இடுகைகள்

டைலன் டாக் லேபிளைக் கொண்ட இடுகைகளைக் காட்டுகிறது

கணவரில்லாத கைம்பெண்ணான ஷெல்லி, அவளது மகனை வேட்டையாட முயலும் மர்ம பூதங்கள்!

படம்
டைலன் டாக் வேட்டையாடும் - சட்டைப்பையில் சாவு லயன் முத்துகாமிக்ஸ் - வி காமிக்ஸ் விலை ரூ.90 டைலன் டாக் என்பவர் டிஒய்டி 666 எனும் ஃபோக்ஸ்வேகன் போலோ காரில் வரும் அமானுஷ்ய டிடெக்டிவ். இவரது முக்கிய வேலை. ஆவிகளை வேட்டையாடுவது. அல்லது ஆவி என்று வேடமிட்டு மனிதர்களை கொல்பவர்களை அடையாளம் கண்டு கைது செய்வது...டைலன் டாக் - டிடெக்டிவ், க்ரௌச்சோ அவரது உதவியாளர். இவர்கள்தான் பெரும்பாலும் கதையில் இருப்பார்கள். மீதி வரும் பாத்திரங்கள் எல்லாமே வரும் போகும். டைலன் டாக்கின் போலீஸ் இன்ஸ்பெக்டர் ஒருவர் எப்போதும் வருவார்.  ஷெல்லி, தனது ஒரே மகனுடன் வீட்டில் வாழ்ந்து வருகிறாள். அவளுடைய கணவர், ஜாக். சில ஆண்டுகளுக்கு முன்னர் தற்கொலை செய்து இறந்து போயிருக்கிறார். அவர் ஏன் இறந்துபோனார், எப்படி இறந்துபோனார் என்பதே மர்மம்தான். இந்த காமிக்ஸ் தொடங்குவது, ஷெல்லி வீட்டில் தனது ஃபிரிட்ஜில் தற்கொலை செய்துகொண்ட கணவர் ஜாக்கின் தலையைக் காண்கிறார். பயந்து நடுங்குகிறார். ஷெல்லியின் மகன் டேன்னி, இவன் வீட்டுக்குள் மணலைக் கூட்டி விளையாடுகிறான். அதில் இருந்தும் ஏதோ மணல் பூதம் போல எழுகிறது. ஷெல்லிக்கு ஒன்றும் புரிவதில்லை. இதனால...

ஆன்மா இல்லாத அரக்கனை எதிர்கொள்ளும் டைலன் டாக்கின் போராட்டம்! - இது கொலையுதிர் காலம்

படம்
  டைலன் டாக் சென்னை புத்தகத்திருவிழா 2021 நந்தனம் ஒய்எம்சிஏ டைலன் டாக் துப்பறியும் இது கொலையுதிர்க்காலம் ஆக்கம் - செர்ஜியோ போனெல்லி தயாரிப்பு சன்ஷைன் லைப்ரரி டைலன் டாக் இங்கிலாந்தில் 18ஆம் நூற்றாண்டில் நடைபெறும் கதை. இதில் முதல் காட்சியே டெர்மினேட்டர் படம் போல அதிர வைக்கிறது. முரட்டு மனிதர் அலுவலகம் ஒன்றுக்குள் வந்து ஹண்ட் என்பவரைப் பற்றி கேட்டு அவரை  சந்திக்க அனுமதி கேட்கிறார். அப்பாயின்ட்மெண்ட் இல்லாதவர் என்பதால் அவரை அனுமதிக்க முடியாது  என வரவேற்பறைப் பெண் சொல்ல, அந்த மர்ம மனிதர் ஹண்ட் என்று சொல்லியபடி உள்ளே செல்கிறார்.  பாதுகாப்பு அதிகாரிகள் வருவதற்கு முன்னரே ஹண்டை வேட்டையாடத் தொடங்கிவிடுகிறார் அவர். இதில் அலுவலகமே ரத்தக்களறியாகிறது. யார் இந்த மனிதர், அவருக்கும் ஹண்ட் என்பவருக்கும் என்ன தொடர்பு என்பதுதான் கதையின் அமானுஷ்ய புள்ளி.  டைலன் டாக் டைலன் டாக்கைப் பொறுத்தவரை கதையில் சண்டைகளை விட நுணுக்கமான மூளை விளையாட்டும், விதியின் காய்நகர்த்தல்களும் , உணர்ச்சிகரமான காட்சிகளும் நிறைந்திருக்கும். இந்த நூலிலும் புராணகால சம்பவம் ஒன்று ஜெர்மனியிலிருந்து தொடங்கி இங்கில...