இடுகைகள்

முகாம் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

சீனாவில் இஸ்லாமிய தீவிரவாதம்

படம்
            சீனாவில் இஸ்லாமிய தீவிரவாதம் சீனாவுக்கு, இஸ்லாமிய தீவிரவாதம் என்பது பெரிய பிரச்னையாக இருந்தது. குறிப்பாக, ஷின்ஜியாங் என்ற பகுதியில் பெருமளவு உய்குர் இன முஸ்லீம்கள் வாழ்ந்து வந்தனர். இவர்களுக்கு தாலிபன், பிற இஸ்லாமிய பிரிவினைக் குழுக்களோடு தொடர்பு இருக்கிறது என சீன அரசு சந்தேகப்பட்டது. தீவிரவாதம், பிரிவினைவாதம், வன்முறை ஆகியவற்றை அழிக்க ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பு என்பதைத் தொடங்கியது. இதில் ரஷ்யா, கசக்கஸ்தான், உஸ்பெகிஸ்தான்,தஜிகிஸ்தான் என பல நாடுகள் சேர்க்கப்பட்டன. தீவிரவாத எதிர்ப்பு முகமைக்கான தலைமை அலுவலகம் சீனாவில் அமைக்கப்பட்டது. பிராந்திய அலுவலகங்கள் உறுப்பினர் நாடுகளில் அமைந்தன. தொடக்க காலத்தில் இந்தியாவை இதில் இணைத்துக்கொள்ள சீனா பெரிதாக ஆர்வம் காட்டவில்லை. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் மூலம் ரஷ்யாவின் உறவைப் பெற்று மத்திய ஆசியாவில் தனது ஆதிக்கத்தை பெருக்கிக்கொள்ள நினைத்தது. ரஷ்யா, சீனாவின் அமைப்பில் இந்தியாவை உள்ளே கொண்டு வர நினைத்தது. அன்று பாகிஸ்தான், இரான், மங்கோலியா இலங்கை ஆகிய நாடுகளும் சீனாவுடன் இணைந்துகொள்ள ஆர்வம் காட்டின. நவீன க...