இடுகைகள்

ஆரோன் பெக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

ஃப்ராய்டின் உளப்பகுப்பாய்வு கொள்கை மீது சந்தேகப்பட்ட உளவியலாளர்!

படம்
  உளவியல் உலகில் இரண்டு ஆளுமைகள் முக்கியமானவர்கள் ஒருவர் இவான் பாவ்லோவ், அடுத்து, சிக்மண்ட் ஃப்ராய்ட். இவர்களின் உளவியல் சிகிச்சை முறைகள் வேறுபட்டவை. சிக்மண்ட் ஃப்ராய்டின் முறைகள் நோயாளியை அடிப்படையாக கொண்டவை. இந்த முறையில் முறையாக ஆய்வுப்பூர்வ கருத்து சிந்தனை ஒன்றை உள்ளதாக கூறமுடியாது. நிரூபிக்கவும் முடியாது. இவான் பாவ்லோவின் முறைகளில் ஆய்வு நிரூபணம் உண்டு. தொடக்க கால உளவியலாளர்கள் கூறிய தத்துவம் சார்ந்த விளக்கங்களை பின்னாளில் வந்த உளவியலாளர்கள் ஏற்கவில்லை. காரணம், அவர்களுக்கு ஆய்வுப்பூர்வ காரணங்கள், விளக்கங்கள் தேவைப்பட்டன.  உளவியல் பல்வேறு வடிவங்களில் பரிணாம வளர்ச்சி பெற்றது. அதில்  உளப்பகுப்பாய்வு, தன்னுணர்வற்ற நிலையை ஆராய்வது என்பது பொதுவான அம்சமாக இடம்பெற்றது. இதை கேள்வி கேட்டவர்களில் ஆரோன் பெக்கும் ஒருவர். 1953ஆம் ஆண்டு உளவியலாளராக படித்து பணியாற்றத் தொடங்கினார். அப்போது சோதனை உளவியல், மனதின் நிலைகளை ஆராயத் தொடங்கியது. இதை அறிவாற்றல் புரட்சி என உளவியல் வட்டாரத்தில் கூறினர். உளவியல் பகுப்பாய்வு படித்துவிட்டு பணிக்கு வந்தாலும் பின்னாளில் அதன் உண்மைத்தன்மை பற்றிய சந்தேகம் வந்துவிட்