இடுகைகள்

செய்திக்கட்டுரை 2021 லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கண்ணாடிக்கு மாற்றாக இயற்கையில் கிடைக்கும் மர இழை நுட்பம்!

படம்
  கண்ணாடிக்கு மாற்றாக பசுமைத் தீர்வு! அமெரிக்காவின் மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள், கண்ணாடியைப் போன்ற  ஒளி ஊடுருவும்  தன்மையில்  இருக்கும் மர இழைகளை  உருவாக்கியுள்ளனர்.  தற்போது, நவீனமாக கட்டும் கட்டடங்களுக்கு மெருகூட்டுவதாக கண்ணாடியே பயன்படுகிறது. இதனை ஜன்னல்களுக்கு மட்டுமல்லாமல் கட்டடம் முழுக்கவே பயன்படுத்தி புதுமையாக கட்டுமானங்களை உருவாக்கி வருகின்றனர். அழகாக இருந்தாலும் ஆற்றல் அதிகமாக செலவழித்து உருவாக்கப்படுவதும், எளிதாக மறுசுழற்சி செய்யமுடியாத தன்மையும் இதன் முக்கியமான பாதக அம்சங்கள்.  அமெரிக்காவிலுள்ள மேரிலேண்ட் பல்கலைக்கழக ஆராய்ச்சியாளர்கள் இதற்கான தீர்வை மரத்திலிருந்து கண்டுபிடித்துள்ளனர். கண்ணாடியைப் போன்றே  ஒளி ஊடுருவும் மர இழைகளை  சோதனையில் கண்டுபிடித்துள்ளனர். இந்தச் சோதனை மூலம் இயற்கைச் சூழலுக்கு பாதிப்பு வராதபடி மர இழைகளை பக்குவப்படுத்தி கண்ணாடி போலாக்கி வீடுகளில் பொருத்த முடியும். கண்ணாடியில் ஒளி ஊடுருவும். ஆனால் மரத்தில் ஒளி ஊடுருவமுடியாதே அதனை எப்படி கண்ணாடியாக பயன்படுத்துவது என பலரும் நினைப்பார்கள். இதற்கு முக்கியமான காரணம், மரத்திலுள்ள லிக்னின், செல்லுலோஸ்