேஜ் அ

சூப்பர் கான்செப்ட் ஆனால் படம் தேறலையே - புர்ர கதா படம் எப்படி?

படம்
புர்ர கதா - தெலுங்கு டைமண்ட் ரத்னபாபு இசை சாய் கார்த்திக் ஒளிப்பதிவு சி ராம் பிரசாத் ஆஹா! படத்தின் கான்செப்ட் மட்டும்தான். இரண்டு மூளைகள் கொண்ட ஒருவர். படத்தின் தலைப்பு கூட ஆந்திரம், தெலுங்கானாவில் நடைபெறும் இரண்டுபேர் நடத்தும் கூத்தைக் கூறுகிறதுதான். சாய் கார்த்திக்கின் இசை, பாடல்கள்  எப்போது வந்தாலும் கேட்க வைக்கிறது. ஆதி சாய்குமாரின் தோழி, காயத்ரி குப்தா கதாபாத்திரம் புதிது. காரணம், ஒரு ஆணோடு எப்போது நான்கு நண்பர்கள் இருப்பார்கள். இங்கு ஆதியோடு நான்கு பெண்கள் இருக்கிறார்கள். ஆனால் காமெடி வரவேயில்லை. என்ன செய்வது? பிரியதர்ஷி அல்லது ராகுல் ராமகிருஷ்ணனை வைத்திருந்தாலாவது காமெடியில் பிழைத்திருக்கலாம். படத்தில் ஒரே ஆறுதல், ராஜேந்திர பிரசாத்தின் நடிப்பு. இரு மகன்களின் வேறுபட்ட குணாதிசயங்களோடு போராடி முடிந்தவரை காமெடி செய்கிறார்.  மற்றபடி பிற விஷயங்கள் எதுவே வேலைக்காகவில்லை. ஐய்யோடா! வில்லன் கதாபாத்திரம் அபிமன்யூ சிங். விகாரி என்ற கேரக்டரில் வருகிறார். படத்தில் அடிக்கடி உள்ளேன் ஐயா சொல்லும் வாய்ப்புத்தான் இவருக்கு கிடைத்திருக்கிறது. இருமூளைகள் கான்ச